உங்களுக்கு DJ என்றால் என்னவென்று தெரியுமா? தெரியாது என்றால் இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். மேலே ஒரு வார்த்தை கூட படிக்க வேண்டாம். நீங்கள் மார்க்கேஸ், போர்ஹேஸ் போன்றவர்களைப் படிப்பதோடு வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கலாம். டீஜே என்றால் தெரியும் என்றால் மேலே படியுங்கள்.
டீஜேக்களை பப்பில், டான்ஸ் பார்களில் பார்க்கலாம். குறுந்தாடி வைத்துக் கொண்டு அவ்வப்போது குட்டியூண்டு கிளாஸ்களில் டக்கீலா மாதிரி சரக்கு அடித்துக் கொண்டு, அல்லது பியர் கிளாஸ்களோடு ஏதோ ஒரு எந்திரத்தில் மேலும் கீழும் எதையோ இழுத்துக் கொண்டிருப்பார்கள். நீங்கள் டீஜே ஆக வேண்டுமானால் அதற்கென்று படிக்க வேண்டும். சும்மாவேனும் ஒலியைப் பார்த்து இழுத்து இழுத்து விடுவதல்ல டீஜேவின் வேலை. டிஸ்க் ஜாக்கியின் வேலை க்ளாஸிகல் இசையில் ஒரு கண்டக்டரின் வேலை போன்றது. இசையை யாரோ உருவாக்கி வைத்திருப்பார். கண்டக்டர் அதைத் திரும்ப இசைக்க வேண்டும். டிஸ்க் ஜாக்கியிடம் இசை கொடுக்கப்பட்டிருக்கும். அதை அவர் அத்தனை ரசிகர் குழுவினரிடையே எடுத்துச் செல்ல வேண்டும். எப்படி என்பதுதான் வித்தை. எந்த இடத்தில் எதைக் கூட்டுவது, எதை இறக்குவது. கூடவே நடனம். கூட்டத்தை உற்சாகப்படுத்துவது. வேலைக்காரராக இல்லாவிட்டால் அடுத்த வாரம் ஒரு ஆள் கூட வர மாட்டான். பப்பையே இழுத்து மூட வேண்டி வரும். டீஜேக்களின் சம்பளம் லட்சங்களில். எனக்குப் பிடித்த ஒரு டீஜே கோடீஸ்வரர். மார்ட்டின் கேரிக்ஸ் என்று பெயர். கேட்டுப் பாருங்கள்.
தாய்லாந்து. எந்த ஊர் என்று தெரியவில்லை. யார் எடுத்தது என்றும் தெரியவில்லை. கொஞ்ச நேரம் நான் டீஜேயாக இருந்தேன்.