மொழிபெயர்ப்பின் கலையும் அரசியலும்

மொழிபெயர்ப்பு பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். நானும் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறேன். ஊரின் மிக அழகான பெண் என்ற என்னுடைய மொழிபெயர்ப்புத் தொகுதி இன்றைய மொழிபெயர்ப்பாளர்களின் முன்மாதிரி நூலாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும். இதை யாரும் சொல்லாததால் நானே சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது. என் பெருமைக்காக அல்ல. மொழிபெயர்ப்பாளர்களின் நன்மைக்காக. தருண் தேஜ்பாலின் The Valley of Masks நாவலை நானும் தாமரைச்செல்வியும் காயத்ரியும் மொழிபெயர்த்தோம். அதுவுமே மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஒரு வழிகாட்டி நூல்தான். மொழிபெயர்ப்பு எப்படி வந்திருக்கிறது என்று தருண் என்னைக் கேட்டபோது … Read more

பெங்களூர் IIHS சந்திப்பு

இந்த முறை பெங்களூர் சந்திப்பு மிகவும் இனிமையாக இருந்தது. சில சொந்த ஏமாற்றங்கள் இருந்தாலும். வியாழக்கிழமை (ஒன்பதாம் தேதி மே மாதம்) காலை பதினோரு மணிக்கு வேளச்சேரியில் உள்ள ஏ2பி போய்ச் சேர்ந்தேன். வேளச்சேரியில் சீனி சேர்ந்து கொள்வார். சீனியின் காரில் சீனி கார் ஓட்ட பெங்களூர் போக வேண்டும் என்பது திட்டம். வழியில் காஞ்சீபுரத்தில் ராஜா சேர்ந்து கொள்வார். ஏ2பியில் காஃபி குடித்துக்கொண்டிருந்த போது ராஜேஷ் வந்தார். அங்கேயே கொஞ்சம் கை முறுக்கு வாங்கிக்கொண்டேன். சீனி … Read more

You are the reason…

நான் எழுதிய முதல் கதையான முள் ஒரு காதல் கதை. மோகமுள் தமிழ் இலக்கியத்தின் உன்னதமான காதல் கதை. உலக மொழிகளில் சொன்னால் அன்னா கரினினா, மதாம் பொவாரி ஆகிய இரண்டும். நவீன தமிழ் இலக்கியத்தில் எக்ஸைல். அந்த நாவல் அதில் உள்ள காதலுக்காகக் கொண்டாடப்படாவிட்டாலும் வேறு பல காரணங்களுக்காகக் கொண்டாடப்பட்டது. ஆனாலும் நான் அதை அன்னா கரினினா, மதாம் பொவாரி, மோகமுள் ஆகிய மூன்றையும் மனதில் கொண்டே அவற்றின் நவீன வடிவமாகவே எழுதினேன். ஆனால் காதலே … Read more

பெங்களூர் சந்திப்பு (தொடர்ச்சி)

நாளை (9 மே) காலை பதினோரு மணிக்கு பெங்களூர் கிளம்புகிறேன். நாளை இரவும் பத்தாம் தேதி இரவும் என்னை சந்திக்கலாம். பதினொன்றாம் தேதி இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹ்யூமன் செட்டில்மெண்ட்ஸின் இரவு விருந்தில் கலந்து கொள்வதால் இரவு பத்து மணிக்கு மேல்தான் என் நேரம் என் கையில் இருக்கும். ஆனால் பன்னிரண்டாம் தேதி மதியம் உரையாடல் இருப்பதால் பதினோரு இரவு நீண்ட நேரம் கண் விழித்திருக்க இயலாது. இதற்கிடையில் மருத்துவர் பாஸ்கரனின் பிறந்த நாளும் பதினொன்றாம் தேதிதான் … Read more

பெங்களூர் சந்திப்பு

பெங்களூர் Indian Institute of Human Settlements வளாகத்தில் வரும் பன்னிரண்டாம் தேதி மதியம் 12.15 மணிக்கு கார்ஸியா மார்க்கேஸ் பற்றிய உரையாடலில் கலந்து கொள்கிறேன். வர நினைக்கும் நண்பர்கள் முன்பதிவு செய்து கொண்டு வரலாம். அழைப்பிதழை முந்தின பதிவுகளில் கொடுத்திருக்கிறேன். மே 11ஆம் தேதி கீழ்க்கண்ட முகவரியில் மருத்துவர் பாஸ்கரன் அவரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ள விரும்பும் அன்பர்களைப் பார்க்க இருக்கிறார். என்னுடைய பெங்களூர் சந்திப்புக்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்த மருத்துவரை நான் தான் ஒருநாள் முன்கூட்டியே … Read more