வெகுஜன உளவியலும் ஃபாஸிஸமும்: ஏவுகணை நாயகன்

கலாம் பற்றிச் சொல்ல இன்னும் அதிகம் இருக்கிறது.  முகநூல் அறிவாளிகளிடம் அதை முன்வைப்பதை விட ஒரு பத்திரிகையிலேயே விரிவாக எழுதலாம் என்று நினைத்தேன்.  இந்தக் கட்டுரைக்கு வித்திட்டது இன்று காலையில் என்னோடு உரையாடிய இரண்டு ஆட்டோக்காரர்கள்.  ஒரு ஆட்டோக்காரர், ”கலாம் சாருக்கு மெரீனா பீச்சில் சிலை வைக்க வேண்டும் .  ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி கவர்னரிடம் கொடுத்தால் சிலை வைப்பலாங்களா சார்?” என்று கேட்டார்.  “நானும் அதையே தான் நினைத்தேன்.  நீங்கள் சொல்லி விட்டீர்கள். … Read more

விஞ்ஞானி அப்துல் கலாம் உருவாக்கிய இளைஞர் சமுதாயம்!!!

பலவிதமான கொலை மிரட்டல்களும் நான் விரைவில் மரணம் அடைய வேண்டும் என்ற தீவிரமான பிரார்த்தனைகளும் கொண்ட பல மின்னஞ்சல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.  எதிர்பார்த்ததுதான்.  இதற்கெல்லாம் பதற்றம் அடைந்தால் கைகால் நடுங்கும்; நெஞ்சுவலி வரும் என்பதால் சாத்வீகமாக எதிர்கொள்கிறேன்.  இன்று ஒரு நீண்ட கடிதம் வந்தது.  அதன் ஒரு பகுதியை மட்டும் உங்கள் எஞ்ஜாய்மெண்டுக்காகப் பதிவிடுகிறேன்.  இதற்காக எல்லாம் போலீஸ் ஸ்டேஷன் போகும் அளவுக்கு எனக்கு நேரம் இல்லை.  ஆனால் ஒன்று… இப்படிப்பட்ட கோடானுகோடி இளைஞர்களைத்தான் கலாம் உருவாக்கினார். … Read more

je taime…

ஒன்பது மாத தினசரிகளைப் படித்துக் கொண்டிருந்த போது ஒரு கட்டுரை.  தீபன் என்ற ஃப்ரெஞ்ச் படம் பற்றி என் நண்பர் ஷங்கர் எழுதியது.  அதில் அதன் இயக்குனரின் பெயரைக் குறிப்பிடும்போது ழாக் அடியார்டு என்று எழுதியிருந்தார்.  Jacques Audiard என்பதில் முதலில் Audiard ஐ எடுத்துக் கொள்வோம்.  ஃப்ரெஞ்சிலும் மற்றும் பல ஐரோப்பிய மொழிகளிலும் t, d என்ற உச்சரிப்புகள் இல்லை.  த்த, த என்பதே அதன் உச்சரிப்பு.  எனவே Audiard என்ற பெயரை ஓதியார் என்று … Read more

டாக்டர் அப்துல் கலாம் (2)

நிர்வாண நகரத்தில் கோமணம் கட்டியவன் பைத்தியக்காரன்.  இப்போது எனக்கு அந்தப் பட்டம் கிடைத்துள்ளது.  பரவாயில்லை.  ஒரு அன்பர் என்னை அடிக்கப் போகிறேன் என்று எழுதியிருக்கிறார்.  இதுதான் இவர்கள் கலாமிடமிருந்து கற்றுக் கொண்ட பாடம் போலும்.  எத்தனையோ ஜனாதிபதிகள் வருகிறார்கள், போகிறார்கள்.    ஆர். வெங்கட்ராமன் ஜனாதிபதியாக இருந்த போது நான் தில்லியில்தான் இருந்தேன்.  ஆனால் அவரெல்லாம் என்னை ஈர்க்கவில்லை.  கலாம் ஈர்த்தார்.  எதிர்மறையாக.  ஒரு விழா.  கலாம் தான் குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் துவக்கி வைக்க வேண்டும்.  குத்துவிளக்கு … Read more