சேகரிடம் எனக்கு ஒரு கேள்வி…

எஸ்.வி. சேகருக்கு உயர்நீதி மன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.  இந்த விஷயம் பற்றி பல நண்பர்கள் சேகருக்கு ஆதரவாக முகநூலில் எழுதுவது எனக்குப் பெரும் ஆச்சரியத்தையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்துகிறது.  நம் சமூகம் எந்த அளவு க்ஷீணம் அடைந்து விட்டது என்பதாலேயே கவலை.  எஸ்.வி. சேகரின் முகநூல் பதிவு எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை.  ஏனென்றால், பெண்களைப் பற்றி இந்துத்துவவாதிகள், மத அடிப்படைவாதிகள் போன்றவர்களின் கருத்தே அப்படிப்பட்டதுதான்.  பெண் என்றால் வீட்டுக்குள்ளேயே கிடக்க வேண்டும்.  வெளியே வந்தால் ஒழுக்கம் கெட்டவள்.  … Read more

சிறப்புத் தள்ளுபடி – 2

Amazon-இல் கோணல் பக்கங்கள் (Paperback) சிறப்புத் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றது. கோணல் பக்கங்கள் தொகுதி  1: ரூ. 80 https://www.amazon.in/dp/8184937660 *** கோணல் பக்கங்கள் தொகுதி  2: ரூ. 100 https://www.amazon.in/dp/8184937679 *** கோணல் பக்கங்கள் தொகுதி  3: ரூ. 100 https://www.amazon.in/dp/B01M4O5JIL    

சிறப்புத் தள்ளுபடி

Flipkart-இல் ராஸ லீலாவும் தேகமும் சிறப்புத் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. ராஸ லீலா: ரூ. 250 https://www.flipkart.com/raasa-leela/p/itmdapnxdxwj5uvf?pid=9789351351955 *** தேகம்: ரூ. 50 https://www.flipkart.com/degam/p/itme7kz5dumuhzgd?pid=9789351351962

அற்புதத் தருணங்கள்…

இன்னும் ரெண்டு நாள் பேப்பர் படிக்கவில்லை.  நாட்டு நடப்பு தெரியாது.  ஒரே நோக்கமாக ஊரின் மிக அழகான பெண் புத்தகத்தை கிண்டிலில் (இங்கே நடுவில் நான் க் போடுவதில்லை.  ஆங்கில வார்த்தைகளோடு தமிழைச் சேர்க்கும் போது எதற்கு ஐயா ஒற்று எழுத்தைப் போட்டு உயிரை வாங்குகிறீர்கள்?  தமிழ்ச் சினிமா!!!) போட்டு விட்டுத்தான் மறுவேலை என்று உட்கார்ந்தேன்.  வார்த்தைக்கு வார்த்தை ஒற்றெழுத்தைப் போடுவதிலேயே நேற்று முழுவதும் போய் விட்டது.  இன்றும் முழுநாளை முழுங்கி விடும்.  நீங்கள் யாருமே இது … Read more

பாலாவும் நானும் – 4

பாலா பற்றிய சிலரது இரங்கல் குறிப்புகளைப் படித்தேன். அறியாமையில் பேசுகிறார்கள். வேறு என்ன சொல்ல இருக்கிறது? நேற்றைய குறிப்பில் ஒரே ஒரு விஷயத்தை எழுத மறந்து போனேன். பாலாவையும் சுஜாதாவையும் வெகுஜன எழுத்தாளர்களாக வைத்திருந்தது தமிழ்ச் சூழல்தானே அவர்களை நான் குற்றம் சொல்ல மாட்டேன். ஒரே ஒரு உதாரணத்தோடு இந்தப் பதிவுகளை முடித்துக் கொள்கிறேன். சுஜாதாவின் தொடர்கதை ஒன்று வெகுஜன இதழில் வெளிவர ஆரம்பித்தது. இரண்டு மூன்று வாரத்திலேயே ஒரு ஜாதி பற்றிய குறிப்பு வர – … Read more

பாலாவும் நானும்… (3)

பாலா உங்களுக்குக் கொடுத்த புத்தகங்களைப் படியுங்கள் சாரு என்று பாலாவின் வாசகர் ஒருவர் எனக்கு அறிவுரை நல்கியுள்ளார்.  நான் மிகத் தெளிவாக பாலா பற்றிய என் பதிவுகளில் அவருக்கும் எனக்குமான நட்பு பற்றிச் சொல்லியிருக்கிறேன்.  அதைப் படித்த பிறகும் இப்படி எனக்கு அறிவுரை சொல்வதிலிருந்து அவர் என் எழுத்தை அறவே படித்ததில்லை என்று புரிந்து கொள்ள முடிகிறது.  நான் இலக்கியம் சாராத எதையுமே படித்ததில்லை.  பாலாவின் எழுத்து அனைத்தும் வெகுஜன எழுத்தில் அடங்குவது.  Bala is a … Read more