நாங்கள்ளாம் அந்தக் காலத்துல… – அராத்து

நாகார்ச்சுனனின் கட்டுரையை வெளியிட வேண்டாம் என்றுதான் நண்பர்கள் சொன்னார்கள். நான்தான் கொஞ்சம் பழைய நினைப்பில் போட்டு விட்டேன். அந்தக் காலத்தில் நான் இந்த ஆட்களோடு சேர்ந்து கொண்டு பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு பக்கம் மேற்கத்திய என்று ஆரம்பித்தாலே குண்டாந்தடியால் அடிக்கும் விக்ரமாதித்யன் கோஷ்டி ஒரு பக்கம்; இன்னொரு பக்கம் இந்த snobbish கும்பல். இத்தனை ஸ்நாபிஷ் ஆக இருந்ததால்தான் பத்து ஆண்டுகளுக்கு மேல் இந்த அமைப்பியல் கோஷ்டியால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. மேற்குலகம் பிடிக்காவிட்டாலும் தங்கள் ஒரிஜினாலிட்டியால் விக்கி கோஷ்டி தப்பியது. அந்த ஒரிஜினாலிட்டி மீது எனக்கு என்னதான் கடும் விமர்சனங்கள் இருந்தாலும் ஸ்நாப் கும்பல் இன்று ஆட்டத்திலேயே இல்லையே?

நாகார்ச்சுனன் கட்டுரையைப் பீச்சாங்கையால் தூக்கிக் கடாசும் அராத்து கட்டுரை கீழே:

எம் டி எம் அவர்கள் ஜெயமோகன் தளத்தில் சாருவைப்பற்றி வெளியாகும் கட்டுரைகள் ஒன்றுமே இல்லை என்பது போலவும் , நாகார்ச்சுனன் மற்றும் பிரேம் ரமேஷ் கட்டுரைகளைப் படித்துப் பாருங்கள் என்றும் எழுதியிருந்தார். சமீபத்தில் சாரு நிவேதிதாவும் நாகார்ச்சுனன் கட்டுரையை பிரசுரித்து இருந்தார். வேலை மெனக்கெட்டு படித்தேன். டாஸ்மாக்கில் குடித்து விட்டு , வடை பஜ்ஜி , பரோட்டா ஊசிப்போன சால்னா குடித்து விட்டு வாந்தி எடுத்தால் நாற்றம் அடிக்கும், அந்த நாத்தம் சகிக்காது. ஸ்காட்ச் , விலை உயர்ந்த ரம் , ஓட்கா , டக்கீலா என கலந்து கட்டி குடித்து விட்டு , பிரியாணியை முக்கி விட்டு வாந்தி எடுத்தாலும் நாறும் , அந்த நாத்தத்தையும் உணரலாம்.

ஆனால் இலக்கியத்தில் ஒரு ஆபத்து இருக்கிறது. இண்டெலக்சுவல் வாந்தியின் நாற்றம் தெரியாது. நாசூக்காக வண்டி வண்டியாக வாந்தி எடுத்துக்கொண்டே இருக்கலாம். யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். சீந்தக் கூட ஆள் இருக்காது.

எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் நாவலை சாக்காக வைத்து நாகார்ச்சுனன் செய்திருப்பதும் இதுதான். கட்டுரை ஆரம்பித்து பத்து பக்கம் வரை (இதை போய் எண்ணுகிறீர்களா? உங்களைப்போன்ற ஆசாமிகளுக்கெல்லாம் நாகார்ச்சுனன் தான் சரி)நாவலைப்பற்றி பேச்சு மூச்சே கிடையாது.

கடுமையான கஞ்சா குடிக்கி கூட இதை விட பெட்டராக உளறுவான். நாகார்ச்சுனன் இதுவரை தான் படித்தது , தனக்கு தெரிந்த தத்துவவாதிகள் பெயர்கள் என போட்டு “ஃபேக் இண்டெலக்சுவல்” வாந்தி எடுத்துக்கொண்டே இருக்கிறார். கட்டுரை முழுக்க ஸ்னாப்பிஷ் தனம் (snobbish).அடிப்படையில் சாருவின் எழுத்தும் , சாருவின் அனைத்து படைப்புகளும் நாகார்ச்சுனனின் இந்த கட்டுரைக்கும் , இவ்வகை எழுத்து முறைக்கும் எதிரானவை. கடுமையாக விமர்சிப்பவை. எனக்கு இன்னொன்றும் விசித்திரமாகத் தோன்றியது. எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் நாவல் வந்த பிறகு எழுதப்பட்ட இந்த கட்டுரையை சாரு நாவலிலேயே கடுமையாக விமர்சித்து இருக்கிறார்

🙂

ஜெயமோகன் தளத்தில் வெளிவந்த சுனில் கிருஷ்ணனின் கட்டுரையும் , கார்ல் மார்க்ஸின் கட்டுரையும் அற்புதமானவை. எந்தப் பூச்சும் இல்லாமல் நேரடியாக , அதே நேரத்தில் கவனமாக வாசிக்கப்பட்டு , ஆழமாக உள்வாங்கி , சிந்தித்து எழுதப்பட்டவை. ஒரு சோகமான சினிமா காட்சியில் நடிக்கும் ஒரு நடிகை கடுமையான மேக் அப் போட்டுக்கொண்டு , தன் தொப்புளைக் காட்டிக்கொண்டும் , க்ளீவேஜைக் காட்டிக்கொண்டும் அழுவதற்கும் , நாகார்ச்சுனன் கட்டுரைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. முன்னது பெட்டர். அதாவது சோகக் காட்சி அபத்தமாக இருந்தாலும் தொப்புளையும் க்ளீவேஜையுமாவது ரசிக்கலாம் என்கிறேன். இப்போதுதான் புரிகிறது , பின் நவீனத்துவம் இங்கே அறிமுகமான போது ஏன் மரபார்ந்த எழுத்தாளர்கள் அதை எதிர்த்தார்கள் என்றும் முகம் சுளித்தார்கள் என்றும். அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரில கொடை புடிப்பான் ரேஞ்சுக்கு ஆடியிருக்கிறார்கள். இந்தக் கண்றாவிக் கூத்துக்கு , இலக்கியம் முன்னோக்கி போகலைனாலும் பரவால்ல , இப்டி கழிசடை ஆக வேண்டாம் என்றுதான் எதிர்த்திருக்கிறார்கள் என்று புரிந்து கொள்கிறேன். இந்த க்ராஸ் ஃபையரில் தேவையில்லாமல் பின் நவீனத்துவ இலக்கியம் படைத்துக்கொண்டிருந்த சாருவும் மாட்டிக்கொண்டார்.

இதைப்போன்ற ஒரு நாசகார கும்பலோடு பழகிக்கொண்டிருந்த சாரு நிவேதிதா எப்படித் தப்பித்து வந்தார் என்பது எனக்கு கடும் ஆச்சரியமாக இருக்கிறது. அடிப்படையில் சாரு ஒரு எழுத்தாளராக இருந்தது மற்றும் அவருடைய கிரியேட்டிவிட்டி தான் அவரைக் காப்பாற்றியது என்று நினைக்கிறேன். இண்டெலக்சுவல் , ஜீனியஸ் என்பவன் வேறு. அவனைப் படித்து அரைகுறையாகப் புரிந்து கொண்டால் கூட ஓக்கே. ஆனால் “ஓவராக” புரிந்து கொண்டு மெண்டல் ஆனால்தான் ஆபத்து. அந்தக் காலத்தில் ஃபூக்கோ சொன்ன அதிகாரம் மற்றும் அப்போது அறிமுகமாகியிருந்த பின் நவீனத்துவம் என்பதை தங்கள் இஷ்டத்துக்கு புரிந்து கொண்டு சன்னத நடனம் புரிந்திருக்கிறார்கள்.

ஒரு கான்செப்டை மட்டும் வைத்துக்கொண்டு மயிரைக்கூட புடுங்க முடியாது. அதனால்தான் இவ்வகை கோஷ்டிகள் நவீன தமிழ் இலக்கியத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு விட்டன. கருங்கற்களை கிரஷரில் போட்டு சுக்கு நூறாக்கி , அதன் மேல் தண்ணீர் தெளித்து , ஒரு துணியில் சுற்றி பிழிந்தால் என்ன வரும் ? துறை சார் வல்லுனர்களுக்கும் இலக்கியத்துக்கும் என்ன சம்மந்தம். எந்தத் துறையாக இருந்தாலும் அதில் வறட்டுத்தனம் தான் இருக்கும். இலக்கியம் தர்க்கம் , வறட்டுத்தனம் இதற்கெல்லாம் அப்பாற்பட்டது. இலக்கியம் ரசனையும் , தீர்க்க தரிசனமும் , உள்ளுணர்வும் , அறமும் மற்றும் இன்னும் பல (!) சார்ந்தது. துறை சார் கோஷ்டிகள் (தத்துவம் உட்பட) மற்ற வாசகர்கள் வாசிப்பது போல வாசிப்போடு நிறுத்திக்கொள்ளலாம். இலக்கியம் படைக்க வருகிறோம் , இலக்கியத்தை விமர்சிக்க வருகிறோம் என்றால் இப்படித்தான் , துருப்பிடித்த ஆணிகளை எடுத்து உடல் முழுதும் கீறிக்கொண்டு பார்ப்பவன் புட்டத்தில் எல்லாம் சொருகுவது போல ஆகி விடும்.

வாழ்வின் மீது கடும் அவநம்பிக்கை இருப்பவர்களும் , ஏன் தான் வாழ வேண்டும் என்ற விரக்தியில் இருப்பவர்களும் நாகார்ச்சுனனின் அந்தக் கட்டுரையை வாசியுங்கள். நம் நிலைமை எவ்வளவோ தேவலாம் என ஜாலி ஆகி விடுவீர்கள். பி.கு : நாகார்ச்சுனனின் விமர்சனத்தில் இருந்து எதையும் மேற்கோள் காட்டவில்லை மற்றும் அதில் இருந்து எதையும் குறிப்பாக எடுத்து ஏன் எதிர்வாதம் செய்ய வில்லை என்றால், மொத்தமும் குப்பை…