பூச்சி 138: பெயரைச் சொல்ல வெட்கம்

ஐயா,

தாங்கள் மேற்படி புத்தகத்தை (சுஜாதா எழுதிய “கடவுள்”) விமர்சனம் செய்யலாம். உங்கள் கணிதம் ,இயறபியல் படித்த நண்பர்கள் உதவியுடன். கனமான கருத்துக்கள், சிந்தனையைத் தூண்டக்கூடியது்

வருங்கால தொழிலாளர்கள் என்ற தலைப்பில் சுஜாதா எழுதியிருப்பதாவது:

இந்த எதிர்காலம் இந்தியாவுக்கு எப்போது வரும்?

எப்படிபட்ட எதிர்காலம்?

1 வேலை என்பது விரும்பினபோது எல்லோருக்கும் கிடைப்பது

2 நமக்கு இருக்கும் திறமைக்கு அது எந்தத்  திறமையாக இருந்தாலும் சரி, அதற்கு ஏற்ப ஒரு வேலை கிடைப்பது

3வேலை எப்போதும்  சுவாரசியமாக இருப்பது.

இந்தியாவில்  இந்த நிலைஎப்போது வரும் என்று கேட்பின் இந்த நாடு சில சௌகரியமான அம்சங்களாக பிரிய வேண்டும்

கர்னாடகம், தமிழ்நாடு, ஆந்திரம் (அப்போது), பஞ்சாப் போன்ற மாநிலங்கள் யாவும்

ஜப்பானை விட அதிகப் பரப்பளவும் ஜனத்தொகையும் கொண்டவை

இவை அனைத்தும் தனிப்பட்ட பிரதேசங்களாக நிச்சயம் பிரிந்துவிடும் .இந்தப் பிரிவைப் பற்றி நாம் பயப்பட வேண்டியதில்லை. இப்போது முண்ணாள் சோவியத் யூனியனாகவும்

ஐரோப்பிய கண்டத்திலும் நடக்கும் நிகழ்சிகள் இதற்கு முகமன் கூறுகின்றன.

ஒவ்வொருமாநிலமும் பிரிந்த பின் அவை கலாச்சாரத்திலும் இனத்திலும் ஒன்றுபட்டு 

செங்குந்தர், நாடார், ஐயங்கார்,செட்டியார் போன்ற பிரிவினைகள் இல்லாமல் 

ஜப்பானியர் என்பது போல் தமிழன் என்கின்ற ஒருமை கிடைப்பது இந்த மாறுதல்களுக்கு

முதல்தேவை.

என் கணிப்பில் அதாவது சுஜாதாவின் கணிப்பில் அது நிகழ இன்னம் 37 வருடங்கள் ஆகும்

முதல் பதிப்பு டிசம்பர்2006

எழுதியவர் ஐயங்கார் ஆதலினால் தப்பித்தார்

பாலா

என்னை விட வயதில் மூத்த பாலா அவர்கள் என் எழுத்தை மிக உன்னிப்பாக வாசித்து உடனுக்குடன் இரண்டு மூன்று கடிதங்களாவது எழுதி விடுவார்.  மாதாமாதம் சந்தாவும் வந்து விடும்.  முந்தாநாள் நீங்கள் அனுப்பிய பணம் கிடைத்தது சார், மிக்க நன்றி. 

பாலா எழுதும் ஒவ்வொரு கடிதத்தையும் மிக கவனமாக வாசிப்பேன்.  நேரமின்மை காரணமாக பதில் எழுதுவதில்லை.  ஆனால் மேற்கண்ட கடிதத்தை இந்தப் பூச்சியிலேயே பிரசுரித்து பதில் எழுதலாம் என்று தோன்றியது.  பாலா குறிப்பிடும் நூல் சுஜாதாவின் கடவுள்.  இதையெல்லாம் மாணவர்கள்தான் படிக்க வேண்டும்.  அவர்களுக்கோ படிக்கும் பழக்கம் போய் விட்டது.  படிக்கும் பழக்கம் உள்ளவர்களோ ஆங்கிலத்தில்தான் படிக்கிறார்கள்.  உலகமெல்லாம் கொரோனாவில் மக்கள் கொத்துக் கொத்தாய் செத்துக் கொண்டிருக்கும்போது ஃப்ரெஞ்சுக்காரன் கொரோனா என்பது ஆண்பால் அல்ல, le corona என்று எழுதுவது மொழிக் கொலை, la corona என்று எழுதுங்கள் என்று எல்லோரிடமும் சொல்லிக் கதறிக் கொண்டிருக்கிறான்.  அந்த மொழி வளருமா, இங்கே படிக்கவே ஆள் இல்லாத தமிழ் வளருமா?  எழுத்தாளர்களுக்கே தமிழ் எழுதத் தெரியவில்லை.  எக்கச்சக்கமான பிழைகள்.  எக்கச்சக்கம்.  எண்ணி மாளவில்லை.  வரிக்கு வரி பிழைகள்.  யாரும் அது பற்றிக் கவலையே படுவதாகத் தெரியவில்லை. 

நான் சுஜாதாவை வாசிக்கும் நிலையைக் கடந்து விட்டேன்.  ஏன் எப்போதும் எல்லோரும் என்னிடம் சுஜாதா பற்றியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?  இன்னமும் நான் படிக்க வேண்டிய தி. ஜானகிராமன் புத்தகங்கள் இருக்கின்றன.  நகுலன் புத்தகங்கள் இருக்கின்றன.  பழந்தமிழ் இலக்கியங்கள் இருக்கின்றன.  ஏன் நான் சுஜாதாவைப் படிக்க வேண்டும்?

கடந்த வாரம் நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல் இது:

1.The Human Comedy – Honore de Balzac

2. 62: A Model Kit – Julio Cortazar

3. The Golden Cockerel and Other Writings – Juan Rulfo

4. A Distant Father – Antonio Skarmeta

5. The Eagle’s Throne – Carlos Fuentes

6. Adam in Eden – Carlos Fuentes

7. The Old Gringo – Max Gilbert

8. Sex, The Self and The Sacred: Women in the Cinema of Pier Paolo Pasolini

9. Anti-Oedipus : Gilles Deleuz & Felix Guattari (இந்தப் புத்தகம் என்னிடம் போட்டோகாப்பி எடுத்த தனிக் காகிதங்களாகவே முப்பது ஆண்டுகளாக இருந்து வருகிறது.  கடந்த வாரம்தான் புத்தகமாக வாங்கினேன்)

10.Xenakis: His Life in Music

11. J.S. Back : A Life in Music

12. Why Read the Classics: Italo Calvino

13. Writers at Work: Paris Review (9 Series) 9 புத்தகங்கள்

14. A Short Walk in the Hindu Kush

15. A Void : Georges Perec

16. The Voyeur : Alain Robbe-Grillet

இதையெல்லாம் நான் படிக்கவா, அல்லது ஜுஜாதா படிக்கவா?  அதிலும் சுஜாதாவும் பாலகுமாரனும் இந்தத் தமிழ்ச் சமூகத்தின் சீரழிவுக்கு எப்படித் தங்களை அறியாமலேயே காரணமாக இருந்தார்கள் என்பதை மாய்ந்து மாய்ந்து கட்டுரை கட்டுரையாக எழுதிய பிறகுமா சுஜாதா புத்தகத்தைப் படிக்கச் சொல்லி யோசனை தருகிறீர்கள்? 

மேற்கண்ட பட்டியலில் உள்ளது மட்டும் அல்ல, சுமார் நூறு புத்தகங்களை கடந்த இரண்டு மாதங்களில் வாங்கிக் குவித்திருக்கிறேன்.  அந்தப் பெயர்களையெல்லாமே இங்கே எழுதலாம்.  ஆனால் காலம் மிகவும் அசிங்கப்பட்டுக் கிடக்கிறது.  மூன்று வயதுக் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொல்லும் தேசம் இது.  இதே அவலமும் அசிங்கமும் எழுத்துத் துறையிலும் நிலவுகிறது.  தொழுகையின் அரசியல் என்று ஒரு கட்டுரை.  தாஹர் பென் ஜெலோனின் The Blinding Absence of Light என்ற நாவலைப் பற்றியது.  அந்த நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்படுகிறது.  என்னுடைய கட்டுரையைப் படித்த பிறகுதான் அந்த நாவல் பற்றிய அறிமுகமே இங்கே கிடைக்கிறது.  இல்லாவிட்டால் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு அந்த நாவல் இங்கே தெரியப் போவதில்லை.  ஆனால் இதெல்லாம் எனக்குத் தெரியாது.  நான் அந்த நாவலைத் தமிழில் பார்த்ததும் ரொம்ப ஆசையாக ஆ, நம்மைப் போலவும் இன்னொரு படிப்பாளி இருக்கிறார் போலிருக்கிறதே என்று ஒரு குழந்தையைப் போல் களிப்புடன் கேட்டேன்.  அவரோ அந்த நூல் என்னுடைய மேற்படி கட்டுரையைப் படித்து விட்டுத்தான் மொழிபெயர்க்கப்பட்டதாகச் சொன்னார்.  ஆனால் என் கட்டுரை பற்றி எங்குமே குறிப்பு இல்லை.  அந்தக் கட்டுரை அந்த நாவலுக்கு ஒரு திறப்பைக் கொடுக்கக் கூடியது.  இப்படியே ஒரு ஐம்பது நூல்கள் என் எழுத்தை ஒரு user’s manual போல் பயன்படுத்தி மொழிபெயர்க்கிறார்கள்.  அதில் ஒரு விமர்சனம் வைத்தால் என்னைக் காட்டு அடி அடிக்கிறார்கள்.  ஏனப்பா, என் பெயரைத்தான் உச்சரிப்பதில்லை என்று வைத்திருக்கிறீர்கள், மற்றபடி என் எழுத்தை user’s manual போல் பயன்படுத்திக் கொள்ளும் நீங்கள் எனக்கு ஒரு வாத்தியாருக்குக் கொடுக்கும் மரியாதையைக் கூடவா தரக் கூடாது?  கூடாது.  காலம் இப்படித்தான் மாறியிருக்கிறது. 

Georges Bataille போன்ற பெயர்களையெல்லாம் நான் அறிமுகப்படுத்தியிருக்காவிட்டால் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு அவர்களின் பெயர் இங்கே தெரிந்திருக்கப் போவதில்லை.  சரி, அதில் ஒன்றும் பெரிய பெருமை கிடையாது.  இதற்கிடையில் ஒரு எழுத்தாளர் பத்து பேட்டி கொடுத்தால் பத்து கட்டுரை எழுதினால் அது அத்தனையிலும் பத்தாயின் பெயர் வரும்.  பத்தாய்தான் அவருடைய ஆசான்.  நான் ஒரு குழந்தை அளவுக்கு வெகுளியானவன்.  பயங்கர உற்சாகமாகி விட்டேன்.  ஆ, என்னைப் போல் ஒருவன் என்று.  அவரிடம் எப்படி பத்தாயைத் தெரியும் என்று ஆர்வமாகக் கேட்டேன்.  ஏனென்றால், ஃப்ரான்ஸிலேயே எல்லோரும் சார்த்தர், கம்யு, ஃபூக்கோ என்றுதான் சொல்வார்களே ஒழிய பத்தாயை யாருக்கும் தெரியாது.  ஆனால் ஃபூக்கோ மட்டும் பத்தாய் பற்றித் தன் ஆசிரியர் மாதிரி குறிப்பிடுவார்.   சக எழுத்தாளர் என்ன பதில் சொன்னார் தெரியுமா, ஆ, சாரூ… எல்லாம் உங்களைப் படித்துத்தான் தெரிந்து கொண்டேன் சாரூ.  அப்போதும் எனக்கு சந்தோஷமே.  ஆனால் சமீபத்தில் அவருடைய ஒரு முன்னுரையைப் பார்த்தேன்.  அதில் அறிஞர் அண்ணாவிலிருந்து அஃக் பரந்தாமன் வரை நன்றி நவிலப்பட்டிருந்தது.  பத்தாய்தான் என் ஆசான் என்ற வழக்கமான வசனமும் இடம் பெற்றிருந்தது.  என் பெயரைத் தேடினேன், காணோம்.  அடப் பாவிகளா!

உடனே சீனியை அழைத்துப் புலம்பினேன்.  இதோ பாருங்கள்.  இந்தப் பயல்களெல்லாம் (வேறு நல்ல திவ்யமான வார்த்தை சொன்னார், அது இங்கே வேண்டாம்) உங்கள் பெயரைப் போட்டு உங்களுக்கு ஒரு ————யும் ஆக வேண்டியதில்லை.  ஒரு பயலும் உங்கள் பெயரை எந்தக் காலத்திலும் சொல்லப் போவதும் இல்லை.  ஆனால் வெளியே சொல்லாமல் படிப்பான்கள்.  படிக்கட்டும்.  தொலையட்டும்.  உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்.  இதுதான் அவர் சொன்னதன் சாரம்.  இன்னொரு ஆள் சொன்னார், சாரூ… உங்களிடமிருந்துதான் எழுதவே கற்றுக் கொண்டேன்.  ஆஹா என பரவசப்பட்டேன்.  அவன் நாவல் வந்தது.  இன்றைய தமிழில் யார்யார் எழுதுகிறாரோ அவர் பெயரெல்லாம் இருந்தது.  ஜெயமோகன், எஸ்.ரா. பெயர்கள் இருந்ததெல்லாம் ஆச்சரியம் இல்லை.  சுனில் கிருஷ்ணன், செல்வேந்திரன் பெயரெல்லாம் நன்றியில் கண்டிருந்தது.  வழக்கம்போல் என் பெயரைக் காணோம்.  அதில் கூட எனக்குப் பிரச்சினை இல்லை.  ஆனால் தம்பி, என்னிடம் பேசும்போது மட்டும் ஏன் “உங்களிடமிருந்துதான் எழுதவே கற்றுக் கொண்டேன்” என்று சொல்கிறாய்?  தேவடியாளிடம் போய் இந்த உலகத்திலேயே உன்னைத்தான் ரொம்ப நேசிக்கிறேன் என்று சொல்வதைப் போல் சொல்கிறாயா?  நீ சொல்லும் பொய் ஒன்பது நாழிகை கூட நிற்காது என்பது உனக்குத் தெரியவில்லையா?  நீங்களெல்லாம் எழுத வந்து எதைப் புடுங்கப் போகிறீர்கள்

இதையெல்லாம் ஏன் புலம்புகிறேன் என்றால், நான் என்ன புத்தகங்கள் படிக்கிறேன் என்று சொன்னால் கூட அதை வாங்கிப் படித்து விட்டு ஏதோ தானே கண்டுபிடித்தது போல் மினுக்கிக் கொண்டு அலைவார்கள்.  என்னுடைய வாசிப்பு ஐம்பது ஆண்டுக் கால உழைப்பைக் கொண்டிருக்கிறது.  நீ குறுக்கு வழியில் நுழைகிறாய்.  அது கொஞ்ச காலம்தான் நிற்கும்.  வலுவைத் தராமல் போய் விடும்.  வாசிப்பும் எழுத்தும் அறத்தின் வலுவோடு நிற்பவை.  இங்கே பொய்மை எடுபடாது.   

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai