ஒளியின் பெருஞ்சலனம் (2)
http://epaper.dinamalar.com/PUBLICATIONS/DM/DINAMALAR/2016/07/24/Article//413/24_07_2016_413_010.jpg
http://epaper.dinamalar.com/PUBLICATIONS/DM/DINAMALAR/2016/07/24/Article//413/24_07_2016_413_010.jpg
‘சா. கந்தசாமியின் சிறுகதைகள்’ என்ற தலைப்பில் உலகத் தரமான சிறுகதைகள் 1872 பக்கங்களில் இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அரை நூற்றாண்டுக்கு முந்தைய தமிழ் வாழ்க்கையை மிகுந்த கலையம்சத்துடன் பதிவு செய்தத் தமிழ் எழுத்தாளர்களில் முதல் வரிசையில் வர வேண்டியவர் சா. கந்தசாமி. அதற்கு ‘சாயாவனம்’ நாவலும் ‘உயிர்கள்’, ‘பாய்ச்சல்’ போன்ற சிறுகதைகளுமே சாட்சி. ஆனாலும் அதிகம் பேசப்படாதவராக, அதிகம் கொண்டாடப்படாதவராக இருக்கிறார். மேலும் படிக்க: http://bit.ly/2a80kGG
இன்று இரவு ஏழரை மணிக்கு தந்தி தொலைக்காட்சியில் துருக்கி பற்றிய ஒரு ஆவணப்படம் ஒளிபரப்பாகிறது. அதில் துருக்கியின் இப்போதைய நிலவரம் குறித்துப் பேசியிருக்கிறேன். முடிந்தால் பார்க்கவும். இன்றைய தினமலரில் சினிமா பகுதியில் ஒளியின் பெருஞ்சலனம் – உலக சினிமா 100 -இன் இரண்டாம் பகுதி வெளியாகியுள்ளது. நாளை ஒளிபரப்பாக இருக்கும் நியூஸ் 18 தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கபாலி திரைப்படம் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறேன். நியூஸ் 18 டாடா ஸ்கையில் வரும் என்று தெரிகிறது.
’ஒழிவு திவசத்த களி’ இந்தியத் திரை உலகில் நிகழ்ந்த அதிசயம் என்று எழுதியிருந்தேன். ஏஷியாநெட் இணையப் பத்திரிகையில் அந்தக் கட்டுரையை இதுவரை 29000 பேர் படித்திருக்கிறார்கள். இது ஒரு சாதனை. இதை சாத்தியப்படுத்திய ஏஷியாநெட் நிறுவனத்துக்கும் குறிப்பாக என் நண்பர் ட்டி.ஆர். விவேக்குக்கும் நன்றி. http://newsable.asianetnews.tv/south/charu-nivedita-ozhivu-divasathe-kali
கபாலியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மன உளைச்சல் தாங்க முடியாமல் லீனா மணிமேகலையிடம் புலம்பினேன். அப்போது அவர் கொடுத்த தலைப்பே கபாலிடா கடுப்புடா என்பது. அழகான தலைப்பைக் கொடுத்த லீனாவுக்கு நன்றி. கபாலி பற்றிய என் மதிப்புரை கீழே: http://newsable.asianetnews.tv/south/charu-nivedita-kabali-review
இன்று நடக்கவிருந்த ஆத்மார்த்தி புத்தகங்கள் விமர்சனக் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப் படும். – ஸ்ரீராம்