அறம் பொருள் இன்பம்

ஈரோடு புத்தகக் கண்காட்சியில் அறம் பொருள் இன்பம், டிஸ்கவரி புக் பேலஸ் (அரங்கு எண் – 97) மற்றும் புதுப்புனல் (அரங்கு எண் – 57) அரங்குகளில் கிடைக்கும். – ஸ்ரீராம்

மிஷ்கினின் சவரக் கத்தி

கொடூரமான கொலை ஆயுதமான சிலுவை ஒரு மாமனிதனின் மகத்தான தியாகத்தால் தியாகத்தின் குறியீடாக மாறியது.  அதைப் போல, கத்தி என்பது கொலைக்கானது அல்ல; அது ஜனனத்தின் குறியீடு, தொப்புள் கொடியை அறுப்பதன் மூலம் என்கிறார் மிஷ்கின்.  மிஷ்கின் எழுதிய, அருள் கொரேலி இசையமைத்த இந்த அற்புதமான பாடலைக் கேட்டேன்.  சவரக் கத்தி மிஷ்கினின் மகுடத்தில் மற்றுமொரு மயிலிறகு.  வாழ்த்துக்கள் நண்பனே… இதை எழுதிய பிறகுதான் மிஷ்கினுக்கு ஃபோன் போட்டு யார் குரல் என்றேன்.  உங்கள் நண்பனின் குரல், … Read more

மேட்டுப்பாளையம் புத்தகக் கண்காட்சி

மேட்டுப்பாளையம் புத்தகக் கண்காட்சி இன்று முதல் ஆகஸ்ட் 15 வரை நடைபெறுகிறது. சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிழக்கு மற்றும் உயிர்மை அரங்குகளில் கிடைக்கும். நேரம்: காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை இடம்: EMS மண்டபம், மேட்டுப்பாளையம் – ஸ்ரீராம்

என்னவென்று சொல்வது?

முகநூலில் எப்போதாவது  ஐந்து நிமிடம் மேய்வது வழக்கம்.  அப்போது பின்வரும் குறிப்பைப் படித்த போது நான் எழுதியதை யாரோ எடுத்து மேற்கோள் போட்டிருக்கிறார்கள் என்று நினைத்தேன்.  ஆனால் தொடர்ந்து படித்த போது இல்லையே, இப்படி எங்கே எழுதினோம், ஆனால் நாம் எழுதிய மாதிரியே இருக்கிறதே என்று நினைத்தேன்.  பிறகுதான் லீனா மணிமேகலை என்று தெரிந்தது.  நானும் முன்பெல்லாம் இப்படி விளக்கங்கள் கொடுத்துக் கொண்டிருந்தேன்.  பிறகு அது தேவையில்லை என்று தோன்றி விட்டது.  லீனா எழுதிய குறிப்பு கீழே: … Read more

ஈரோடு புத்தகக் கண்காட்சி

ஈரோடு புத்தகக் கண்காட்சி இன்று முதல் ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சாரு நிவேதிதாவின் புத்தககங்கள் கிழக்கு (அரங்கு எண் – 93, 94) மற்றும் உயிர்மை (அரங்கு எண் – 42, 43) அரங்குகளில் கிடைக்கும். நேரம்: காலை 11 மணி முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: VOC Park,  ஈரோடு பேருந்து நிலையம் அருகில். – ஸ்ரீராம்