ரத்தனங்கள் பற்றி ரத்தினம் சொன்ன கதை

இந்தக் கதைக்கு நான் a wonderful world of gems என்றுதான் தலைப்பு வைக்க வேண்டும் என்று நினைத்தேன்.  ஆனால் அதில் இரண்டு பிரச்சினைகள் இருந்தன.  சீனியிடம் நான் அடிக்கடி அல்லது தினமுமே ஆங்கிலம் கலவாமல் தமிழ் எழுதுங்கள் என்று சொல்லி வருகிறேன்.  அல்லது சண்டை போட்டு வருகிறேன்.  என் எழுத்தில் பரிச்சயம் உள்ளவர்களுக்குத் தெரியும், நான் மொழித் தூய்மைவாதி அல்ல என்று.  ஆனாலும் தேவையில்லாத இடங்களில் – அருமையான தமிழ் வார்த்தை இருக்கும் இடங்களில் கூட ஏன் ஆங்கிலத்தைப் போட்டு தமிழின் அழகைக் குலைக்க வேண்டும் என்பது என் கேள்வி.  அதற்கு அவர் பதில், இளைஞர்களுக்கு அதுதான் புரிகிறது என்பது.  அதற்கு என் பதில்:  இளைஞர்களுக்குப் புரிந்தால் என்ன புரியாவிட்டால் என்ன.  இப்படித் தொடங்கும் விவாதம் ஒரு முடிவுக்கு வராமல் பாதியில் நின்று விடும்.  அப்படி அவருக்கு யோசனை சொல்லி விட்டு நாமே ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கலாமா என்ற சம்சயம்.  ஆனால் ஜெம் என்று சொன்னால்தான் கதை நிற்கும்.  அவர் ஒரு ஜெம் சார்.  இதுதான் இந்தக் கதையின் சாரம்.  இதை நான் தமிழில் அவர் ஒரு ரத்தினம் சார் என்று சொல்ல முடியாது அல்லவா?  என் பெயர் அறிவழகன்.  அவர் ஒரு அறிவழகன் சார் என்று சொன்னால் அது நக்கல்.  அறிவழகன் என்ற பெயரே நக்கல்தான் என்ற போதிலும் அதற்கு முன்னால் ”ஒரு” போட்டால் முடிந்தது கதை.  இப்படி இந்த ”ஒரு”வினால் சில பிரச்சினைகள் வருவதால்தான் என் ஸீரோ டிகிரி நாவலில் ”ஒரு” போடாமலேயே எழுதி விட்டேன்.  ஆனால் நம்முடைய கதைப் பாரம்பரியமே ”ஒரு”வில்தானே ஆரம்பிக்கிறது?  சரி, அதை விடுங்கள்.  அவர் ஒரு ரத்தினம் சார் என்று என்னிடம் சொன்னால் எனக்கு நிச்சயமாகக் குழம்பி விடும்.  இப்போதே உங்களுக்குக் குழப்பமாகத்தான் இருக்கும், இதில் என்ன குழப்பம் இருக்கிறது என்று.   அந்த வாக்கியத்தைச் சொன்ன நண்பர் அரைத் தூக்கத்தில் இருந்தார்.  அப்படியானால் அவர் ஒரு ரத்தினம் சார் என்று தமிழில் சொல்லியிருந்தால் நான் அவரை உறக்கத்திலிருந்து எழுப்பி விட்டபடியால் உளறுகிறார் என்றே நினைத்திருப்பேன்.  ஆகவே இந்த இடத்தில் ஜெம்தான் சரி.  அவர் ஒரு ஜெம் சார் என்றால் சுலபமாகப் புரிகிறது இல்லையா?  ஆனால் சீனியிடம் என்ன பிரச்சினை என்றால், சுலபமாகப் புரிகிறதுதானே என்று எழுத மாட்டார்.  ஈசியாகப் புரிகிறதுதானே என்று எழுதுவார்.  எனக்குக் கொலை வெறி வரும்.  அட சீனி, இப்படியெல்லாம் எழுதினால் ஒருத்தனும் உங்களை எழுத்தாளன் என்று ஒப்புக் கொள்ள மாட்டான், மாற்றிக் கொள்ளுங்கள் என்பேன்.  எந்த asshole ஒப்புக் கொண்டால் எனக்கென்ன, ஒப்புக் கொள்ளாவிட்டால் எனக்கென்ன?  அறுபது வயது வரை உங்களையே எந்தப் புண்டமவனும் ஒத்துக்கல.  இப்போதான் ஏதோ முதியோர் இட ஒதுக்கீடு மாதிரி உங்கள் பெயரைப் போட ஆரம்பித்திருக்கிறான்கள்.  இந்த முட்டாப்புண்டைங்க என்னை எழுத்தாளன்னு ஒத்துக்கிட்டா என்ன ஒத்துக்காட்டி என்னா?  

சரி, சீனி கதை சீனியின் விதிப்படி நடக்கும்.  நாம் இந்த ஜெம் கதைக்கு வருவோம்.   காலை எட்டரை மணி.  நண்பர் ரத்தினத்தை – ஆமாம், நிஜப்பெயரே ரத்தினம்தான் –  உறக்கத்திலிருந்து எழுப்பினேன்.  இப்படி நிஜப்பெயரைப் போடுவதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது.  சீனியின் பெயரை சீனி என்றே போடலாம்.  காரணம், சீனிக்கு கார்டியன் ஏஞ்ஜல் யாரும் கிடையாது.  இங்கேயும் ஆங்கிலத்தைத் தஞ்சமடைய வேண்டியிருக்கிறது.  காவல் தேவதை என்றால் நன்றாக இல்லை.  ம்ஹும்.  தப்பு.  சீனிக்கு கார்டியன் ஏஞ்ஜல் ஒருத்தர் அல்ல, ஏராளம் உண்டு.  ஆனால் அவரைப் பொறுத்தவரை எல்லா கார்டியன் ஏஞ்ஜல்களுக்கும் அவர்தான் கார்டியன்.  கார்டியன் ஏஞ்ஜல்கள் பெயருக்கு ஏஞ்ஜல்களாக இருக்கலாமே தவிர அவர்களின் உண்மையான ஸ்டேடஸ் என்னவென்றால், அடிமைகள்தான்.  குறைந்த பட்சம் அது என்னுடைய அனுமானம்.  நண்பர் ரத்தினத்தின் கார்டியன் ஏஞ்ஜல் உண்மையிலேயே ஒரு காவல் தெய்வம்.  தேவதை அல்ல, தெய்வம்.  காவல் தெய்வம்.  அதிர்ஷ்டவசமாக அந்தக் காவல் தெய்வம்தான் எனக்கும் காவல் தெய்வமாக அமைந்து விட்டது தெய்வ சங்கல்பம்தான்.  காவல் தேவதை வேண்டாம், அது என்னமோ காதல் தேவதை மாதிரி இருக்கிறது.  வேண்டவே வேண்டாம்.   தெய்வம்தான் சரி.  காவல் தெய்வம்.  அந்தக் காவல் தெய்வம் என்ன சொல்கிறது என்றால், எதிலுமே நீ ரத்தினத்தின் பெயர் போடாதே.  சொல்லப் போனால் என் பெயரையும் போடாதே.  ஏன் இந்த அறிவுரை என்றால், நான் நல்லது என்று எதையாவது எழுதி வைத்தால் அது கெட்டது என்கிறது காவல் தெய்வம்.  சரி, நல்லது எது கெட்டது எது என்ற பஞ்சாயத்து தீரும் வரை நாம் யார் பெயரையும் போடக் கூடாது என்று முடிவு செய்து விட்டேன்.  இருந்தாலும் இன்றைய கதையே ரத்தினம் பற்றியது என்பதால் ரத்தினம் பெயரையே போட்டு விடலாம் என்று முடிவு செய்து விட்டேன்.  காவல் தெய்வம் கோபிக்காது என்று நினைக்கிறேன்.  நம்புகிறேன். 

