சிறந்த மாணவர்

நான் எதையாவது படிக்கச் சொன்னால் இருபத்து நான்கு மணி நேரத்தில் படித்து முடித்து விடும் இரண்டு மூன்று பேர் இருக்கிறார்கள். ஸ்ரீ, அப்துல் (பாண்டி), மஹாதேவன். இப்போது இந்தப் பட்டியலில் சேர்ந்திருப்பவர் சரவணன் சிவன்ராஜா. இவர்களிடம் ஒரு ஒற்றுமை இருக்கிறது. நால்வருமே முப்பது வயதுக்கு உட்பட்டவர்கள். நால்வரில் மூன்று பேர் திருமணம் ஆகாதவர்கள். அப்படிப் பார்த்தால் திருமணம்தான் வாசிப்புக்குத் தடையாக இருக்கிறதோ என்று நினைக்க வேண்டியிருக்கிறது. ஆனால் ஸ்ரீ அதையும் சமாளித்து விட்டாள். பிரார்த்தனையைப் பின் தொடர்ந்து… … Read more

உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் (7)

ஜுன் 30 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை பத்து மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை திருவண்ணாமலையில் உள்ள எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் என்ற தலைப்பில் நான் ஒரு பயிலரங்கம் நடத்த இருப்பது பற்றி நீங்கள் அறிவீர்கள். இடைப்பட்ட எட்டு மணி நேரத்தில் தேநீர் இடைவேளை கால் மணி நேரம், மதிய உணவுக்கு ஒரு மணி நேரம் போக ஆறரை மணி நேரம் பயிலரங்கம் நடக்கும். ஹாலிவுட் சினிமா, ஐரோப்பிய சினிமா, தென்னமெரிக்க … Read more

உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் – 4

ஜூன் 30 அன்று நடக்க இருக்கும் உலக சினிமா பயிலரங்குக்காக நாம் உரையாட இருக்கும் படங்களைப் பார்க்க ஆரம்பித்து விட்டேன். என்ன படங்கள் என்று இப்போதே சொன்னால் ஆர்வம் குன்றி விடும். ஆறு மணி நேரம் பேசுவேன். அந்தப் பேச்சை குறிப்புகள் எடுத்துக்கொண்டு பார்க்க ஆரம்பித்தால் ஒரு ஆண்டுக் காலத்துக்கு நீங்கள் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அநேகமாக இதுவரை அதிகம் கேள்விப்பட்டிராத இயக்குனர்களாக இருப்பார்கள். (சே, இந்த வாக்கியத்தைத் தவிர்க்க வேண்டும் என்று நினைத்தேன். வந்து விழுந்து விட்டது. … Read more

உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் (2)

அண்ணா நூலகத்தில் நான் ஆற்றிய உரையை ஒரு வாரத்தில் பதினோராயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். ஆனால் இப்போதைய காலகட்டம் துரிதங்களுக்கானது. அண்ணா நூலகத்தில் நான் பேசிய ஒன்றரை மணி நேர உரையில் ஒரே ஒரு நிமிடத்தை எடுத்து, அதற்குப் பின்னணி இசை கொடுத்து யாரோ ஒரு நண்பர் ரீல்ஸில் கொடுத்திருக்கிறார். ஒரு வாரத்தில் 80000 பேர் பார்த்திருக்கிறார்கள். அதன் லிங்க் இது: https://www.facebook.com/share/r/9LHi7HiY1Tsi3CcX/?mibextid=MeSgDu அண்ணா நூலகத்தில் உலக சினிமா குறித்து நான் ஆற்றிய உரையின் தொடர்ச்சியாக வருகின்ற ஜூன் … Read more