கேரள சாலைவழிப் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு சென்னை திரும்பி விட்டேன். கண்ணூர் மாவட்டத்தில் உள்ள அருவிக்குழி என்ற மலைக்கிராமத்தில் தங்கினோம். கடும் மழை என்பதால் ஒரே ஒரு முறைதான் அருவியில் குளிக்க முடிந்தது. முப்பது ரூபாய்க்கு மீன் சாப்பாடு. மூன்று வகை காய்கறியும், இரண்டு வகை துகையலும், ஒரு தேங்காய்ப் பதார்த்தமும் தருகிறார்கள். எனக்குப் பிடித்த உனக்கலரி (சிவப்பு அரிசிச் சோறு.) பொறித்த மீன் வேண்டும் என்றால் விலை இருபது ரூபாய். அளவு சாப்பாடு அல்ல. வயிறு நிறைய சாப்பிடலாம். ருசி என்றால் அப்படி ஒரு ருசி. ஐந்தாறு முஸ்லிம் பெண்கள்தான் நடத்துகிறார்கள். தமிழ்நாட்டு வாழ்க்கையை நினைத்து மிகவும் நொந்தேன்.
உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் பயிலரங்குக்குப் பணம் அனுப்பிய ஏழெட்டு நண்பர்கள் அவர்கள் பற்றிய எந்தத் தகவலும் தரவில்லை. பணம் மட்டுமே வந்திருக்கிறது. பெயர் கூட முழுமையாகத் தெரியவில்லை. அவர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை அனுப்பினால் நல்லது. நேரில் வருகிறார்களா அல்லது வெளியூரிலிருந்து ஸூம் மூலம் பார்க்கிறார்களா என்றும் தெரியவில்லை. இதுவரை 120 பேர் பெயர் கொடுத்திருக்கிறார்கள். வாசகர் வட்டத்தைச் சேர்ந்த பத்து பேர் மட்டும் பணம் அனுப்பவில்லை. இனிமேல் நினைவூட்டுக் கடிதம் அனுப்ப இயலாது. நேரம் இல்லை.
இதுவரை இந்தியாவில் திரைப்படக் கல்லூரிகளில் கூட பேசப்படாத, விவாதிக்கப்படாத படங்கள் பற்றியும் பேசுவேன். பயிலரங்கம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் ஒன்றரை மணி நேரம் பேசுவேன். படங்களிலிருந்து சில நிமிடங்கள் காண்பிக்கப்படும். நான்காவது பிரிவு தமிழ்ப் படங்கள் ஏன் உலக சினிமா வரைபடத்தில் இன்னும் இடம் பிடிக்க முடியவில்லை என்பது குறித்து அமையும்.
வரும் முப்பதாம் தேதி திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் காலை ஒன்பதரை மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை நடக்கும். மதிய உணவும், தேநீரும் வழங்கப்படும்.
நுழைவுக் கட்டணம்: 2000 ரூ. மாணவர்களுக்கு 1000 ரூ.
தொடர்புக்கு: charu.nivedita.india@gmail.com
தொலைபேசி எண்: 92457 35566 (இந்த எண்ணுக்கு ஜிபே மூலம் கட்டணத்தை அனுப்பலாம்)
வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு: 50 USD
வங்கி விவரம்:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai