109ஆவது அத்தியாயமே இறுதி அத்தியாயம். கொஞ்ச நேரம் முன்புதான் எழுதி முடித்தேன். இப்படியெல்லாம் ஒரு நாவலை இதுவரை என் வாழ்வில் முடித்ததில்லை. காரணம், முடிக்கும்போது என் ஆன்மா விம்மியது, கேவியது, அழுதது. கண் கலங்கி கண்ணீர் வழிந்தது.
விரைவில் நாவலை செப்பனிட்டு பதிப்பகத்துக்கு அனுப்ப வேண்டும். செப்பனிடுதல் என்றால் இன்னும் பத்து இருபது அத்தியாயங்கள் சேரும். எழுதி வைத்திருக்கிறேன். அதற்கு ஒரு வாரம் எடுக்கலாம். எப்படியிருந்தாலும் இன்னும் இரண்டு மாதங்களில் நாவல் உங்கள் கைகளுக்குக் கிடைக்கும். பிஞ்ஜில் கிடைப்பதை விட நாவல் ஒன்றரை மடங்கு பெரிதாக இருக்கும். பிஞ்ஜில் நூறோடு நிறுத்திக் கொள்ளச் சொன்னார்கள். பிஞ்ஜில் அநேகமாக ஔரங்ஸேப் மட்டும்தான் இத்தனை நீளம் போன ஒரே நாவல். பிஞ்ஜ் குழுவினருக்கு மனமார்ந்த நன்றி.
மீண்டும் சொல்கிறேன், பிஞ்ஜில் கிடைப்பதை விட புத்தகமாக நாவலில் பத்து இருபது அத்தியாயங்கள் அதிகமாக இருக்கும்.