அவதூறுக்கு எதிர்வினை (16): லக்ஷ்மி சரவணகுமார்

தன்னை அறிவாளி என்று நம்பிக்கொள்வது ஒருவிதமான மனநோய், இந்த மனநோய் முற்றத் துவங்கும்போதுதான் ஒருவன் மற்றவர்களை சிறுமைப்படுத்தத் துவங்குகிறான். இலக்கியம் யாருடைய அப்பன் வீட்டு சொத்துமல்ல, குடும்பத்திலும் தன்னைச் சார்ந்தவர்களிடமும் வெளிப்படுத்தும் அதிகார தொனியை விமர்சன அளவுகோலாக வைத்துக்கொண்டு மற்றவரை விமர்சிப்பது சாதிய அதிகாரத்தின் இன்னொரு வடிவம்தான்.
ஒருவரின் எழுத்தோடு முற்றாக உடன்படமாட்டேன் என்று சொல்ல எவருக்கும் உரிமையுண்டு, ஆனால் ஒருவரை திருடன் பிச்சைக்காரன் என்று சொல்வதெல்லாம் கடைந்தெடுத்த சாதிய மனோபாவத்தின் மனநோய். சாரு நிவேதிதாவைத்தானே அந்த நபர் அவமதிக்கிறார் நமக்கென்ன என்று கடந்து செல்லக் கூடாது, இந்த மமதையும் அதிகாரத் திமிரும் நாளை தமிழில் எழுதும் அத்தனை பேரையும் சிறுமைப்படுத்தும்.

*பெயர் குறிப்பிட்டு எழுதுமளவிற்கு அந்த மனநோயாளி பெரிதாக எதையும் சாதித்திருக்கவில்லை என்பதால், பெயரைக் குறிப்பிடாமல் தவிர்க்கிறேன்.