இமயமலைப் பயணக் குறிப்புகள் : அன்பு

வாசகர் வட்டத்தைச் சேர்ந்த கணேஷ் அன்பு இமயமலைப் பயணக் குறிப்புகளை எழுதத் துவங்கி விட்டார்.  எக்ஸைல் வேலையில் நான் மூழ்கிக் கிடப்பதால் அதை எழுத முடியாமல் இருந்தது.  கணேஷ் என் சுமையைக் குறைக்கிறார்.  அவர் எழுத விட்டதை நான் எழுத முயல்கிறேன்.  இன்னும் இரண்டு நாளில் எக்ஸைலை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன்.  எனக்கு யாரையும் அன்பு, பாசம், அறிவு, நட்பு, தமிழ், விடுதலை, புரட்சி, தியாகம், சுதந்திரம், அழகு என்றெல்லாம் பெயர் சொல்லி அழைக்க … Read more

தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம்? (2)

நினைத்தேன். நினைத்தது போலவே நடந்தது.  அராத்துவின் மகன் ஆழிமழைக் கண்ணனைப் பற்றி எழுதினேனா?  அதைப் படித்து விட்டு ஒரு நண்பர் very weird என்று என் வாசகர் வட்டத்தில் எழுதியிருந்தார்.  எனக்குச் சற்று கோபம் வந்து விட்டது.  ”இதில் weird ஆக எனக்கு ஒன்றும் தெரியவில்லை.  அந்தப் பையன் ஒரு prodigy என்று நினைக்கிறேன்.  அதில் எனக்கு ஒன்றும் ஆச்சரியமும் இல்லை” என்று எழுதினேன்.  உடனே அன்பர் இப்படி பதில் எழுதியிருக்கிறார். thanks for your view … Read more

தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம்?

அராத்துவின் பையன் பெயர் ஆழிமழைக் கண்ணன்.  இப்படியெல்லாம் பெயர் வைக்காதீர்கள் என்று எவ்வளவோ மன்றாடினேன்.  அவர் கேட்கவில்லை.  தாஸ்தாயேவ்ஸ்கி, ப்யூகோவ்ஸ்கி, போர்ஹேஸ் என்றெல்லாம் வெளிநாட்டுக்காரன்கள் பெயர் வைக்கிறார்கள்.  அதை நம் ராமகிருஷ்ணன், போர்ஹே, தாஸ்தாவேஜ்ஸ்கி என்று உச்சரிக்கும் போதுஎவ்வளவு கோபப்படுகிறீர்கள்.  Jodorovsky என்ற பெயரை ஹொடரோவ்ஸ்கி என்றுதான் உச்சரிக்க வேண்டும் என்று எங்களையெல்லாம் எவ்வளவு டார்ச்சர் செய்தீர்கள்…  அதே போல் அவன்களும் என் மகன் பெயரை ஆழிமழைக் கண்ணன் என்று சொல்லட்டும் என்றார் அராத்து. அது சரி, … Read more

இமயம் (12)

சாரு..இசையைரசியுங்கள்…வேண்டாம்என்றுசொல்லவில்லை.. ஆனால்தயவுசெய்துஇப்படிபகிராதீர்கள்… நீங்கள்செய்வதைஎல்லாம்தானும்செய்ய முயன்றுபார்க்கும்உங்கள்தலைமைச்சீடரான உத்தமத் தமிழ் எழுத்தாளர், இமயமலைப்பயணம்மேற்கொள்ளபோகிறாராம்…அதுஅவரது தனிப்பட்ட விஷயம்… பரவாயில்லை.. ஆனால்இசையைப்பற்றிநீங்கள்எழுதவதைப்பார்த்து , அவரும்இசைகளின்வழியேஎன்றோஅல்லது இசையின்ஊடாகதத்துவதரிசனம்என்றோஎழுதஆரம்பித்தால்தமிழகம்தாங்காது… பிச்சைக்காரன் அன்புள்ள பிச்சை, என்னுடைய தலைமைச் சீடரை நான் அங்கீகரிக்கவில்லை.  சகுனி யாரைப் பற்றி எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தான் என்பது உங்களுக்குத் தெரியும்.  உ.த.எ.வுக்கு இயங்கு சக்தியாக இருப்பதே என் எழுத்தும் செயலும்தான் என்கிற போது சந்தோஷம்தான் ஏற்படுகிறது.  ஆனால் பரிதாபமும் ஏற்படுகிறது.  என்னென்னவோ கண்றாவி கதைகளைப் படித்துக் கொண்டு, எங்கெங்கோ போய் தங்கியதற்கான அறை … Read more

இமயம் (11)

சில புகைப்படங்கள் மட்டும் இப்போது.  இவை பற்றி நாளை எழுதுகிறேன்.  புகைப்படங்கள்: கணேஷ்.இதில் கூடாரங்கள் இருக்கும் இடம் பற்றி மட்டும் சொல்லி விடுகிறேன்.  இது தான் லஹௌல் பகுதியின் மரண வெளி.  இங்கே ஒரு இரவு தங்கினால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.  நாங்கள் இங்கே ஒரு இரவும் ஒரு பகலும் தங்கினோம்.