11. இசை பற்றிய சில குறிப்புகள் – பொன்னையா பிள்ளை

இரண்டு தினங்களாக இடைவிடாமல் அமர்ந்து கே. பொன்னையா பிள்ளை இயற்றி 1940-ஆம் ஆண்டு வெளிவந்த “தஞ்சை பெருவுடையான் பேரிசை : தான வர்ணங்களும் கீர்த்தனங்களும், ஸ்வர ஸாஹித்தியங்களுடன்” என்ற அரிய நூலைப் படித்துக் கொண்டிருந்தேன்.  நான் இதைப் படித்து எந்தப் பயனும் இல்லை.  இது சங்கீதக் கலைஞர்கள் பயில வேண்டிய நூல்.  ஒவ்வொரு கீர்த்தனத்துக்கும் notations இருக்கின்றன. 

ஓதுவா மூர்த்திகள் மரபில் வந்தவர்களும் முத்துஸ்வாமி தீட்சிதரின் மாணவர்களும், தஞ்சை-திருவனந்தபுரம்-மைசூர் முதலிய சமஸ்தான வித்வான்களும், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் நாட்டிய கைங்கரியப் பரம்பரையில் வந்தவர்களுமான பொன்னையா, சின்னையா, சிவானந்தம், வடிவேலு ஆகிய தஞ்சை நால்வரின் பரம்பரையில் வந்தவர் பொன்னையா பிள்ளை.  அவருடைய முன்னுரை இந்தப் புத்தகத்தின் மிக முக்கியமான அம்சம்.  நம்முடைய சங்கீதக்காரர்கள் அனைவரும் படித்தே ஆக வேண்டிய முன்னுரை அது. 

இந்த அரிய நூலிலிலிருந்து ஒரே ஒரு கீர்த்தனையைத் தருகிறேன்.

சௌராஷ்டிர ராகம் – ரூபக தாளம்.

பல்லவி: ரங்க நாதுடே அந்தரங்க நாதுடே

அனுபல்லவி: மங்களப்ரதம்பு லிச்சு

மஹாதேவுனி ஸகுடே

சரணம் (1)

ஸததமு வானி நாமமே

ஸங்கீர்த்தனமுலு ஜேஸின

ஜனுல ஹ்ருதய கமலமந்து

ஜெலகு சுனுன்னாடே

பதித பாவன பிருதிங்க

பட்டியுன்னாடே ஸத்

கதி இச்சுவாடிதடே

கருட கமன தொரயிதடே

2.

அரவிரி சுருனி ஜனகுடே

அப்ரமேய ஸகுடே

அரஸிசூடதரமு காது

அன்னிமாய புருடே

கிரினி வேல்பு நித்ய ஸூருல

கம்ருத மிச்சினாடே யனி

மொரலிடு சுனு ஸரணம்டே

முந்து நிலசி ப்ரோசுவாடே

(3)

பதஹாரு வேல ஸ்த்ரீலகு

ப்ராணநாது, டிதடே

பரசுராமு கர்வமெல்ல

பங்க பரசினாடே

முதமுமீர பாண்டவுலகு

மோக்ஷ மிச்சினாடே

பரம தயாகருடே ஸ்ரீ

ப்ரஹ்லாத வரதுடே

இந்தக் கீர்த்தனத்தின் பொருள்: ஜீவாத்ம சம்பந்தமாயிருக்கும் பரமாத்மாவே, என் அந்தரங்கத்தில் வசிப்பவனே, உலக முழுதும் நிறைந்தவனே.

சுபங்களைக் கொடுக்கும் சிவனுக்குத் தோழன். எப்பொழுதும் தன் திருநாமத்தைப் பஜிக்கும் ஜனங்களின் ஹ்ருதய கமலத்தில் பிரகாசித்துக் கொண்டிருப்பவனே, திக்கற்றவர்களைக் காப்பவனென்று பிருது அடைந்திருக்கிறவனும், நல்ல கதியைக் கொடுப்பவனும் இவனே.  கருடனை வாகனமாகக் கொண்ட பெருமை பொருந்தியவனும் இவனே.  மன்மதனின் தகப்பன் இவனே.  ஆகாயத்தைச் சிகையாக உடைய சிவனுக்குத் தோழன்.  விசாரிக்குமிடத்தில் சொல்ல முடியாத எல்லா மாயா ரூபங்களுடையவனும் இவனே.  மேரு பர்வதத்தில் வசிக்கும் தேவர்களுக்கும் நித்ய சூரிகளுக்கும் அமிர்தத்தைக் கொடுத்தவனும், தன்னிடம் அடைக்கலம் புகுந்தோரை முன்னின்று காப்பாற்றுபவனும் இவனே.  பதினாயிரம் ஸ்த்ரீகளுக்கு நாயகனாய் இருந்தவனும் இவனே.  பரசுராமனின் கர்வத்தைப் போக்கிய ராமனும் இவனே.  சந்தோஷத்தோடு பாண்டவர்களுக்கு மோட்சமளித்தவனும் இவனே.  மிக்க தயவோடு பிரஹலாதனை ரக்ஷித்தவனும் இவனே.

இந்தக் கீர்த்தனையை ஹைதராபாத் சகோதரர்கள் பாடியது கேட்க இனிமையாக இருந்தது.  அதன் இணைப்பு: