அப்பா: உலகச் சிறுகதைகள்: ரிஷான் ஷெரீப்

என் நண்பர் ரிஷான் ஷெரீஃபுக்கு நேற்று (3.11.2024) பிறந்த நாள். புகைப்படத்தில் பார்ப்பதற்கு இருபத்தோரு வயது இளைஞராகத் தெரிகிறார்.

நேரில் சந்தித்தது இல்லை. ரிஷான் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். தி.ஜானகிராமனுக்குப் பிறகு என்னை மயக்கி வசியப்படுத்திய மொழி ரிஷானுடையதுதான். எங்கிருந்து இந்த மொழிநடையைக் கற்றார் என்பதுதான் பெரும் ஆச்சரியமாக இருக்கிறது. சி. மோகனின் மொழிநடையும் வசியம் செய்வது போல் இருக்கும். ஆனால் மோகன் என் வயதுக்காரர். ரிஷானுக்கோ என் பேரன் வயது. அதனால்தான் ஆச்சரியம். ஃபேஸ்புக்கில் நேற்று ரிஷான் எழுதியதை கீழே தருகிறேன்:

இன்று (3.11.2024) ‘அப்பா’ எனும் எனது புதிய நூல் Amazon வழியாக உலகம் முழுதும் வெளியாகிறது. ‘அப்பா’ எனும் தலைப்பிலான இந்த உலகச் சிறுகதைத் தொகுப்பில் நான்கு நெடுங்கதைகளோடு மொத்தம் பன்னிரண்டு சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன.

ஆஸ்கார் விருதை வென்ற கதையை எழுதிய எழுத்தாளர், நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட எழுத்தாளர் உள்ளிட்ட சர்வதேச விருதுகளுக்குச் சொந்தக்காரர்களான உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் கதைகள் இவை.

‘அப்பா’ நூலை இந்திய வாசகர்கள் கீழுள்ள இணைப்பில் பதிவிறக்கிக் கொள்ளலாம்.

https://www.amazon.in/dp/B0DLT54HSM

சர்வதேச வாசகர்கள் கீழுள்ள இணைப்பில் பதிவிறக்கிக் கொள்ளலாம்.

https://www.amazon.com/dp/B0DLT54HSM

Today marks the official release of my new book, “Appa,” available worldwide on Amazon! This collection features twelve captivating short stories alongside four powerful novellas, showcasing the incredible talent of world-renowned writers.

Among these remarkable works are award-winning pieces, including an Oscar-winning story and a Nobel Prize nominee. You can download your copy from these links:

Indian readers: https://www.amazon.in/dp/B0DLT54HSM

Readers around the world: https://www.amazon.com/dp/B0DLT54HSM

Grab your copy today and join me on this literary journey!