ஐ & என்னை அறிந்தால் விமர்சனம்
இயக்குனர் ஷங்கருக்கு நான் எழுதிய கடிதம் இன்று வெளியாகும் புதிய தலைமுறை இதழில் வெளிவருகிறது. என்னை அறிந்தால் விமர்சனம் இன்றைய அந்திமழை இதழில் வெளியாகிறது.
இயக்குனர் ஷங்கருக்கு நான் எழுதிய கடிதம் இன்று வெளியாகும் புதிய தலைமுறை இதழில் வெளிவருகிறது. என்னை அறிந்தால் விமர்சனம் இன்றைய அந்திமழை இதழில் வெளியாகிறது.
திருப்பூர் புத்தக விழா நடந்து கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். வரும் சனிக்கிழமை 7-2-2015 அன்று மாலை நான்கு மணியிலிருந்து ஏழு மணி வரை திருப்பூர் புத்தக விழாவுக்கு வருவேன். வாசகர்களுக்கு என் புத்தகங்களில் கையெழுத்திட்டுத் தருவேன். என் புத்தகங்களில் மட்டுமே கையெழுத்து இடுவதற்கு வாசகர்கள் என்னை அனுமதிக்க வேண்டும். பிறரின் புத்தகங்களில் கையெழுத்திடுவதில்லை.
charunivedita.com என்ற என்னுடைய ஆங்கில வலைத்தளத்துக்கு 31.1.2015 அன்று மதியம் மூன்று மணி அளவில் 600 பேர் வருகை தந்திருந்தார்கள். அன்று மாலை ஆறு மணி அளவில் 3500-க்கும் மேல் போய் விட்டது வருகை தந்து வாசித்தவர்களின் எண்ணிக்கை. ஆக, என்னுடைய ஆங்கில வலைத்தளத்தை ஒரு நாளில் குறைந்த பட்சம் 3000 பேர் படிக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். முதல் நாளில் மூன்று மணி நேரத்தில் 3000 பேர் என்பது என்னை ஆச்சரியப்படுத்தியது. தொடர்ந்து … Read more
அன்புள்ள சாரு, இன்றைய தினகரன் “வணக்கம் திங்களி”ல் தங்களின் நேர் காணல் வாசித்தேன். மிக அருமையாக இருந்தது. மனதில் உள்ளதை பட்டவர்த்தனமாக சொல்லியிருந்தீர்கள். காலைப் பொழுது திவ்யமாய் ஆரம்பித்தது. நன்றி…! S. Mohamed Moosa Tirunelveli மூசாவின் கடிதத்தைப் படித்த பிறகுதான் தினகரன் பேட்டி ஞாபகம் வந்தது. பல எழுத்தாளர்களும் எழுதும் போது தான் வெளியுலகத் தொடர்பு எதுவும் இல்லாமல் இருப்பார்கள். ஆனால் நான் படிக்கும் போதுதான் அப்படி இருப்பேன். இன்னும் ஆறு மாதம் படிக்கும் காலம். … Read more
charunivedita.com என்ற பெயரில் ஆங்கில வலைத்தளம் ஒன்று கொண்டு வரப் பட்டுள்ளது. நண்பர்கள் படிக்கலாம். இதற்குக் காரணமாக இருந்த டாக்டர் ஸ்ரீராம், குரு, செல்வா மற்றும் நண்பர்களுக்கு என் நன்றி. http://charunivedita.com/2014/11/25/5/
ஜனவரி 30 முதல் ஃபெப்ருவரி 8 வரை திருப்பூரிலும், பெரம்பலூரிலும் புத்தக விழா நடைபெறுகிறது. புதிய எக்ஸைல், ராஸலீலா, ஸீரோ டிகிரி, கோணல் பக்கங்கள் 1, 2, 3 ஆகியவை கிழக்கு அரங்கில் கிடைக்கும். சாருவின் பிற புத்தகங்கள் உயிர்மை அரங்கில் கிடைக்கும். கிழக்கு அரங்க எண்: திருப்பூர் புத்தக விழாவில் அரங்கு எண் 77, 78; பெரம்பலூர் புத்தக விழாவில் அரங்கு எண் 30, 31. உயிர்மை அரங்கு எண்: திருப்பூர் புத்தக விழா அரங்கு … Read more