அன்பு குறித்து ஒரு புகார் மனு
இதுதான் நான் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் நாவலின் தலைப்பு. நேற்று மனுஷிடமும் நேசமித்ரனிடமும் அராத்துவிடமும் பேசினேன். இதே வார்த்தைகளை வைத்து வெவ்வேறு விதமாக யோசித்தோம். கடைசியில் இந்தத் தலைப்பை முடிவு செய்தேன். முடியும் தறுவாயில் (பல எழுத்தாளர்கள் தருவாயில் என்று போடுகிறார்கள்!) இருக்கிறது. இன்றோ நாளையோ முடித்து விடுவேன். புத்தகத்தில் 200 பக்கம் வரும். ஔரங்ஸேப் மாதிரி இல்லாமல் முழுக்க முழுக்க ஆட்டோஃபிக்ஷன். இனிமேல் ஆட்டோஃபிக்ஷன் எழுத சரக்கு இல்லை என்று நினைத்தேன். எழுத்தாளர்களுக்கு அப்படியெல்லாம் இல்லை என்று தோன்றுகிறது. நேற்றுதான் ஒரு மெஸேஜ் வந்தது. என்னை சீக்கிரம் வந்து புசி என்று. ஒரு ஞானியென்றும் பாராமல் இப்படிப் படுத்தினால் எப்படி?