பாலாவும் நானும்…

பாலகுமாரனுக்கும் எனக்கும் கடந்த பதினைந்து ஆண்டுகளாக மிக நெருங்கிய நட்பு இருந்தது.  பல முறை அவர் என் வீட்டுக்கு வந்திருக்கிறார்.  நானும் அவர் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன்.  என் எழுத்தைப் பற்றி பிரமித்து பிரமித்துப் பேசுவார்.  நீ வா போ தான்.  நான் அவரிடம் சொல்வேன், பாலா என் 25-ஆவது வயதில் வெளியான ஒரு தலைமுறையின் பதினோரு சிறுகதைகள் என்ற தொகுப்பில் வந்த உங்கள் கதை ஒன்றைத் தவிர உங்களுடைய வேறு ஒரு கதையோ நாவலோ நான் படித்ததில்லை … Read more

பாலகுமாரன் – அஞ்சலி

பாலா என்ற சித்த புருஷன் ஜூலை 2016 (பாலகுமாரனின் எழுபதாம் பிறந்தநாள் சிறப்பு மலர் ‘எழுத்துக்கு எழுபது’-வில் வெளியான கட்டுரை) எழுபதுகளின் பிற்பகுதியில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மில்லர்ஸ் ரோட்டில் இருந்த சாந்தி மேன்ஷனில் தங்கியிருந்தேன். ஒரு தலைமுறையின் பதினோரு சிறுகதைகள் தொகுதி வந்திருந்த நேரம். சுப்ரமண்யராஜு, பாலகுமாரன் போன்ற கோபக்கார இளைஞர்களின் காலம். அப்போது கணையாழியில் ஒரு கவிதை படித்தேன். உனக்கென்ன கோவில் குளம் சாமி பூதம்  ஆயிரமாயிரம் இனிமையாய்ப் பொழுதும் போகும் வலப்பக்கம் கடல் மணலை இடப்பக்கம் … Read more

நான் ஏன் மோடியை எதிர்க்கிறேன்? – 1

தினம் ஒரு புத்தகம் என்று நான் பதிவிடும் நூல்களை இதைப் பார்க்க நேரும் நண்பர்கள் யாரேனும் வாங்குகிறீர்களா? அந்த நூல்கள் பற்றி ஒரு வார்த்தையாவது எழுத வேண்டும் என்ற கட்டுக்கடங்காத ஆவலை அடக்கிக் கொண்டே அந்நூல்களின் அட்டைகளைப் பதிவிடுகிறேன். இதுவரை ஒரு நாள் கூட பதிவு வராமல் இருந்ததில்லை என்பதை கவனியுங்கள். இதையே ஒரு 35 வயதுக்கு உட்பட்ட யாரிடமாவது சொல்லியிருந்தால், செய்து கொண்டே வந்து 27-ஆவது நாள் எனக்கு குதத்தில் வலி, அக்குளில் கட்டி என்று … Read more

Marginal Man in UK

லண்டனிலிருந்து கடந்த இரண்டு தினங்களாக பத்து போன் வந்து விட்டது.  amazon.co.uk  என்ற தளத்தில் மார்ஜினல் மேன் புத்தகத்தைத் தேடினால் ஸ்டாக் இல்லை என்று காண்பிக்கிறது என்று எல்லோரும் சொன்னார்கள்.  ஆனால் அமேஸான் யூகேவில் புத்தகம் கிடைக்கிறது.  என்னவென்று பார்த்தால், ஸ்டாக் இல்லை என்று குறிப்பிட்டிருப்பதற்குக் கீழே more buying options என்று குறிப்பிடப்பட்டுள்ளது அல்லவா, அங்கே போய் கிளிக் செய்தால் பல இடங்களில் மார்ஜினல் மேன் கிடைப்பது தெரிகிறது.  நண்பர்கள் அப்படி முயற்சி செய்யும்படி கேட்டுக் … Read more

அன்னையர் தினம்

இன்று அன்னையர் தினம் என்று பேப்பரில் கண்டிருந்தது.  முகநூலிலும் அன்னையர் தினத்துக்காகப் பலர் கண்ணீர் உகுத்திருந்தனர்.  இதற்கு மேல் நான் எழுதப் போகும் விஷயத்தை ஜீரணிக்கக் கொஞ்சம் மன வலு தேவை.  என் மீது நம்பிக்கையும் தேவை.  என்ன நம்பிக்கை என்றால், நான் பெண்களையும் ஆண்களையும் சமமாக பாவிப்பவன்.  இதுதான் மிகவும் முக்கியம்.  நான் பெண்களை மதிப்பவன் என்று சொல்லி, பெண்களுக்கு அதிக சலுகை கொடுத்துக் கொண்டு, ஆனால் மனதளவில் படு மோசமான ஆணாதிக்கவாதிகளாக இருக்கும் பலரை … Read more

முடி கொட்டுது…

சின்ன வயதில் நான் என் அம்மா மாதிரியே இருக்கிறேன் என்று பலரும் சொல்லக் கேள்வியுற்றிருக்கிறேன்.  உருவத்தில் மட்டும் அல்ல; சில பழக்கவழக்கங்களிலும் நான் அம்மா மாதிரிதான்.  அதில் ஒன்று, அவ்வப்போது ஜோசியம் பார்ப்பது.  மற்றவர்களுக்கு அல்ல; எனக்கு.  மூன்று மாதத்திற்கு ஒருமுறையாவது அம்மா ஜோசியம் பார்ப்பது வழக்கம்.  யாரையும் தேடிப் போக மாட்டார்கள்.  ஜோசியர்களே வீடு தேடி வருவார்கள்.  அது ஒரு சடங்கு போல் நடக்கும்.  நாங்கள் ஆறு குழந்தைகள்.  எல்லோருக்கும் பார்ப்பார்கள்.  இதெல்லாம் எதுக்கும்மா, எல்லோரும் … Read more