அவதூறுக்கு எதிர்வினை (13): சுகன் பாரிஸ்

தமிழில் நம்காலத்தின் நுண்ணுணர்வுள்ள இலக்கிய ஆளுமை. பொதுபுத்திகளைச் சமரசம் செய்து எழுதவும் வாசக விருப்பத்தை கணித்து அளவை போட்டு இரண்டு கூடப்போட்டு தள்ளிவிடும் எழுத்துக் கோயம்பேடுகளுக்கு மத்தியில் தன்னுணர்வை நிறுவுவது கடினம்.
உங்களுக்குப் பிடித்த பிரான்ஸிற்கு வந்துவிடுங்கள் , உந்த நிலம் உங்கள் மன நிலைக்குச் சரிவராது ,என பலதடவை சொல்லிவிட்டேன். இன்னும் எத்தனை அவமானங்களை எதிர்கொள்ளப்போகிறீர்களோ தெரியாது.
நாகூர் ஆண்டவர் உங்களுக்கு தற்போதைய நிலையில் மன அமைதியை அளிக்கட்டும்.

***

வினவு காரரைப்போல் இலக்கியத்தை மூடத்தனத்துடன் அணுகுவதற்கு இந்திய அளவில் ஆளில்லை.

ஒழுக்கவாத மதிப்பீடுகளில் இன்றும் இனியெப்போதுமே உழன்று கொண்டிருக்கும் வினவுக்கு சாருவின் எழுத்துலகத்தை விளங்கிக்கொள்ள வறுமை இருக்கும்தான்.


விக்டோரியன் கால ஒழுக்க நீதிகளைக்கொண்ட தீர்ப்பாளர்கள் அவர்கள். ஒரு ராஸ லீலாவை அவர்களில் ஒருவராற்கூட எழுதமுடியாது.

தனது மகனை தனது காதலனுடன் சேர்ந்து கொன்ற ஒரு தாயைக் குறித்து சாருவால் சமூகப் பாலியல் வறட்சி குறித்து எழுதமுடியும், சாருவால் மட்டுமே எழுதமுடியும்.

வினவுகாரர் தெண்டத்துக்கு மார்க்ஸியம் பேசுகிறார்கள்.