சவச்சீலைகளிலிருந்து உடல்களை விடுவிக்கும் எழுத்து: போகன் சங்கர்

”நவீன தமிழ் இலக்கியத்துக்கு சாருவின் முக்கியமான பங்களிப்பு நீண்ட காலமாக அது அணிந்துகொண்டிருந்த அதன் கோஷாவை விலக்கியது. முழுமையாக உடுத்திக்கொண்டே குளித்துக்கொண்டிருந்த புணர்ந்துகொண்டிருந்த ஆண் உடல்களையும் பெண் உடல்களையும் அவற்றைச் சுற்றியிருந்த சவச்சீலைகளிலிலிருந்து விடுவித்தது.” இந்த மேற்கோள் போகன் சங்கருடையது. என் எழுத்து பற்றி அபிலாஷ், கார்ல் மார்க்ஸ், காயத்ரி, அராத்து, சுனில் கிருஷ்ணன் போன்ற பல நண்பர்கள் எழுதியிருக்கிறார்கள். என் எழுத்து உலகில் நுழைய இவர்கள் எழுதிய கட்டுரைகள் உதவும். அந்த வரிசையில் என் எழுத்து பற்றி எழுதப்பட்ட மிக முக்கியமான கட்டுரை போகன் சங்கர் எழுதியது.

மூன்று நாட்களாக ராஜபாளையத்தில் இருந்ததால் இங்கே பதிவேற்றம் செய்ய முடியாமல் போனது.

நான்தான் ஔரங்கசீப் : ஒரு பின்நவீனத்துவ காவியம் – போகன் சங்கர் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)