ஆட்டோநேரட்டிவ் பப்ளிஷிங் தொடக்க விழா

கொரோனா அறிமுகம் ஆனதிலிருந்தே வாசகர் வட்ட சந்திப்புகள் எதுவும் நடந்த்தில்லை.  கொரோனா போன பிறகு ஆரோவில்லில் மூன்று நான்கு முறை சந்தித்தோம்.  ஒவ்வொரு சந்திப்பிலும் சுமாராக நாற்பது ஐம்பது பேர் வந்திருந்தார்கள்.  ஆனாலும் ஆரோவில் வீடு எங்கள் வீடாக இருப்பதால் ஒரு மலையடிவாரத்திலோ கடல்கரையிலோ சந்திப்பது போல் இல்லை.

இப்போது ஆட்டோநேரட்டிவ் பதிப்பகத்தின் தொடக்க விழாவும், அராத்துவின் நூல்கள் வெளியீடும் ஒன்றாக நடக்க உள்ளது. 
இரண்டும் பதினாறாம் தேதி இரவு பத்து மணியிலிருந்து ஒரு மணி வரை நடைபெறும்.  எல்லாம் நம்முடைய வாசகர் வட்டம்தான்.  வரும் பதினேழு பதினெட்டு தேதிகளில் நான் முழுக்க முழுக்க விஷ்ணுபுரம் வட்ட நண்பர்களோடும் விருது விழாவிலும் மும்முரமாக இருப்பேன் என்பதால் நம்முடைய வாசகர் வட்ட நண்பர்கள் என்னை பதினாறாம் தேதி இரவு பத்து மணியிலிருந்து ஒரு மணி வரை சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கலாம்.

அனைவரும் வாருங்கள்.  ஒரு மணிக்கு மேல் உறங்கப் போய் விட வேண்டும் என்று இருக்கிறேன்.  வழக்கம் போல் காலை ஐந்து மணி வரை பேசிக் கொண்டிருந்தால் மறுநாள் சுறுசுறுப்பாக இராது.  அதனால் ஒரு மணி வரைதான்.  இந்தக் கணக்கு எனக்கு மட்டும்தான். மற்றபடி அராத்து, வினித் மற்றும் நண்பர்கள் விடிய விடிய பேசிக் கொண்டிருப்பார்கள்.

https://www.facebook.com/groups/autonarrativeinagural/

விழாவுக்கு வருபவர்கள் இந்தக் குழுவில் இணைந்து கொள்ளவும்.

நிகழ்ச்சி நடக்கவிருக்கும் தோட்டம் வடசித்தூர் எனும் ஊர்.

கோவையிலிருந்து போத்தனூர்-செட்டிபாளையம்-வடசித்தூர்-சமத்துவபுரம்!

அல்லது

கோவை-கிணத்துக்கடவு-காட்டம்பட்டி சாலை-ஶ்ரீ ஈஸ்வர் எஞ்சினியரிங் காலேஜ்-சமத்துவபுரம் என இரண்டு ரூட்டிலும் வரலாம்.

பேருந்தில் வருவோர் வடசித்தூர் சமத்துவபுரம் நிறுத்தத்தில் இறங்கி நடந்தும் வரலாம்(ஒரு கி.மீ+ தூரம்).

மெயின் ரோட்

10°49’46.5″N 77°04’14.4″E

https://maps.app.goo.gl/JxhNZn5Y85YHtgTr8?g_st=ic

தோட்டம்

10°49’05.9″N 77°04’01.8″E

https://maps.app.goo.gl/8NzWXxzKzUNfusSL9?g_st=ic