இனி இப்படி வேண்டாம்…

சந்தா மற்றும் நன்கொடை அனுப்புபவர்களுக்கு நான் எப்போதுமே ஒரு ஆலோசனை சொல்லியிருக்கிறேன், பணக்கஷ்டம் உள்ளவர்கள் இதில் சம்பந்தமே வைத்துக் கொள்ளாதீர்கள் என்று. மாணவர்கள், என்னைப் போன்ற தினக்கூலிகள், விளிம்புநிலை மக்கள், இல்லத்தரசிகள் போன்றவர்கள் பணம் அனுப்ப வேண்டாம் என்று கூவிக்கொண்டே இருக்கிறேன். ஏனென்றால், என் இணைய தளத்தை 80000 பேர் படிக்கிறார்கள். அதில் ஒரு நூறு பேர்தான் நன்கொடை அனுப்புகிறார்கள். இந்த நிலையில் 79,900 பேரில் ஒருவராக இருந்து விட்டுப் போவதில் உங்களுக்கு ஒன்றும் பெரிய பிரச்சினை … Read more

Human Brains: Prada Foundation

Prada Foundation வெளியிட்டுள்ள இந்தப் பெரிய தொகுப்பில் என்னுடைய சிறுகதை வெளியாகியுள்ளது. Tandav at Tadaka என்பது கதையின் தலைப்பு. 986 பக்கங்கள். விலை: 117 யூரோ. இதுவே 27 சதவிகிதத் தள்ளுபடியில். மலிவுப் பதிப்பாக இருப்பதால் வாங்கிக் குவிப்பீர்கள் என்று நினைக்கிறேன். எனக்கு ஒரு பிரதி ஃபெடெக்ஸ் மூலமாக வந்துள்ளது. விலாசத்தில் சாரு நிவேதிதா என்று உள்ளது, உங்கள் ஆதார் கார்டில் கிருஷ்ணசாமி அறிவழகன் என்று உள்ளது, அதனால் தர மாட்டோம். முப்பது நாட்களுக்கு மேல் … Read more

அமேஸான் ~ சாரு ~ ஜெமோ ~ மனுஷ் ~ ஹார்ட் லேண்டிங் ~ சாஃப்ட் லேண்டிங் (மீள்: 2019): கார்ல் மார்க்ஸ்

வாழை பிரச்சினையில் சமூவம் பற்றி எரிந்து கொண்டிருப்பதால் கார்ல் மார்க்ஸ் ஃபேஸ்புக்கில் மீள் பதிவு செய்ததை நான் இங்கே மீள்பதிவு செய்கிறேன். இனி கார்ல்: இந்த பல்பு நாவல் விவகாரத்தில் நவீன தமிழ் இலக்கியத்தின் பிரதான கவியான மனுஷ்ய புத்திரன், உங்கள் சங்கத்தின் பக்கம் நிற்காமல், கட்சியினர் பக்கம் நின்றுவிட்டாரே, அதில் உங்களுக்கு வருத்தமில்லையா என்று ஒருவர் உள்பெட்டியில் கேட்டார். நான் அதற்கு, இல்லையே அவர் “தீவிரவாத இலக்கிய சங்கத்தின்” கொள்கைப்படி மிகச் சரியாகத்தானே செயல்படுகிறார் என்று … Read more

நானே ராஜா, நானே மந்திரி, நானே தளபதி, நானே சிப்பாய் : I am a one-man army…

என்னுடைய முதல் விமர்சனக் கட்டுரை ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலுக்கு எழுதியது. அதற்கு முன்னால் ஃப்ரெஞ்ச் தத்துவம் பற்றி படிகள், இலக்கிய வெளிவட்டம் ஆகிய காலாண்டு இதழ்களில் எழுதிக்கொண்டிருந்தேன். அப்பத்திரிகைகளில் நான் தான் பிரதான எழுத்தாளன். நாங்கள் ஒரு குழுவாகவே செயல்பட்டோம். ஆனால் அந்தப் பத்திரிகைகளிலேயே ஜே.ஜே. நாவலுக்கான என் விமர்சனத்தை வெளியிடவில்லை. அப்போதிருந்து தொடங்கி இன்று வரை என் எழுத்துக்கு எதிர்ப்பு மட்டுமே இருந்து வருகிறது. என் எழுத்தைப் பிடிக்காதவர்கள் பற்றி எனக்குக் கவலையே இல்லை. … Read more

தம்பிக்கு ஒரு கடிதம்…

அன்புத் தம்பி பெருமாளுக்கு, நான் உன்னைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்து விட்டு பதிலுக்கு நீ என்னைத் திட்டி எழுதியிருந்ததாக நண்பர்கள் சொன்னார்கள்.  அதைப் படித்து நேர விரயம் செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை.  ஆனால் அதில் நீ சொல்லியிருந்த ஒரே ஒரு விஷயம் பற்றி உனக்கு ஒரு பால பாடம் எடுக்கலாம் என்றே இதை எழுதுகிறேன்.  அதில் செல்வதற்கு முன்னால் இன்னொன்று.  நீ நல்லவன்.  இன்றைய உலகில் நல்லவர்கள் அரிதாக இருப்பதால் உன்னை எனக்குப் பிடிக்கும்.  அதனால்தான் … Read more