ஜனவரி 7, அடியேனும் ஜெயமோகனும்…

வருகின்ற சனிக்கிழமை 7-ஆம் தேதி மாலை தி.நகர் சர் பிட்டி தியாகராயா அரங்கில் அடியேனும் ஜெயமோகனும் மனுஷ்ய புத்திரனும் அராத்துவின் புதிய நூல்களைப் பற்றிப் பேச இருக்கிறோம். ஆமாம், ஒரே மேடையில்தான். இதுவரை நிகழ்ந்திராத நிகழ்வு. இனிமேலும் நிகழ சாத்தியமில்லை. மனுஷ்ய புத்திரனின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் நண்பர் எஸ்.ரா. இரவு எட்டேகாலுக்குப் பேசத் துவங்கி மைக்கை ஒன்பதே முக்காலுக்கு என்னிடம் கொடுத்தார். அதற்குள் முக்கால்வாசிக் கூட்டம் போய் விட்டது. மீதிப் பேருக்கு செம பசி. … Read more

செல்லாப் பணம்

பெண்ணை அவள் என்று குறிப்பிட்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியமும் அருவருப்பும் அடைந்தேன்.  பொதுப்புத்தி இப்படித்தான் இருக்கிறது.  இந்த நிகழ்ச்சியில் ஷாலினின் கருத்துக்கள் முழுவதையும் வழி மொழிகிறேன்.  (சார் என்ற பிரயோகத்தைத் தவிர…) http://kaalaimalar.net/modi-monetization-fails-it-women-angry-speech/

you are the reason i could fly…

நான் எப்போதுமே என்னைத் துறவி என்றே சொல்லி வந்திருக்கிறேன்.  அப்படியென்றால் எதன் மீதும் பற்றற்றவன்.  பற்றுடையவன் போல் தெரியும்.  ஆனால் பற்றற்றவன்.  ஆனால் என் தொழிலே எனக்கு தெய்வம்.  நேற்று அதிகாலை மூன்று மணி வரை மனுஷ்ய புத்திரன் வீட்டில் இருந்தேன்.  அந்தக் கொண்டாட்டத்தை செவ்வனே முறைப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.  இன்று முழுவதும் எழுதிக் கொண்டிருந்ததால் எனக்குப் புத்தாண்டு வாழ்த்து கூறிய யாருக்கும் பதில் சொல்ல முடியவில்லை.  ஃபோனையே எடுக்க முடியவில்லை.  மூன்று கட்டுரைகள்.  அனைத்து … Read more

magic of marc anthony

ஆண் என்று தனியாக யாரும் இல்லை; எல்லோருமே பாதி ஆண்; பாதி பெண். அப்படியே பெண்ணும். மார்க் அந்தோனி ஏன் என்னுடைய ஆல் டைம் ஃபேவரிட் என்றால் அவரது குரலில் பெண்ணும் ஆணும் கலந்து இருக்கும். இந்த ந்யூ இயர் ஈவ்-இல் இவரைக் கேளுங்கள். இந்த இணைப்பில் ஒரு ஐம்பது பாடல் இருக்கும்… மனிதர்கள் யாருமற்ற எனது தனிமை மிகுந்த வாழ்வில் இசை ஒன்றே எனக்கு ஆக்ஸிஜன்… baby you என்ற மார்க் அந்தோனியின் பாடலின் இணைப்பு. … Read more