காலணா வெற்றிலையும் ஒரு கப் காஃபியும்… (2)

ஒரு வாசகர் கடிதம்.  அதில் இரண்டு கேள்விகள்.  ஒன்று, துறவி என்று சொல்லிக் கொள்கிறீர்கள்.  ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?  இரண்டு, இப்படி பகிரங்கப்படுத்தி உங்கள் நண்பரைப் புண்படுத்துவதை விட அவரிடம் நேரில்தான் சொல்லியிருக்க வேண்டும். உங்களிடம் வயதுக்குத் தகுந்த முதிர்ச்சி இல்லை.

என் கட்டுரையை இந்த அன்பர் புரிந்து கொள்ளவில்லை.  கையெழுத்து வாங்க வந்த வாசக அன்பரிடம் நான் துறவி என்று சொல்லிக் கொள்ளவில்லை.  அவர் ஐந்து நிமிடம் பேசினார்.  அதில் நான்கு நிமிடம் தனக்கு திருப்பூரில் உள்ள தொழிற்சாலைகள் பற்றியும், இப்போதைய மந்திரி சபையில் தனக்கு உள்ள செல்வாக்கு பற்றியும் பேசினார்.  அதனால் எனக்கு ஒரு சின்ன ஆச்சரியம் ஏற்பட்டது.  நான் ஃபீனிக்ஸ் மால் ஓனர் என்று சொல்லிக் கொண்டு ஜகுவார் காரில் வந்து இறங்கும் ஒரு கோடீஸ்வரர் அதையெல்லாம் என்னிடம் வேறு சொல்லி விட்டு, என்னிடம் நேர தானத்தைப் பெற்றுக் கொண்டு வெறுங்கையோடு வந்து வெறும் கையோடு போனால் நானும் என் அடையாளம் பற்றி யோசிக்கலாம்தானே?  இன்னொருவர், பொள்ளாச்சி மகாலிங்கத்துக்கு அடுத்தபடி என்றேன்.  என்னுடைய ஒரு மணி நேரத்தை தானமாகப் பெற்றுக் கொண்டு போனார்.  ரெண்டு பேரும் கோவை தொழிலதிபர்கள்.  இன்னொருவரும் உண்டு.  வேண்டாம்.  இப்போது நான் கோவையை நாகர்கோவிலுக்கு அடுத்ததாக வைக்க ஆரம்பித்து விட்டேன். 

இரண்டாவது பிரச்சினை, நண்பரிடம் சொல்லியிருக்கலாம்.  சரியான கருத்து.  ஆனால் வாசகர் என் கட்டுரையை சரியாக வாசிக்கவில்லை. நண்பரைச் சந்தித்து ஒரு வருடம் ஆகி விட்டது.  ஒரு வருடத்துக்கு முன்னால் பல முறை நாசுக்காகவும், நேரடியாகவும் நண்பரிடம் இந்த பர்ஸ் விஷயத்தைப் பேசி விட்டேன்.  தொடர்ந்து ஐந்து நாட்களும் நானே பில்லுக்குக் காசு கொடுத்துக் கொண்டிருந்ததால் ஒருநாள் எனக்குப் பைத்தியமே பிடித்து விட்டது.  நாள் பூராவும் இதே சிந்தனை.  இதற்கு என்னதான் வழி?  நண்பரிடம் நேரிலும் சொல்லியாயிற்று.  ப்ளாகிலும் கட்டுரை எழுதியாயிற்று.  ஆமாம், ஒருமுறை இத்தனை வெளிப்படையாக இல்லாமல் நாசுக்காகவும் எழுதி விட்டேன்.  ஆறாவது நாள்.  நானும் நண்பரும் மகா முத்ரா போனோம்.  சாப்பிட்டோம்.  ஆமாம், காஃபி மட்டும் குடிக்கவில்லை.  சாப்பிட்டோம்.  ஐந்து நாட்களாக நான் காசு கொடுத்திருந்தேன்.  ஆறாம் நாள்.  என் மனசெல்லாம் இதே சிந்தனை.  பில் வந்தது.  நானுமே நண்பரைப் போல் கண்டு கொள்ளவில்லை.  நண்பரும் வழக்கம் போல் கண்டு கொள்ளவில்லை.

ரெண்டு பேருமே கண்டு கொள்ளாமல் எழுந்து வந்து விட்டோம்.  அன்று பூராவும் கூட எனக்குப் பைத்தியம்.  முழு மெண்ட்டல் ஆகி விட்டேன்.  மறுநாளும் மகா முத்ரா போனோம்.  ரெண்டு பேரும்தான்.  மறுநாளும் சாப்பிட்டோம். பில் வந்தது. அன்றைய தினமும் அவர் கண்டு கொள்ளவே இல்லை.  நானும் கண்டு கொள்ளவே இல்லை. இன்னிக்கு என்னதான் ஆவுது, பாத்துருவோண்டா ஒரு கை.  மனசெல்லாம் குமுறிக் குமுறி அடிக்கிறது.  ரெண்டு பேரும் பில்லுக்குப் பணம் கொடுக்காமலேயே வெளியே வந்தோம்.  வாசலில் அவரது ஸ்கூட்டர் வரை வந்து விட்டோம்.  அப்போது அந்த சேவகர் தலை தெறிக்க ஓடி வந்தார்.  கையில் பில்.  சார், மன்னிக்கணும்.  பில் செட்டில் பண்ணலை. 

நான் அசையாமல் நின்றேன்.  சாரிப்பா, பேச்சுவாக்கில் வந்து விட்டோம்.  சார் பில் செட்டில் பண்ணுவார்.  (பதினைந்து ஆண்டுகள் மைலாப்பூரில் இருக்கிறேனே, இதைக் கூடக் கற்றுக் கொள்ளவில்லை என்றால் அப்புறம் என்ன?)  நண்பர் பில்லைப் பார்த்து பயந்து விட்டார்.  ”700 ரூ. இருந்தது.  என்னப்பா இது அந்யாயம், எழுநூறு போட்டு இருக்கீங்க?” என்றார் நண்பர். ”முந்நூத்தி அம்பது இன்னிக்கு.  முந்நூத்தி அம்பது நேத்தி சார்.  நேத்தி பில்லும் சேத்தியிருக்கு.”  

“ஓ, ஓ, அவ்ளோ பணம் எண்ட்ட இருக்காது.  சார். உங்ககிட்ட இருந்தா குடுத்துடுங்க.  நான் நாளை தர்றேன்.”

”அடடா, இன்னிக்கு நான் பணமே கொண்டு வர மறந்துட்டனே… என்ன பண்ணலாம் இப்போ?”  என்று பச்சைப் பொய் ஒன்றை அவிழ்த்து விட்டேன்.

சரி, வா என்று உள்ளே போய் அவரது வங்கி அட்டையைத் தேய்த்து பணம் கொடுத்தார்.  மறுநாளிலிருந்து ஒரு சின்ன காஃபி கடையில் காஃபி மட்டும் குடித்துக் கொண்டோம்.  அவரைத்தான் ஒரு ஆண்டு கழித்து சந்தித்து இந்த ரகளை.  இப்போது சொல்லுங்கள்.  இதை நான் எழுதத்தானே வேண்டும்?      

***

சென்ற மாத சந்தாவும் நன்கொடையும் ரொம்பவும் சுருங்கி விட்டது. ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

***

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரங்கள்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai