நான்தான் ஔரங்கசீப்…: ஓர் அறிவிப்பு

ஔரங்கசீப் நாவலுக்கு நான் எதிர்பாராத அளவுக்கு ஆதரவு குவிகிறது. நிச்சயமாக இந்த அளவுக்கு எல்லோருக்கும் பிடிக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால், இந்த வகைமையில் நான் இதுவரை எழுதியதில்லை. தன்னம்பிக்கை இல்லாமலேயேதான் எழுதினேன். எல்லோருக்கும் பிடித்தது மகிழ்ச்சி.

அதை விட ஆச்சரியம், எல்லோரும் தினம் ஒரு அத்தியாயம் வேண்டும் என்று கேட்கிறார்கள். எழுதலாம்தான். தினம் 1000 வார்த்தைகள் எழுத முடியாதா என்ன? ஆனால் பயமாக இருக்கிறது. சமயங்களில் ஆய்வுக்காக நாள் கணக்கில் படிக்க வேண்டியிருக்கிறது. இப்போது பாரதத்தில் சில பர்வங்களைப் பத்து நாட்களாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். ஔரங்கசீப்புக்காகத்தான். ஒரு வார்த்தை எழுதவில்லை. படிப்பு மட்டுமே.

தினம் ஒரு அத்தியாயம் என வாக்களித்து விட்டு இப்படி வந்து மாட்டிக் கொள்ளக் கூடாது. ஆனால் இனி வாரம் மூன்று அத்தியாயம் வரும். ஞாயிறு, புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாலை நான்கு மணிக்கு.

இன்னும் கொஞ்சம் அதிகம் எழுதி விட்டு மாதம் பதினைந்து அத்தியாயங்கள் கொடுக்க முடிகிறதா பார்க்கிறேன். ஒன்று விட்டு ஒருநாள்.

இப்போதைக்கு ஞாயிறு, புதன், வெள்ளி. மாலை நான்கு மணி. இன்று மாலை நான்கு மணிக்கு 7ஆம் அத்தியாயம்.