நிர்பயா என்கிற ஜோதி சிங்

நிர்பயா பற்றிய உங்கள் கட்டுரையைப் படித்தேன் அதைப் பற்றி சில கருத்துகள்… எந்தப்பெண்ணாவது இதை ஒட்டிய ஒரு சீரியஸான குரலை பதிவு செய்துள்ளாரா என்று தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை இப்படியான வன்முறைகளை சிறியது முதல் பெரிய அளவில் பெண்கள் அன்றாடம், பல மூலைகளில், பல அளவுகளில் எதிர்கொண்டு தான் வருகிறார்கள். கார்ல் மார்க்ஸ் கூறியுள்ளதற்கெல்லாம் போகவே வேண்டியதில்லை. தொன்று தொட்டே பெண் மீதான வன்முறை இருந்துகொண்டே தான் வந்துள்ளது. அதற்கு, சமூகத்தின் விளிம்புநிலையிலிருது தான் ஒருவன் வரவேண்டுமென்றில்லை.  … Read more

தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

திலகவதி தேர்ந்தெடுத்த என்னுடைய பத்து சிறுகதைகளை அம்ருதா பதிப்பகம், ‘முத்துக்கள் பத்து’ என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளது. அனைத்து முன்னணி கடைகளிலும் கிடைக்கும். விலை ரூ.90/- 044 – 2435 3555 என்ற எண்ணில் தொடர்புகொண்டு, பணம் அனுப்பினால், உங்கள் முகவரிக்கு புத்தகம் அனுப்பிவைக்கப்படும். Amurudha Pathipagam, No: 12, 3rd main road, Second cross street, Govind royal nest, CIT nagar east, Chennai – 600035

புதிய எக்ஸைல்

  புதிய எக்ஸைல் நன்கு திருத்தப்பட்டு அச்சுப் பிழைகள் எதுவும் இல்லாமல் புதிதாக பேப்பர்பேக் எடிஷன் வெளிவந்துள்ளது.  விலை 700 ரூ. விபரம்: இணையத்தில் வாங்க: http://www.nhm.in/shop/9789384149413.html

ஏன் எனக்கு அறிவே இல்லை? – ஒரு சுய பரிசோதனை

கணித மேதை ராமானுஜன் பற்றிய பத்ரி சேஷாத்ரியின் கட்டுரை ரொம்ப நன்றாக இருப்பதாக பி.ஏ. கிருஷ்ணன் சொல்லியிருந்ததால் உடனே அந்தக் கட்டுரையைப் படிக்கப் போனேன்.  ஒரு வார்த்தை கூடப் புரியவில்லை.  தமிழில் எழுதப்பட்ட கட்டுரைதான்.  சரி, நமக்குத்தான் கணிதம் என்றால் ஒரு எழவும் புரியாதே என்று கீழே கீழே வரிகளைத் தள்ளிக் கொண்டு போனால் கடைசியில் நாகேஸ்வர ராவ் பூங்கா கணக்கு என்று ஒரு தலைப்பு இருந்தது.  பூங்கா என்றால் நல்ல வார்த்தைதான்.  ஆனால் அதோடு கணக்கு … Read more

முட்டாளின் பதில் தொடர்கிறது… (அநேகமாக இன்றே கடைசி!)

என் நண்பர் கணேஷ் அன்புவுக்கு இன்னும் ஒத்துக் கொள்ள முடியவில்லை போல.  வர்கலா பீச்சில் வைத்து இந்த விஷயத்தைப் பேசுவோம் என்று குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார்.  சென்ற கட்டுரைகளில் அதிகாரம் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.  அதிகாரம் என்றால் என்ன? நம் நாட்டில் ராணுவ ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.  நீங்கள் ஒரு நிறுவனத்தில் ஜெனரல் மேனேஜர்.  மிகப் பெரிய பதவி.  நீங்கள் காலையில் வாக்கிங் சென்று கொண்டிருக்கும் போது ஒரு சிப்பாய் உங்களைப் பார்த்து ஏய் இங்கே … Read more