அவதூறுக்கு எதிர்வினை (12)

லக்ஷ்மி ரவணகுமார்:

(அபிலாஷின் ‘மன்னிப்பு’க்கு எதிர்வினை)

அந்த நபருக்காக நீங்க இவ்ளோ வக்காலத்து வேண்டியதில்லை நண்பா. அவர் பதிவுல இருந்த தொனி விமர்சனம் இல்ல சாருவின் மீதான வன்மம். அதை வெளிப்படுத்த உங்களப் பயன்படுத்திக்கிட்டார் அவ்ளோதான். அவர் நல்லவர் வல்லவர்னு நீங்க சர்டிஃபிகேட் குடுக்கறதெல்லாம் நகைச்சுவை. குனிந்து திருடும்போது பின்னால் குத்தப்படுவார்னு எழுதறாரு அந்த வரிகள அந்தப் பதிவுல கமெண்ட் போட்ற மூத்த எழுத்தாளர்கள் லாம் இதுக்குத்தான் குனிஞ்சு திருடக் கூடாதுன்னு சொல்றதுன்னு எழுதறாங்க. எவ்ளோ அயோக்கியத்தனம். நீங்க சொல்ற மாதிரி கொஞ்சமாச்சும் நேர்மையோ அறமோ இருந்திருந்தா இவ்ளோ பேர் கண்டனம் தெரிவிச்சப்பவே பதிவ நீக்கி இருக்கலாமே… அவர் ஒரு விசச்செடி, வக்காலத்து வாங்கி உங்களையும் நஞ்சாக்கிக்காதிங்க.

***

காயத்ரி ஆர்.:

(அபிலாஷின் ‘மன்னிப்பு’க்கு எதிர்வினை)

This is absolutely wrong Abilash. This is not that the first time that man has been casting slur on Charu. Every other day he picks up something on him when he doesn’t have a content…

And if he is a good man like you say, when myself and Ramjee talked and explained to him over the phone yesterday morning, he should have taken the post down. I even told him that I was hurt.

***

மதுரை பூர்ணசந்திரன்:

சத்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த வில்லன் என்ற திரைப்படத்தில் பூ என்ற கேரக்டர் நம்மிடையே உலவினால் அது இவர்தான் தமிழினி இணைய இதழில் வேலை செய்கிறார்.

கட்டுரைகளை திருடி எழுதும் தமிழினி இணைய இதழைச் சேர்ந்த ஒருவர் (பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை ) சாரு மீது அபாண்டமாக கருத்துக்களை தெரிவித்துள்ளார் . இவரின் பதிவுகள் முழுவதுமே தான் லைக் பிச்சை எடுப்பதற்காக போடப்பட்ட அரைகுறை பதிவுகளாகவே தெரிகிறது .

இதைவிட இந்தாளைவிட சக இலக்கிய!!! எழுத்தார்களும் கும்பல் மனநிலையுடன் கமண்ட்களில் பதிவுகளில் சாரு-வை தாக்கத்தொடங்கியுள்ளனர் . இது எப்பொழுதும் நிகழுவதுதான் . யாராவது ஒருவர் சாரு-வை தாக்கிவிட்டால் -கவனியுங்கள் சாருவின் எழுத்தினை விமர்சித்தால் பிரச்சினையில்லை – எதிர்ப்பு தெரிவிக்காவிட்டாலும் மேலும் தூண்டிவிடாமல் இருக்கலாம். ஆனால் மிக கவனமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக கமண்ட்களை தூவிவிடுவார்கள் . உதாரணம் வி.மு. போஸ்ட்டில் மனுஷின் கமண்ட் .அபிலாஷின் செயலுக்கும் கண்டனத்தை தெரிவிக்கிறேன் . எப்பொழுதும் தனிப்பட்ட முறையிலே தாக்கப்பட்டு வரும் சாரு , சக எழுத்தாளர்களால் தனித்தும் விடப்படுகிறார் .

சாரு இதற்கெல்லாம் எப்பொழுதும் கவலைப்பட்டதில்லை . ஆண்டாண்டுகாலமாய் பிரத்யேகமாய் சாரு மீது நடத்தப்படும் தாக்குதல் அனைவரும் அறிந்ததே ; தற்பொழுது அராத்துவையும் சேர்த்து தாக்கத்தொடங்கியிருக்கின்றனர் . இந்த கட்டுரை திருடி எழுத்தாளர் இதை ஒரு வழக்கமாகவே வைத்திருப்பார் போல .பென் டூ பப்ளிஷ் போட்டி முடிவுகளையும் விமர்சித்திருக்கிறார் . வழக்கு போடட்டும் என எதிர்பார்த்தே செய்திருப்பதாக தெரிகிறது . பிரபலமாகும் பைத்தியம் எப்படியெல்லாம் பேசவும் ஆடவும் வைக்கிறது .

மிஷ்கினின் கதாப்பாத்திரத்தை சாருவோடு ஒப்பிட்டு பேசி வருவது, மிஷ்கிநுக்கும் சாருவுக்கும் தற்பொழுது இணக்கம் இல்லாத சூழலை பயன்படுத்தி மிஷ்கினிடம் திரைத்துறையில் சாதகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று எழுதியிருந்தால் மிஷ்கினிடம் மண்டியிட்டு பிச்சை கேட்கலாம் . மிக இரக்க குணம் கொண்டவர் அவர் .பேயையே நல்ல பேயாக காண்பித்தவர் . நீங்கள் மண்டியிடும்பொழுது உங்களுக்காக தன்னை நிச்சயம் தளர்த்திக்கொள்வார் .

தமிழினி பதிப்பக்கத்தார் இவரைப் போன்றோரையெல்லாம் எப்படி பணியில் இன்னும் அனுமதித்திருக்கிறார்கள் ; தமிழகத்தின் ஒரு மூத்த எழுத்தாளரை தன் கேவலமான வசைகளால் வசை பாடுகிறார் . இவ்வளவையும் பார்த்துக்கொண்டு ஏன் மெளனம் காக்கிறார்கள் எனப்புரியவில்லை .

***

ஸ்ரீராம்:

இவன எல்லாம் எட்டு வருஷம் முன்னாடியே வாசகர் வட்டத்துல இருந்து தொரட்டியாச்சு. கடவுள் பாத்துட்டு இருக்கார். இதுக்கு எல்லாம் ஒரு நாள் பதில் சொல்லியே தீரனும்.

***