ஒரு விளக்கம்

இன்று வெளிவந்திருக்கும் ஆனந்த விகடனில் வாசகர் வட்டம் பற்றி ஒரு விளக்கம் அளித்திருக்கிறேன்.  வெளியிட்ட விகடனுக்கு நன்றி. இன்றிய சைரனில் என்னுடைய கட்டுரை (கடைசிப் பக்கம்) வெளிவந்துள்ளது.  முடிந்தால் பார்க்கவும்.

தருண் தேஜ்பால்: அரசியல் சதி : காட்சி இரண்டு

ஒரு எழுத்தாளனை எவ்வளவுதான் ஓட ஓட விரட்டுவார்கள் என்று தெரியவில்லை.  இப்போது தருணின் விசாரணை அதிகாரி – அவர் ஒரு பெண் – தருண் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு தருண் எழுதியுள்ள பதிலைப் படித்துப் பாருங்கள்.  இது இன்றைய தினமலர் நாளிதழில் வந்துள்ளது.  இணைப்புக்கு: http://epaper.dinamalar.com/PUBLICATIONS/DM/MADHURAI/2014/01/29/ArticleHtmls/29012014270010.shtml?Mode=1

கோவா

வரும் உயிர்மை இதழில் என்னுடைய  பேய்க் கதை வெளிவருகிறது.  ஆங்கிலத்தில் சென்ற ஆண்டு Diabolically Yours என்ற தலைப்பில் எழுதி Exotic Gothic Vol 5-இல் வெளிவந்த கதையின் தமிழ் வடிவம். வரும்  3-2-2014 அன்று திங்கள்கிழமை கோவா செல்கிறேன்.  வியாழன் மாலை சென்னை திரும்புவேன்.  யாரேனும் வாசகர்கள் என்னை சந்திக்க விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள். charu.nivedita.india@gmail.com

எக்ஸைல் 2

இப்போதைக்கு வசதிக்காகத்தான் எக்ஸைல் 2 என்ற பெயர்.  இன்னும் நாவலுக்குத் தலைப்பு வைக்கவில்லை.  பல ஆண்டுகளாக மனுஷ்ய புத்திரன் என்னிடம் சொல்லிக் கொண்டிருப்பார், என்னுடைய நாகூர் வாழ்க்கையை எழுதச் சொல்லி.  எக்ஸிஸ்டென்ஷியலிஸம் நாவலில் வந்ததெல்லாம் சும்மா இணுக்கு.  அதேபோல் திர்லோக்புரி தவிர என்னுடைய பனிரண்டு ஆண்டுக் கால தில்லி வாழ்க்கையையும் நான் எழுதியதில்லை.  இந்த இரண்டும் எக்ஸைல் 2-இல் உள்ளது என்பதை இப்போது தெரிந்து கொண்டேன்.  நாவலை எடிட் பண்ணுவதற்காக இரண்டு பேரிடம் கொடுக்க வேண்டும் என்று … Read more

புத்தகக் கண்காட்சி – இன்று மாலையும்…

நேற்று புத்தகக் கண்காட்சி சென்றிருந்தேன்.  இரண்டு மணி நேரம் இருந்தேன்.  புத்தகக் கண்காட்சி அமைப்பாளர்களில் ஒருவரான ஒளிவண்ணன் எனக்குக் கொடுத்த எல்கேஜி புத்தகங்களை உயிர்மை ஸ்டாலில் ஒளித்து வைத்து விட்டு வந்து விட்டேன்.  அதை வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை.  ஜாங்கிரி பொட்டலம் மாதிரி அதை எனக்குப் பரிசு கொடுத்தார்கள்.  இது போன்ற விஷயங்களில் எனக்கு சகிப்புத்தன்மை கம்மி.  உதாரணமாக, நான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்காததற்கு முக்கியமான காரணம், அதில் வரும் விளம்பரங்கள்தான். எல்லோரும் புத்தகக் … Read more

வாசகர் வட்டம் – மதுரை சந்திப்பு – புதியவர்கள்… (5)

முதலில் சாரு வெளியீடு.  அடுத்து, லத்தீன் அமெரிக்க சினிமா – ஓர் அறிமுகம் கிரணம் வெளியீடு.  மூன்றாவது, எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் நாவல்.  கிரணம் வெளியீடு.  இதை நான் வட்டிக்குக் கடன் வாங்கியும் என் மனைவியின் (அவந்திகா அல்ல) தாலியை விற்றும் பிரசுரித்தேன்.  நிறைமாத (ஒன்பதாவது மாதம்) கர்ப்பிணியாக இருந்த அந்தப் பெண் அண்ணா நகரிலிருந்து மைலாப்பூரில் இருக்கும் அச்சகம் வரை பஸ்ஸில் வந்து அந்த நாவலுக்காக அலையாய் அலைந்தார்.  நான் அப்போது தில்லியில் இருந்தேன்.  நாவல் … Read more