அன்பின் ஒளி…

இன்று என் நண்பர் ஒருவர் ஃபோனில் அழைத்தார். அவர் பற்றிய எந்தக் குறிப்பைக் கொடுத்தாலும் அவர் யார் எனக் கண்டு பிடித்து விடுவீர்கள். அதனால் கொஞ்ச நாளைக்கு அப்படியே விடுகிறேன்.

அன்பு நாவல் பாதி வந்திருக்கிறேன் என்று சொல்லி விட்டு அது பற்றி நிறைய பேசினார். அதையெல்லாம் பதிவு செய்து வெளியிட்டாலே நாவலுக்கு நல்ல மதிப்புரையாக இருக்குமே என நினைத்தேன். இதையெல்லாம் எழுதுங்களேன் என்று லஜ்ஜையின்றி குறிப்பிட்டேன். நிச்சயம் என்றார். இந்த ஒட்டு மொத்த உரையாடலிலும் அவர் சொன்ன ஒரு வார்த்தை இதுவரை அன்பு பற்றி யாரும் சொல்லாதது. இப்படி ஒரு நாவலை யார் எழுதியிருந்தாலும் அதில் ஒரு வெறுப்புணர்வு இருந்தே தீரும். ஆனால் இந்த நாவலில் அன்பின் ஒளி மட்டுமே தெரிகிறது.

இது போதும். அன்பு எழுதிய வலியைக் கடந்து விட்டேன். வளன் அரசுவுக்குப் பிறகு இன்று கிடைத்த இந்த வார்த்தைகள் எனக்கு மிகப் பெரிய பரிசு.

சரி, அன்புக்கு எதிராக எழுதப்பட்ட ஒரு நாவலில் எப்படி அன்பின் ஒளி தெரியும்? அநேகமாக இதன் பதிலை ஏப்ரல் கடைசி வாரத்தில் துபையில் வெளியிடுவேன். அங்கே அப்போது ஒரு சந்திப்பு இருக்கிறது.