என் அன்பு மகனுக்காக, ஹீனா கி குஷ்பூ…

என் அன்பு மகனே, துக்கத்தில் இருக்கும் போது மது அருந்தாதே.   பத்து ஆயுளுக்கு உண்டான குடியை நான் குடித்திருக்கிறேன்.  ஆனால் ஒருபோதும் துயரத்தில் குடித்ததில்லை.  குடி என் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.  இப்போது குடியை விட கொண்டாட்டமான விஷயங்கள் வாழ்வில் குடி புகுந்து விட்டன. நீ இங்கே வரும் போது தஹியா உணவு விடுதியில் ஒரு மணி நேரம் பேசுவதோடு நம் சந்திப்பு முடிந்து விடுகிறது.  அதிலும் உனக்குக் கடல் உணவு பிடிக்காது என்பது ஒவ்வொரு … Read more

ஒரு அற்புதத் தருணம்

ஒரு அற்புதத் தருணம் பற்றி முகநூலில் ஜெகா எழுதியிருக்கிறார்: 2014 டிசம்பர் சமயத்தில் ‘இந்தப்பாடல் எக்ஸைல் வெளியீட்டு விழாவில் கண்டிப்பாக திரையிட வேண்டும். இதுதான் நான், இதுதான் எக்ஸைல். வட்டத்து நண்பர்கள் யாராவது இதை சேமித்து அன்று திரையிட முடியுமா’ என்று கேட்டிருந்தார் சாரு. வளமை போலவே ஃபேஸ்புக்கில் நிறையப்பேர் அதைப் பகடி செய்திருந்தார்கள். ப்ரொஜக்டர், ஸ்க்ரீன் சகிதம் எல்லாம் தயாராக இருந்தது. எஸ்ரா மனுஷ் என எல்லோரும் இருக்க சாரு தருண் அருகில் இருந்தார். அவர் … Read more

அடியேனைப் பற்றி ஜெகா…

ஒரே ஒரு மனித ஜீவியின் பிரிவுதான் ஸீரோ டிகிரி நாவலாக வந்தது. வருத்தத்தை, துக்கத்தை வேறு ஒரு எண்ணமாக, சிந்தனையாக, வஸ்துவாக மாற்ற முயல வேண்டும். அது ஒரு மகத்துவத்தைக் கொண்டு வரும். – சாரு இனி வருவது ஜெகா, முகநூலில்… 2014 புத்தகக் காட்சி சமயம், சாரு மற்றும் நண்பர்களுடன் ஜிஆர்டி க்ராண்ட் ரூப் டாப்பில் உட்கார்ந்திருந்தோம். அவர் அப்போது மது அருந்துவார். அவருக்கு அர்ஜண்டினியன் ஒய்ன், நா வழக்கம் போல ஜேடி, நண்பர்கள் பியர். … Read more

கூலி இல்லாத வேலை (4)

இதை வாசிக்கும் எழுத்தாளர்கள் இதை ஒரு பிரச்சினையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  என் மீது உங்களுக்கு ஆயிரம் விமர்சனம் இருந்தாலும், இதை ஒரு பொதுப் பிரச்சினையாகக் கொள்ளவும்.  பத்திரிகை நண்பர்களும் எனக்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  விஷயம் இதுதான்.  எல்லா தொலைக்காட்சிகளிலும் எழுத்தாளர்களை அழைக்கிறார்கள்.  நான்கு மணி நேரம், ஐந்து மணி நேரம் என்று எங்கள் நேரத்தைத் தருகிறோம்.  ஒரு க்ரீன் டீ கொடுத்து அனுப்பி விடுகிறார்கள்.  ஒரு … Read more

கூலி இல்லாத வேலை (3)

நீங்கள் எழுதியிருந்த கூலி இல்லாமல் செய்யும் வேலை படித்தேன்.  நேற்றைய விஜய் டிவியில் ஒளிபரப்பிய ’நடந்தது என்ன?’ என்ற நிகழ்ச்சியில் பா.விஜய் நா.முத்துக்குமாரை பற்றிப் பேசும் போது, அவரது மறைவுக்குக் காரணம் மன அழுத்தம் எனவும், மன அழுத்தத்திற்குக் காரணம் அவருடைய உழைப்புக்கான கூலி சரியாக தரப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்… இது ஒரு சாபமோ? சந்திரசேகரன் ”வெகுசன பத்திரிகைகளில் என்னுடைய கவிதை ரசிகர்கள் யாராவது இருந்து வருடத்திற்கு ஒரு முறை அதில் என்னுடைய கவிதையை வரவழைக்க பல்வேறு … Read more

கூலி இல்லாமல் செய்யும் வேலை (2)

ஒரு பிழை நேர்ந்து விட்டது.  விகடன் அனுப்பிய 2000 ரூபாய் காந்தி கணக்கில் சேர்ந்து விட்டது.  அதாவது, என்னுடைய பழைய சின்மயா நகர் வங்கிக் கணக்கு.  அது அவந்திகாவின் பெயரில் இருப்பது.  தவறுக்கு உண்மையிலேயே வருந்துகிறேன்.  யாரையும் புண்படுத்துவது என் நோக்கம் அல்ல.   இலக்கியப் பத்திரிகை என்றால் பணம் கொடுக்க மாட்டார்களோ என்ற என் அச்சமும், பணம் வரவில்லையே என்ற கவலையோடு சேர்ந்து கொண்டு  விட்டது.  இதை நீங்கள் குழந்தைப் பிராயத்தில் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்ட … Read more