பெங்களூரு இலக்கிய விழா

பெங்களூரில் ஆட்டா கலாட்டா என்ற பெயரில் ஒரு புத்தகக் கடை உள்ளது. அது ஆண்டு தோறும் இந்திய அளவில் எழுதப்படும் நூல்களுக்குப் பல பிரிவுகளில் விருது வழங்குகிறது. அதில்தான் 2024க்கான மொழிபெயர்ப்பு நூல்களின் நெடும்பட்டியலில் நான் எழுதிய ஔரங்ஸேப் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு (Conversations with Aurangzeb: A Novel) இடம் பெற்றிருக்கிறது. விருது வழங்குவதோடு அல்லாமல் ஆட்டா கலாட்டா பெங்களூரில் ஆண்டு தோறும் ஒரு இலக்கிய விழாவையும் நடத்துகிறது. இந்த ஆண்டு விழாவுக்கு நான் அழைக்கப்பட்டிருக்கிறேன். … Read more

அப்பா: உலகச் சிறுகதைகள்: ரிஷான் ஷெரீப்

என் நண்பர் ரிஷான் ஷெரீஃபுக்கு நேற்று (3.11.2024) பிறந்த நாள். புகைப்படத்தில் பார்ப்பதற்கு இருபத்தோரு வயது இளைஞராகத் தெரிகிறார். நேரில் சந்தித்தது இல்லை. ரிஷான் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். தி.ஜானகிராமனுக்குப் பிறகு என்னை மயக்கி வசியப்படுத்திய மொழி ரிஷானுடையதுதான். எங்கிருந்து இந்த மொழிநடையைக் கற்றார் என்பதுதான் பெரும் ஆச்சரியமாக இருக்கிறது. சி. மோகனின் மொழிநடையும் வசியம் செய்வது போல் இருக்கும். ஆனால் மோகன் என் வயதுக்காரர். ரிஷானுக்கோ என் பேரன் வயது. அதனால்தான் ஆச்சரியம். ஃபேஸ்புக்கில் நேற்று … Read more