நேற்று வரை இன்றைய ஸூம் நிகழ்ச்சி பற்றி யோசிக்கவில்லை. நேற்றும் முந்தாநாளும் லத்தீன் அமெரிக்க சினிமாவிலேயே மூழ்கியிருந்தேன். 300 பக்க நூல். நான் ஒரு வேலையில் மூழ்கி விட்டால் அது முடிந்தால்தான் அடுத்தது. இடையில் யாரிடமும் பேசுவது கூடக் கிடையாது. தவம் மாதிரிதான். இந்த 300இல் இரண்டு பாகம். முதல் பாகத்தைக் கிட்டத்தட்ட திரும்பத்தான் எழுதினேன் என்று சொல்ல வேண்டும். 1982இல் எழுதிய தமிழுக்கும் இப்போதைய என் தமிழுக்கும் எத்தனை வித்தியாசம். திரும்பவே எழுதினேன் என்ற அளவுக்குத் திருத்தங்கள். அடுத்த பாகம் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு எழுதியதால் ஒன்றும் பிரச்சினை இல்லை. பின்னட்டை ப்ளர்ப் உட்பட தயார் செய்து பதிப்பகத்துக்கு அனுப்பி விட்டேன். இன்று காலைதான் இன்றைய சந்திப்பு பற்றிப் படித்தேன். அதில் பத்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கேள்விக்கும் குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் பேசலாம். ஆனாலும் ஐந்து ஐந்து நிமிடம் என்று முக்கால் மணி நேரம் பேசுவேன். அதில் இரண்டு கேள்விகள் ரொம்ப சுவாரசியம்.
நீங்கள் எங்களுக்கு சிபாரிசு செய்யும் ஐந்து புத்தகங்கள் என்ன?
வெகுகாலமாக நீங்கள் வாசிக்க விரும்பும் புத்தகம் என்ன?
இன்று மாலை ஐந்து மணி. நாவல் நேஷன் அமைப்பினர். விவரங்கள் கீழே.
- Virtual Lit Fest 2021 Inauguration – 4:45 pm IST
- A Conversation with Charu Nivedita – 5.00 pm IST
Check out the event page on our website – https://www.novelnation.org/lit-fest-2021
You can register for the event on the following link – https://www.novelnation.org/event-details
You can also find us on Social Media on
Instagram – https://www.instagram.com/novelnationorg/
Twitter – https://twitter.com/Novelnationorg
Facebook – https://www.facebook.com/novelnationorg