164. கண்காணாத தீவிலிருந்து ஒரு தேவதையின் குரல்…

சில தினங்களுக்கு முன்பு வளனரசுவோடு பேசிக் கொண்டிருந்த போது அவனுடைய ஊரில் கேப் வெர்தே என்ற ஆஃப்ரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்றும் அவர்களைச் சேர்ந்த ஒருவர், தங்கள் நாட்டின் செஸாரியா எவோரா என்ற பாடகரைப் பற்றிக் குறிப்பிட்டதாகவும் சொன்னான்.  செஸாரியா எவோரா பற்றி இதற்கு முன்னால் கேள்விப்பட்டிருக்கிறாயோ என்று கேட்டேன்.  இல்லை, இதுதான் முதல் முறை என்றான். 

உடனடியாக எனக்கு ஒரு மின் அதிர்வு ஏற்பட்டது.  பின்வரும் சூழ்நிலையைக் கற்பனை செய்து பாருங்கள்.  எங்கோ ஒரு கண்காணாத தேசத்தில் உங்களிடம் ஒருவர் உங்கள் ஊரில் எம்.கே.டி. என்று ஒரு பாடகர் இருந்தார் இல்லையா, அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது எனக்கு.  ஏனென்றால், உங்களுக்கு இளையராஜாவும் எஸ்.பி.பி.யும் எப்படியோ அப்படியே எனக்கு செஸாரியா எவொரா.  அப்போதெல்லாம் என்னிடம் கணினி வசதி கூட இல்லை.  அமெரிக்காவில் வசிக்கும் நண்பர்கள்தான் குறுந்தகடை வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பார்கள்.  அதை நான் என் நண்பரின் அலுவலகம் சென்று அங்கே போட்டுக் கேட்பேன்.  எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு என்று தெரியவில்லை, கோணல் பக்கங்களில் செஸாரியா எவோரா பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். 

செஸாரியா எவோராவை சிஸே என்றுதான் செல்லமாக அழைப்பார்கள்.  Barefood diva என்று உலகம் பூராவும் அறியப்பட்டார்.  மேடைகளில் அவர் காலணி அணிவதில்லை.  சின்ன வயதில் செருப்புப் போடக் கூட வசதி இல்லாமல் போனதால் அதுவே பழக்கமாகி விட்டது என்று சொல்லியிருக்கிறார்.  கபே வெர்தே (Cape Verde) ஒரு போர்த்துக்கீசிய காலனி.  அட்லாண்டிக் பெருங்கடலில் புள்ளி புள்ளியாகத் தெரியும் ஒரு சிறிய தீவுக் கூட்டமே கபே வெர்தே.  மொத்த மக்கள் தொகையே ஐந்தரை லட்சம்தான்.  அதில் மூன்று லட்சம் பேர் அந்தத் தீவுகளில் வாழ்வாதாரம் எதுவும் இல்லை என்று உலகம் பூராவும் பரவியிருக்கிறார்கள்.  அதில் ஒரு கூட்டம்தான் வளனின் ஊரில் இருக்கிறது.   (மஸாசூஸட்ஸ் மாநிலத்தில் மட்டும் 65000 கபே வெர்தேக்காரர்கள் வசிப்பதாக புள்ளி விவரம் சொல்கிறது.  அப்படியானால் பாஸ்டனில் 40,000 பேர் இருக்கலாம்.)

கபே வெர்தே மக்கள் உலக அளவில் எங்கே பரவியிருதாலும் அவர்களுக்கு இயேசுவைத் தவிர இன்னொரு வழிபாட்டு உருவமும் உண்டு.  அது சிஸ்ஸே என்ற செஸாரியா எவோரா.  அந்தப் பெண்மணியால்தான் ஐந்தரை லட்சம் பேர் ஜனத்தொகையைக் கொண்ட அந்தக் குட்டித் தீவுகளை உலகுக்குத் தெரியும். 

சிஸ்ஸே எப்படி வாழ்ந்தார் தெரியுமா?  உலகப் புகழ் பெற்றிருந்த அவர் வீட்டுக்கு யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் போகலாம், சாப்பிடலாம், அவரோடு உரையாடலாம்.  எந்தத் தடையும் எப்போதும் இல்லை.  மேடையில் புகை பிடித்துக் கொண்டேதான் பாடுவார்.  கீழே உள்ள வரைபடத்தைப் பாருங்கள்.  மேலே அல்ஜீரியா, அதன் அருகில் மொராக்கோ, மாலி, செனகல், நைஜீரியா போன்ற மேற்கு ஆஃப்ரிக்க நாடுகள்.  அதன் இடது பக்கத்தில் அட்லாண்டிக் பெருங்கடலில் சிறுசிறு புள்ளிகளாகத் தெரிவதே கபே வெர்தே. 

சிஸ்ஸே போர்த்துக்கீசிய மொழியிலேயே பாடினாலும் ஐரோப்பா முழுவதும் புகழ் பெற்றிருந்தார்.  குறிப்பாக ஃப்ரான்ஸில் அவருக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இருந்தனர்.  பின்வருவது சிஸ்ஸேயின் ஒரு காணொலி.  இதை நீங்கள் கேட்டால் உங்களால் ரசிக்க முடியாது.  ஆரம்பத்தில் அவர் மேடையில் ஏறும்போது கவனியுங்கள், அவர் காலில் ஷூ இல்லாததை.  அந்த ஐரோப்பியக் குளிரிலும் அவர் ஷூ அணியவில்லை. 

போர்த்துக்கீசிய மொழி தெரியாவிட்டாலும் லட்சக்கணக்கான பேர் அவருக்கு ரசிகர்களாக இருந்ததன் காரணம், அவரது குரலின் உணர்ச்சி வேகம்.  குறிப்பாக, இரண்டாவது பாடலான ஸொதாத்-ஐக் கேட்டுப் பாருங்கள்.   

எனக்கு செஸாரியா எவோராவை எப்படித் தெரிந்திருக்கும் என்று இப்போது யோசிக்கிறேன்.  இரண்டு விதமாகத் தெரிந்திருக்கலாம். 

ஒன்று, சிங்கப்பூர் அரவிந்தன்.  அவர் மூலமாக பல இசைக் கலைஞர்களைத் தெரிந்து கொண்டேன்.  அல்லது, ஏதேனும் ஒரு தென்னமெரிக்க நாவலில் சிறையில் அடைபட்டிருக்கும் ஒரு போராளியோ எழுத்தாளனோ செஸாரியா எவோரா பற்றி ஏக்கத்துடன் நினைவு கூர்ந்திருப்பான்.  உடனே அந்தப் பெயரைப் பிடிப்பேன்.  இப்படித்தான் சீலேவின் மகத்தான பாடகனான விக்தர் ஹாரா தெரிய வந்தான்.   மொராக்கோவைச் சேர்ந்த Abdellatif Laabi ஃப்ரெஞ்ச்சில் எழுதிய Rue de retour என்ற நாவலில்தான் விக்தர் ஹாரா அறிமுகமானது.  அது ஒரு சுயசரித நாவல்.  மொராக்கோவில் லாபி ஒரு பேராசிரியராக இருந்தார்.  பொதுவாக வெளிநாடுகளில் புரட்சிகர நடவடிக்கைகளும் சரி, கலாச்சார செயல்பாடுகளும் சரி பல்கலைக்கழகங்களில்தான் தீவிரமாக இருந்து கொண்டிருக்கும்.  லாபியின் நண்பர் – மற்றொரு பேராசிரியர் ஒரு போராளி.  தலைமறைவாகி விட்டார்.  அதனால் அரசியலில் அவ்வளவு ஈடுபாடு இல்லாத அப்புராணியான லாபியைப் பிடித்துக் கொண்டு வந்து விடுவார்கள்.  அடி என்றால் அப்படி ஒரு அடி.  சித்ரவதை என்றால் அப்படி ஒரு சித்ரவதை.  வெறும் நூறு பக்கமே இருக்கக் கூடிய அந்த நாவலில் வரும் சித்ரவதைக் காட்சிகள் மாதிரி நான் வேறு எந்த நாவலிலும் புத்தகத்திலும் படித்ததில்லை.  புராதனமான சீனச் சித்ரவதை முறைகள் என்ற பழமையான புத்தகத்தில் கூட இவ்வளவு விதவிதமான சித்ரவதைகளை நான் கண்டதில்லை.  அரசியலுக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு பேராசிரியரைப் பிடித்து வந்து ஏன் இந்தச் சித்ரவதை?  பேராசிரியரின் மறைவிடம் தெரிய வேண்டும்.  அவ்வளவுதான்.   மறைவிடம் லாபிக்குத் தெரியும்.  ஆனால் இத்தனைச் சித்ரவதைக்கும் ஆள் அசைய மாட்டேன் என்கிறான்.  என்னதான் கொள்கைக்காக உயிரையே கொடுக்கத் தயாராக இருந்தாலும் உடல் தயாராக இருக்காது என்பதைப் புரிந்து கொண்டிருப்பதால்தான் போராளிகள் தங்கள் கழுத்தில் சயனைடைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  பிடிபட்டால் அடுத்த நிமிடம் சயனடை விழுங்கி விடுவார்கள்.  காரணம் அதுதான்.  விரைக்கொட்டையில் மின்சாரத்தைச் செலுத்தினால் கொள்கை, கோட்பாடு எல்லாவற்றையும் மீறி மூளை வாய்க்கு ஆணையிட்டு விடும்.  வாய் சக போராளிகளின் மறைவிடத்தைச் சொல்லி விடும்.  ஆனானப்பட்ட போராளிகளின் கதியே இப்படி என்றால், லாபி வெறும் ஒரு பேராசிரியர்.  அரசியலுக்கு சம்பந்தம் இல்லாதவர்.  ஆனாலும் இத்தனை வதைகளையும் அவரைப் பொறுத்துக் கொள்ளச் செய்வது அவருக்குப் பிடித்த பாடகனான விக்தர் ஹாராவின் கதைதான்.  கையையே வெட்டினாலும் அவனால் சிரித்துக் கொண்டே பாட முடிந்ததே என்று நினைத்துக் கொள்கிறார் லாபி.  எத்தனையோ வதை செய்தும் தன் தோழர்களை அவன் காண்பித்துக் கொடுத்து விடவில்லையே?  நாவலில் லாபி விக்தர் ஹாராவை நினைத்துக் கொள்ளும் இடம் மட்டுமே பத்து பக்கம் வரும்.  லாபி அடிப்படையில் ஒரு ஃப்ரெஞ்ச் கவிஞர்.  அதனால்தானோ என்னவோ அந்த நாவலை ஆங்கில மொழிபெயர்ப்பில் படிக்கும்போதே கவித்துவம் உச்சம் பெற்ற நிலையில் இருந்தது.  பல வாக்கியங்களை எப்படித் தமிழில் சொல்ல முடியும் என்று யோசித்தேன்.  சாத்தியமே இல்லாதிருந்தது.  மொழிபெயர்ப்பாளர்களுக்கு அந்த நாவல் ஒரு சவால்தான்.  ஆனால் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களுக்கு அதெல்லாம் தூசு.  மூன்று நாளில் முடித்து விடுவார்கள்.  கத்தியை எடுத்து கழுத்தைச் சீவ எவ்வளவு நேரம் ஆகும்?  கோவை மொழிபெயர்ப்பு ஃபேக்டரியில் கொடுத்தால் நிமிஷத்தில் ஆயிற்று வேலை.  விரைவில் தமிழில் வரும் பாருங்கள்.  என் வாசகர்கள் யாரும் வாங்கி விடாதீர்கள்.  எச்சரிக்கை. 

இப்படியாகத்தான் செஸாரியா எவோராவும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

மற்றபடி நான் கனிந்து விட்டேன் என்று சொல்லி என் எழுத்தைப் படிக்காமல் போகிறவர்களைக் குறித்து நான் கவலையே படுவதில்லை.  சமீபத்தில் கூட ஜெயமோகனின் கட்டுரையைப் பகிர்ந்ததற்காக என்னையும் இந்துத்துவா என்று சொல்லி ஏராளமான வசை கடிதங்கள் வந்தன.  இந்துத்துவா கும்பல் எப்படி ஒரு முட்டாள் கும்பலோ அதை விடப் பெரும் முட்டாள் கும்பலாக இருக்கிறது எதிர்க் கும்பல். 

