ஜெயலலிதாவுக்கு முன்னால் உள்ள சவால்கள்…
ஜெயலலிதா ஸ்டாலினுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவர் தானே விஜயகாந்தை திமுகவிலிருந்து விரட்டியது? ஏஷியாநெட்டில் நான் எழுதிய மூன்றாவது கட்டுரை இது. திருவண்ணாமலையிலிருந்து திரும்பி வரும்போது ஒரு டீக்கடையில் அமர்ந்து எழுதியது. செல்வகுமார் காரை ஓட்டி வந்தார். அவரும் நானும் மட்டுமே போயிருந்தோம். ஜவ்வாது மலைக்கு அழைத்தார் வெங்கடேஷ் (செங்கம்). பா. வெங்கடேசனின் பாகீரதியின் மதியம் நாவலை முடிக்க வேண்டியிருக்கிறது என்று அந்த சொர்க்கத்தை விட்டுவிட்டுக் கிளம்பினேன். டீக்கடையில் ஒரு நோட்டுப் புத்தகத்தைக் கிழித்து எழுதி அதைக் … Read more
தேர்தல் முடிவு சொல்வது என்ன?
பகுதி 1: பகுதி 2:
”சூப்பர் ஸ்டாருக்காக எதையும் செய்வேன்…”
ஏஷியாநெட் டிவியின் இணைய தளத்தில் ஒரு பத்தி தொடங்கியிருக்கிறேன். Unfaithfully Yours… என்பது தொடரின் தலைப்பு. ஏற்கனவே ஒரு கட்டுரை வெளியானது. அதன் இணைப்பு கீழே: http://newsable.asianetnews.tv/home-page/charu-nivedita-tn-elections இப்போது அந்தத் தொடரின் இரண்டாவது கட்டுரை இன்று வெளிவந்துள்ளது. சூப்பர் ஸ்டாருக்காகத் தீக்குளிப்பேன் என்பது கட்டுரையின் சாரம். http://newsable.asianetnews.tv/home-page/charu-tamil-society-money-worship நண்பர்களும் எதிரிகளும் பெருவாரியாகப் படித்து ரசித்து, திட்டி இந்தத் தொடருக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். சென்ற கட்டுரையைப் படித்த அன்பர் ஒருவர் இது எல்லோருக்கும் தெரிந்ததுதானே என்று … Read more
பழுப்பு நிறப் பக்கங்கள்: சி.சு.செல்லப்பா – பகுதி 9
செல்லப்பாவுக்கு சாகித்ய அகாதமி பரிசைப் பெற்றுத் தந்துவிடவேண்டும் என்று நா.பா. உறுதியாக இருந்த போது, செல்லப்பா மிகக் கொடுமையான வறுமையில் உழன்று கொண்டிருந்தார். சாப்பாட்டுக்குக் கூட ஏதுமில்லாத நிலை. சாகித்ய அகாதமியின் 50000 ரூபாயை வேண்டாம் என மறுத்திருக்கிறார் செல்லப்பா. ஒரே காரணம்தான். சாகித்ய அகாதமியின் தேர்வுகளில் செல்லப்பாவுக்கு மரியாதை இல்லை. ஆள் பிடித்து வாங்குகிறார்கள் என்று நினைத்தார். மேலும் படிக்க: http://bit.ly/1rNgcH8
எங்கே உன் கடவுள்? – மதிப்புரை
‘எங்கே உன் கடவுள்?’ நூலுக்கு க.சீ.சிவகுமாரின் மதிப்புரை: http://www.dinamalar.com/news_detail.asp?id=1522224