பாலு மகேந்திரா பற்றி…

மறைந்த பாலு மகேந்திரா பற்றி என்னுடைய எண்ணங்களை எழுத வேண்டும் என்றால் ஒரு புத்தகமே எழுதலாம் போல் இருக்கிறது.  இவ்வளவுக்கும் ஒரே ஒரு முறைதான் அவருடைய பட்டறைக்குச் சென்று சந்தித்துப் பேசியிருக்கிறேன்.  மற்ற சந்திப்புகள் சம்பிரதாயமாக புத்தக வெளியீட்டு விழாக்களிலும் ப்ரிவியூ காட்சிகளிலும் நடந்ததுதான்.  ஆனால் முடிந்தவரை அப்போதெல்லாம் அவர் பக்கத்தில் சென்று அமர்ந்து கொள்வேன்.  கடந்த ஒரு வாரமாக அவரைப் பற்றியே கனத்த இதயத்துடன் யோசித்துக் கொண்டிருந்தேன்.  தலைமுறைகள் படத்தைப் பார்த்த பிறகு பாலு தான் நான், நான் தான் பாலு என்று தோன்றிக் கொண்டே இருந்தது.  அவருடைய மாணவர்களுக்கு என்னைப் பிடிக்காது.  அவர்களுடைய படங்களை நான் மிகக் கடுமையாகத் தாக்கி எழுதியிருக்கிறேன்.  (விதிவிலக்கு, வெற்றிமாறன்).  அவர்களின் தேவதூதனான இளையராஜாவை விமர்சித்து அவர்களின் கடும் வெறுப்புக்கு ஆளாகியிருக்கிறேன்.  என்னுடைய விமர்சனங்கள் அனைத்தும் விருப்பு வெறுப்பின் அடிப்படையில் அமைந்தவை அல்ல என்பது அவர்களுக்குப் புரியுமா என்று எனக்குத் தெரியாது.  தலைமுறைகளில் இளையராஜாவின் இசை சர்வதேசத் தரத்தில் அமைந்திருந்தது என்று எழுதியிருந்தேன்.  பாலுவின் மறைவு பற்றி அனைவருடைய எழுத்தையும் படித்தேன்.  அதில் என்னை மிகவும் பாதித்தது பாலுவிடம் மிகவும் நெருங்கி இருந்த சுகாவின் பதிவு.  அதை இங்கே பகிர்கிறேன்…

http://solvanam.com/?p=31399

Comments are closed.