தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது தொடர்பாக…

பொதுவாக நான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்புவதில்லை.  காரணம், நமக்கு ஹலோ சொல்வதற்குக் கூட தகுதி இல்லாத மொண்ணைகளோடு நாம் சரிக்கு சரியாக விவாதிப்பது பன்றிகளோடு மல்யுத்தம் செய்வதற்குச் சமம்.  இருந்தாலும் கலந்து கொள்வதற்குக் காரணம், நம்முடைய கருத்து லட்சக் கணக்கான பேரைச் சென்றடைய ஒரு வாய்ப்பு இருக்கிறதே என்பதுதான்.  புகழ் ஆசை கிடையாது.  எனக்குப் புகழ் பிடிக்காது.  புகழால் ஒரு காப்பி கூட இலவசமாகக் கிடைக்காது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்பாததன் இன்னொரு … Read more

ஈஷா சர்ச்சை

இன்று இரவு 9 மணிக்கு ந்யூஸ் 7 தொலைக்காட்சியில் ஈஷா சர்ச்சை குறித்த ‘கேள்வி நேரம்’ நிகழ்ச்சியில் சாரு நிவேதிதா கலந்துகொள்கிறார். நண்பர்கள் பார்க்கவும். – ஸ்ரீராம்

சில கட்டுரைகள்

பல ஆண்டுகளுக்குப் பிறகு கலா கௌமுதியில் என் கட்டுரை வெளிவந்துள்ளது.  ஒழிவு திவசத்தெ களி படத்தைப் பற்றிய கட்டுரை. தொடர்ந்து கலா கௌமுதியில் எழுதுங்களேன் என்றார் டாக்டர் ஸ்ரீராம்.  இப்படி கட்டுரைகளிலேயே காலத்தைக் கழித்தால் புனைகதைகளே எழுத முடியாமல் போய் விடும் என்றேன்.  என்னதான் மொழிபெயர்ப்புக் கட்டுரை என்றாலும் அதற்கும் சில வேலைகள் செய்ய வேண்டுமே? விகடன் தடம் இதழில் ஒழிவு திவசத்தெ களி பற்றிய என் நீண்ட கட்டுரை வெளிவந்துள்ளது.  உயிர்மையில் கபாலி பற்றிய கட்டுரை.  … Read more