கனிந்து விட்ட ஒரு நபரால் எட்டரை கோடி மனிதர்களின் வழிபாட்டு உருவமாக இருக்கும் ஒருவர் இறக்கும்போது சக எழுத்தாளர்களை நோக்கி ஒரு சினிமா பாடகன் இறந்ததற்கு ஏன் இப்படிப் பிலாக்கணம் வைக்கிறீர்கள் என்று கேட்க முடியுமா?  கனிந்த ஒருவன் இப்படிச் செய்வானா?  பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு என் ரத்த அழுத்தம் 170 – 140 ஆக இருந்தது.  அதுவே என் உணர்வு நிலைகளை நிர்ணயிப்பதாகவும் இருந்தது.  மாத்திரை எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள்.  ஆனால் அந்த யோசனையை நிராகரித்து விட்டு, தியானம் செய்ய ஆரம்பித்தேன்.  தீவிரமான ஆழ்நிலைத் தியானம்.  சமயங்களில் இரண்டு மணி நேரம் கூடப் போகும்.  இப்போது ரத்த அழுத்தம் 130 – 90.  கோபமும் வருவதில்லை.  இதுதான் நான் கனிந்து விட்டதன் ரகசியம்.  மற்றபடி மாத்திரைகளாலும் தியானத்தினாலும் கோட்பாடுகளையும் ஆளுமையையும் மாற்ற முடியுமா என்ன? உண்மையில் எக்ஸைல் இந்துத்துவ அடியோட்டம் கொண்டது.  காரணம், அதன் கதைசொல்லி அவனுடைய மதத்தில் போய் சரணடைகிறான்.  பிறகு அங்கேயும் தோல்வி மிஞ்சுகிறது.  ஆனால் நம்மூர் இந்துத்துவர்கள் இலக்கியம் என்றால் வீசை என்ன விலை என்று கேட்பவர்கள்.  எனக்குத் தெரிந்த ஒரு இந்துத்துவர் ஜெயமோகனை கம்யூனிஸ்ட் என்று திட்டியது பற்றி எழுதியிருக்கிறேன்.  அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.  ஏனென்றால், அவர் பார்வையில் எல்லா எழுத்தாளர்களுமே கம்யூனிஸ்டுகள்தான்.  இப்போதைய அசோகா காட்டடியாக இந்துத்துவ எதிர்ப்பு நாவல்.  காரணம், கதைசொல்லி ஒரு பௌத்த பிக்கு.  அசோகா காலத்தவன்.  பிராமண மதத்தைச் சாடு சாடு என்று சாடுகிறான்.  கதை அப்படி.  நான் என்ன செய்யட்டும்?  போனால் போகிறது என்று கதையின் கடைசியில்… வேண்டாம், நாவலில் பார்த்துக் கொள்ளுங்கள்.  நேற்று முழுவதும் அமர்ந்து ஒரு முழு அத்தியாயத்தை எழுதி முடித்தேன்.  பார்ப்போம், என்ன நடக்கிறது என்று.

வளன் சொன்ன மாதிரி என் எழுத்துக்களில் காணக் கிடைக்கும் references ஒரு சுரங்கம்.  வினித், வளன் போன்ற இளைஞர்கள்தான் செய்ய வேண்டும்.  ஒருவரே செய்வது சாத்தியம் இல்லை.  ஒரு குழுவாகச் செய்ய வேண்டும்.  திருமணம் முடிவதற்குள் செய்து விடுங்கள்.  திருமணத்துக்குப் பிறகு அம்மிணிகள் நான் வேண்டுமா சாரு வேண்டுமா என்று பிளாக்மெயில் பண்ண ஆரம்பித்து விடுவார்கள்.  வளன் அந்த வகையில் பாக்கியசாலி.  துறவி என்பதால் அந்தப் பிரச்சினை இல்லை.  ஆனால் பொறுப்புகள் அதிகம். 

***

புதுமைப்பித்தன் பேச்சு காணொலி கைவசம் உள்ளது. தேவைப்படுவோர் எழுதுங்கள். அனுப்பி வைக்கிறேன்.

charu.nivedita. india@gmail.com  

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai