6 டிசம்பர் ஞாயிறு காலை 6 மணி: புதுமைப்பித்தன்

நாளை காலை – அதாவது இந்திய நேரப்படி ஞாயிறு காலை ஆறு மணிக்கு புதுமைப்பித்தன் சிறுகதைகள் பற்றிய என் உரை நடைபெறும். உரை முடிந்து கேள்வி பதில் பகுதி உண்டு. நண்பர்கள் தங்கள் கேள்விகளை சந்தேகங்களைக் கேட்கலாம். நீண்ட நேரம் பேச வேண்டாம் என்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன். மற்றபடி எந்தத் தயக்கமும் தேவையில்லை. சுதந்திரமாக இருங்கள். நான் உரையாற்றும் போது ஆடியோ முக்கியமாக விடியோவை ஆஃப் செய்து வைத்திருங்கள். விடியோவில் யாரையேனும் பார்த்தால் என் கவனம் … Read more

பூச்சி 174: அவையடக்கம்

தேர்வுக்குப் படிப்பது போல் புதுமைப்பித்தனின் கதைகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  நாளை மறுநாள் இந்நேரம் சந்திப்பு முடிந்திருக்கும்.  உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.  அதற்கான விவரங்களை இறுதியில் மீண்டும் தருகிறேன்.  இவ்வளவு மும்முரமான வேலைக்கு இடையில் பாலா எனக்கு ஜெயமோகனின் பதிவு ஒன்றை அனுப்பி வைத்ததைப் படித்து, படித்ததோடு நில்லாமல் அது பற்றிய ஒரு மேலதிகத் தகவலையும் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.  பேசாமல் ஜெயமோகனின் பதிவை மட்டும் கொடுத்து விட்டு வேலையைப் பார்த்துக் கொண்டு போயிருக்கலாம்.  ஜெயமோகனே … Read more

புதுமைப்பித்தன் சிறுகதைகள்: டிசம்பர் 6 காலை 6 மணி

நண்பர்கள் அனைவரையும் இந்த மாத உரைக்குத் தயாராகும்படி கேட்டுக் கொள்கிறேன். வரும் ஞாயிறு காலை ஆறு மணிக்கு வழக்கம் போல் ஸூம் சந்திப்பு இருக்கும். டிசம்பர் 6. இந்திய நேரம் காலை ஆறு மணி. புதுமைப்பித்தன் சிறுகதைகளைப் படிக்க வேண்டும் என்றால் தினமணி இணையதளத்தில் காணலாம். புதுமைப்பித்தன் என்று கூகிளில் தட்டினால் கிடைக்கும். சந்திப்புக்கான ID மற்றும் Passcode விவரங்கள் கீழே:

KDP’s Pen to Publish

கிண்டிலின் Pen to Publish போட்டிக்கான அறிவிப்பு வந்துள்ளது. நானும் நடுவர்களில் ஒருவன். விவரம் கீழே உள்ள அறிவிப்பில் உள்ளது: Amazon KDP’s Pen to Publish contest is back and will begin accepting English, Hindi, and Tamil entries beginning December 10, 2020! This year, prizes will be awarded to winners in each language in each format: Long Form: The winning author in each … Read more

பூச்சி 174: வாழ்க்கை வரலாறு

தமிழில் எழுத்தாளர்கள் தங்கள் சுயசரிதையை எழுதுவதற்கோ அல்லது அவர்களின் வரலாற்றை மற்றவர்கள் எழுதுவதற்கோ தோதான வாழ்க்கை அவர்களுக்கு அமைவது இல்லை. ஒரு சாதாரண மத்தியதர வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கும் ஒரு தமிழ் எழுத்தாளனின் வாழ்வில் எப்படி சுவாரசியமான திருப்பங்கள் இருக்கக் கூடும்?  வாய்ப்பே இல்லை.  ஆனால் விளிம்பு நிலையில் வாழும் எழுத்தாளருக்கு அது சாத்தியம்.  துரதிர்ஷ்டவசமாக தமிழ் எழுத்தாளர்கள் யாரும் விளிம்புநிலையில் வாழ்வது இல்லை.  பட்டினி கிடந்து செத்திருக்கிறார்கள்.  ஆனாலும் அது விளிம்புநிலை வாழ்க்கை இல்லை.  தர்மு … Read more