நிம்மதி

இத்தனை நாள் என் எழுத்தையும் நேரத்தையும் சமூகத்துக்கு தானமாகக் கொடுத்து விட்டு, தட்சிணை கொடுங்கள் என்று கையேந்தினேன்.  பதிலுக்கு சமூகம் என்னைப் பிச்சைக்காரன் என்றது.  இப்போது டெக்னிக்கை மாற்றி விட்டேன்.  இனிமேல் என் எழுத்தும் நேரமும் இலவசம் கிடையாது.  கட்டணம் கொடுங்கள்.  இந்த முடிவில் ஏதேனும் தவறு இருந்தால் சொல்லுங்கள், திருத்திக் கொள்கிறேன்.  என் எழுத்தை விட இனிமேல் என் நேரத்துக்குத்தான் கட்டணம் வசூலிக்க இருக்கிறேன். நேற்று ஒரு முக்கியமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு.  … Read more

போல் தோ நா ஸரா…

நடனம் பற்றி நான் அதிகம் எழுதியதில்லை என்றாலும் ஒரு ரசிகனாக அதில் எனக்குக் கொஞ்சம் பரிச்சயமுண்டு.  ராவணன் படத்தில் ஒரு நடனக் காட்சி மிக வித்தியாசமாக இருக்கிறதே, இந்த கொரியாக்ரஃபி யாருடையது என விசாரித்த போது அது அஸ்தாத் டெபூ என்று தெரிந்தது.  அஸ்தாத் டெபூ உலக அளவில் பிரசித்தமான ஒரு நடனக் கலைஞர்.  அவருடைய நடனத்தை நேரடியாக எண்பதுகளில் தில்லியில் பார்த்திருக்கிறேன்.  மற்றபடி உலகின் பல்வேறு முக்கியமான நடனங்களை தில்லியில் பார்க்க வாய்த்தது.  வருடத்தில் ஒருமுறையாவது … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள்: ப. சிங்காரம் (பகுதி 3)

1942-ஆம் ஆண்டு ஃபெப்ருவரி 18-இலிருந்து மார்ச் 4 வரை சிங்கப்பூரில் இருந்த சீனர்களில் 70,000 பேர் கொல்லப்பட்டார்கள். கொன்றது ஜப்பான் ராணுவம். ஆனால் ஜப்பானிய ராணுவத்தின் அப்போதைய தளபதியான தோமயூக்கி யாமஷித்தா (Tomoyuki Yamashita) அதற்குக் காரணமானவர் அல்லர். மேலும் படிக்க: தினமணி இணயதளம்

Ecstasy

இப்படி ஒரு நடன ரகளையை என் வாழ்நாளில் கண்டதில்லை.  முப்பத்து நான்கு நிமிடம் பொறுமையாகப் பாருங்கள்.  நான் சொல்வது புரியும்.

நிகனோர் பார்ராவை விட உசத்தியான கவிஞன்…

இப்படிச் சொல்வதால் பார்ராவை மட்டம் தட்டி விட்டதாக எண்ணக் கூடாது.  நான் உலக இலக்கியத்தின் மாணவன்.  சும்மாவாச்சும் போகிற போக்கில் தட்டி விடுகிறவன் கிடையாது.  முழுமையாக நிகனோர் பார்ராவைப் படித்ததால்தான் இப்படிச் சொல்கிறேன்.  பார்ராவை விட நல்ல கவிஞன் மனுஷ்ய புத்திரன். ஏற்கனவே பார்ராவின் கடைசிக் கோப்பை என்ற கவிதையை அதே விஷயத்தை மனுஷ்ய புத்திரன் எழுதிய கவிதையோடு ஒப்பிட்டு மனுஷின் கவிதை எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்று நிறுவியிருந்தேன்.  ஆக, பார்ராவுக்குக் கொடுப்பதற்கு முன்னால் மனுஷுக்கு … Read more