ஒரு மூடனும் ஒரு தெருநாயும்…

nvivek51@gmail.com> wrote:

Just saw that “partha nyapakam illaiyo” post. that was well below the belt. i didn’t expect this from you. please stop posting such nonsense. thanks

நான் உறங்கி எழுந்ததும் முதல் முதல் செய்யும் வேலை எனக்கு வரும் ஆபாசக் கடிதங்களையும், வசை கடிதங்களையும் படிப்பதுதான்.  இன்று காலை ஐந்தரை மணிக்கு மேற்கண்ட வசை கடிதத்தைப் படித்தேன்.  பொதுவாக வசை கடிதங்களுக்குப் பதில் எழுத மாட்டேன்.  இருந்தாலும் மேற்கண்ட வசை கடிதத்துக்குப் பதில் எழுத வேண்டும் என்று தோன்றியது.  பின்வருமாறு காலை ஐந்தரை மணிக்கு பதில் எழுதினேன்.  மிகவும் நிச்சலனமான மனநிலையில் எழுதப்பட்ட கடிதம் என்னுடையது.

நீங்கள் உத்தமத் தமிழ் எழுத்தாளரின்  வாசகரா?  அப்படியாயின் உங்களுக்காகப்  பரிதாபப்படுகிறேன்.  நீங்கள் உ.த.எ.  வாசகராக இருக்கத் தகுதியில்லை.  கேலி கிண்டல் என்பதையெல்லாம் கூட சகித்துக் கொள்ள முடியாத உங்களைப் போன்ற மூடர்கள் இலக்கிய வாசகராக இருப்பது பரிதாபத்துக்குரியதுதான்.  இலக்கியத்துக்குச் சம்பந்தம் இல்லாத உங்களைப் போன்றவர்களின் முட்டாள்தனமாக அறிவுரைகள் எனக்குத் தேவையில்லாதது.  நீங்கள் என் எழுத்தை  நான்சென்ஸ் என்று கருதினால் ஏன் என்னைப் படிக்கிறீர்கள்?  எவனாவது தனக்குப் பிடிக்காததைப் படிப்பானா?
மேற்கண்ட என் கடிதத்துக்கு அன்பர் விவேக் பின்வருமாறு பதில் எழுதியுள்ளார்.  அந்தக் கடிதம் இதோ:
கேலி கிண்டல் இதையெல்லாம் கூட சகித்துக் கொள்ள முடியாத உங்களைப் போன்ற மூடர்கள் இலக்கிய வாசகராக இருப்பது ////.

.
Oh You call this dog-fight literature…then i am sorry i am illiterate about literature.
.
இலக்கியத்துக்குச் சம்பந்தம் இல்லாத உங்களைப் போன்றவர்களின் முட்டாள்தனமாக அறிவுரைகள் எனக்குத் தேவையில்லாதது////
.
I just sent this to raise ur B.P and you have fallen for this…ha ha ha pity your so called 24×7  zen state.You don’t have the rights to claim to be in Zen state.Barkers cant claim to be Zen.
.

***

மேற்கண்ட வசைக்கு நான் எழுதிய பதில் கீழே:
என்னுடைய ரத்தக் கொதிப்பை அதிகப்படுத்தினால் நான் சீக்கிரம் சாவேன்.  நான் சீக்கிரம் சாவது உங்களுக்கு உகந்த விஷயம் எனில் நீங்கள் தொடர்ந்து என் ரத்தக் கொதிப்பை அதிகரிக்க முயற்சி செய்யலாம்.  உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துகிறேன்.  ஆனால் எல்லா செயலுக்கும் எதிர் வினை என்ற ஒன்று இருக்கிறது.  மேஜையின் மீது தண்ணீரை ஊற்றினால் அது கீழே தான் விழும்.  மேலே ஆகாயத்தை நோக்கிப் போகாது.  என் ரத்தக் கொதிப்பை அதிகமாக்குவது உங்கள் நோக்கம் எனில் தொடர்ந்து செய்யுங்கள்.  உங்களுக்குக் கடவுள் அதற்கான பரிசை அளிப்பான்.  முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதை நான் நம்புகிறேன்.  என் மகன் வயது கூட இல்லாத நீங்கள் ஒருவனைத் துன்புறுத்தி அதன் மூலம் இன்பம் அடைய நினைக்கிறீர்கள்.  உங்களுக்குக் கிடைக்கக் கூடிய தண்டனை உங்களால் தாங்கக் கூடியதாக இருக்கட்டும் என்று மட்டும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.  தண்டனையே வேண்டாம் எனப் பிரார்த்திப்பதே ஆகச் சிறந்தது.   ஆனால் இயற்கை விதியை யாராலும் மாற்ற முடியாது. எனவே தான் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய தண்டனை உங்களால் தாங்கக் கூடியதாக இருக்கட்டும் என்று வேண்டுகிறேன்.  இனி உங்களுக்கு என்னிடமிருந்து பதில் இல்லை.  நீங்கள் உங்கள் கொலை முயற்சியைத் தொடர்ந்து செய்யலாம்.  பதில் எழுதாவிட்டாலும் படிப்பேன் என்ற உறுதியை மட்டும் உங்களுக்கு  அளிக்கிறேன்.  ரத்தக் கொதிப்பு அதிகமாகி என் தாயாரின் காதுகளிலிருந்தும் மூக்கிலிருந்தும் ரத்தம் வழிந்து செத்த காட்சி எனக்கு ஞாபகம் வருகிறது.  எனக்கும் அதே போன்ற ஒரு நிலை வர வேண்டும் என்று நீங்கள் விரும்பிச் செய்யும் காரியத்தைப் பற்றி நான் என்ன சொல்ல?  என் மரணம் உங்கள் மூலம் நடக்கும் எனில் யார் அதைத் தடுக்க முடியும் விவேக்?  உங்களுக்காகப் பிரார்த்திக்கிறேன்…
மேலே தலைப்பில் தெருநாய் என்று கூறியிருப்பது நான் தான்.  ஏனெனில் உளன் எனில் உளன்.  இலன் எனில் இலன்.  என் அன்பார்ந்த வாசகர்களுக்கு நான் ஜென் குரு.  உங்களுக்குத் தெரு நாய்.  எந்தப் பிரச்சினையும் இல்லை எனக்கு.

Comments are closed.