இப்போது கதைக்குள் நுழைவோம்.  அதற்கு முன் நகுலன் பற்றி ஓரிரு வார்த்தைகள்.  நான் நகுலன் மாதிரி என்று அடிக்கடி சொல்வது வழக்கம்.  இதற்கு அர்த்தம், இருவருக்கும் ஒரே சாயல்.  அவ்வளவுதான்.  அன்றாட வாழ்வில் அந்தச் சாயல் கொஞ்சம் தூக்கலாக இருக்கும்.  நான் நகுலனை முதல் முதலில் சந்தித்த போது அவர் என்னைப் பார்த்ததும் கேட்ட முதல் கேள்வி, இன்ன எழுத்தாளர் இன்ன பெண்ணை (அவரும் ஒரு எழுத்தாளர்) வச்சிண்டிருக்கானா என்பதுதான்.  நான் ஆமாம் என்றேன்.  அவருடைய அடுத்த கேள்வி.  ஆனா அந்தப் பெண் (இன்னொரு எழுத்தாளரின் பெயரைச் சொல்லி) இன்னாரை வச்சிண்டிருக்காளாமே, அது உண்மையா?  ஆமாம் நகுலன்.  இது என் பதில்.  அந்த மாதிரியாக நண்பர் ரத்தினத்தை காலை எட்டரை மணிக்கு உறக்கத்தில் எழுப்பிய நான் ஒரு சக எழுத்தாளரைப் பற்றி நான் கேள்விப்பட்ட ஒரு கிசுகிசு சமாச்சாரத்தைக் கேட்டேன்.  சேச்சே, அவர் ஒரு ஜெம் சார் என்றார் ரத்தினம்.  ஓ என ஏமாற்றத்துடன் நான் இன்னொரு எழுத்தாளர் பற்றிக் கேள்விப்பட்ட இன்னொரு கிசுகிசு சமாச்சாரத்தைக் கேட்டேன்.  சேச்சே, அவரும் ஒரு ஜெம் சார் என்றார் ரத்தினம்.  ரொம்பவே ஏமாற்றமடைந்த நான் இந்த ரெண்டு கிசுகிசு பற்றியும் என்னிடம் சொன்ன மூன்றாவது எழுத்தாளர் பற்றிக் கேட்டேன்.  ஐயோ, அவர் மாதிரி ஜெம்மைப் பார்க்கவே முடியாது சார் என்று சொல்லிக் கொட்டாவி விட்டார் ரத்தினம்.  ரத்தினத்தின் குரல் கரகரவென்றிருந்தது.  தூக்கக் கலக்கம்.  ஒரு தமிழ்ப் படத்தில் ஹீரோ எந்த மொழிக்காரன் என்பதைக் கண்டு பிடிப்பதற்காக – அது ஒரு anti hero சப்ஜெக்ட் – அவனை பயமுறுத்திப் பார்ப்பார்கள்.  பயத்தில் ஒருவன் தன் சொந்த பாஷையில்தானே அலறுவான்.  ஆனால் அந்த நாயகனோ மண்டாரின், ஜெர்மன், ஃப்ரெஞ்ச் என்று எல்லா மொழிகளிலும் கத்துவான்.  அந்த மாதிரி ரத்தினம் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் எல்லாரையும் ஜெம் ஜெம் என்று சொல்வதால் இவரும் தன் பெயருக்கேற்ப ஒரு ஜெம் தான் என்ற முடிவோடு சரி ரத்தினம், போனை வைக்கிறேன் என்று ஏமாற்றத்தோடு முடித்து விட்டு இனி நாமும் ஜெம்மாகவே வாழலாம் என்று முடிவெடுத்து இந்த ஜெம் கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன்.  உங்களுக்கு இந்த ஜெம் கதை பிடித்திருந்தால் நீங்களும் ஜெம்மாக மாறலாம் என்ற இக்’கும் இந்த ஜெம் கதையில் இருக்கிறது என்பதை உணர்வீராக! 

***

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரங்கள்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai