ஔரங்ஸேப் 100 விழா (2)

விழா பற்றி எழுத இன்னும் நிறைய உள்ளது. நாளை எழுதுவேன். இன்று ஔரங்ஸேப் அடுத்த அத்தியாயம் அனுப்ப வேண்டும்.

19ஆம் தேதி விழா முடிந்து இரவு ஒன்பது மணி அளவில் டிஜே பாடல்களைப் போட ஆரம்பித்தார். கோவாவில் புத்தாண்டு சமயத்தில் நடக்கும் இசைக் கச்சேரிகளைப் போன்ற ஒலி, ஒளி அமைப்பு. வனம் வேறு. பத்து மணியிலிருந்து இரண்டு மணி வரை ஆடினேன் என்று நினைக்கிறேன். அதையெல்லாம் தினேஷ் குமாரை என் ஐஃபோன் மூலம் பதிவு செய்யச் சொன்னேன். அத்தனையையும் பதிவு செய்தார். நாம் என்ன மைக்கேல் ஜாக்ஸனா, அல்லது, உதய் ஷங்கரா? நான் ஆடிய எல்லா பதிவுகளையும் என் ஐஃபோனிலிருந்து நீக்கி விட்டேன். இது ஃப்ரான்ஸ் அல்ல. எழுபது வயதில் ஒருவன் ஐந்து மணி நேரம் ஆடினான் என்பது அங்கே கொண்டாட்டம். இங்கே ஆள் ஆளுக்கு புத்திமதிப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடி வருவார்கள். ஒடம்பப் பாத்துக்குங்க, ————–ஐப் பாத்துக்குங்க என்று. ஒடம்பப் பாத்துக்கிட்டதாலதானே இப்படி ஆடுகிறேன்?

சரி, நான் எப்படி ஆடினேன்? இந்தப் பெண் எப்படி ஆடுகிறாளோ அப்படி ஆடினேன். என்ன ஒரு ஆட்டம். என்ன ஒரு கொண்டாட்டம். அவளுடைய உடல் மொழியை கவனியுங்கள். இப்படி ஒரு ஆட்டத்தை நான் கண்டதில்லை. என்ன சிரிப்பு, என்ன அமர்க்களம். அதகளம்…

https://www.facebook.com/watch?v=1230998867722026