பொறாமை – 3

NFT மூலம் புத்தகங்களைத் தயாரிக்க – அதாவது, அராத்து செய்திருக்கும் தரத்தில் – இரண்டு லட்சம் ரூபாய் ஆகும். நான் எழுதியிருந்தபடி ஐம்பதாயிரம் என்பது தப்புக் கணக்கு. வேலை செய்து கொடுப்பவர்களெல்லாம் நெருங்கிய நண்பர்கள் என்பதால் நான்கில் ஒரு மடங்கு பணத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். மேலும், இந்த டிஜிட்டல் நூலை இலக்கியம் தெரியாதவர்கள் இந்த அளவுக்குத் தரமாக உருவாக்க இயலாது. உதாரணமாக, இதன் இசையமைப்பாளர் சத்ய நாராயணாவிடம் இதன் இசை பற்றி நான்கு மணி நேரம் உரையாடியிருக்கிறார். ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒவ்வொரு விதமாக இசையைத் தர வேண்டும். அதுவும் நாற்பது ஐம்பது நொடிகளுக்கு. அதேதான் லேஅவ்ட் விஷயத்துக்கும்.

என்.எஃப்.டி. என்றால் என்ன? சுருக்கமாகச் சொன்னால், டிஜிட்டல் அஸெட். விளக்கமாகக் கீழே:

Non-fungible tokens, often referred to as NFTs, are blockchain-based tokens that each represent a unique asset like a piece of art, digital content, or media. An NFT can be thought of as an irrevocable digital certificate of ownership and authenticity for a given asset, whether digital or physical.

இன்னொரு ஆச்சரியம், பத்தாயிரம் ரூபாய் கொடுத்து அராத்துவின் நோ டைம் டு ஃபக் நூலை வாங்குபவர்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினர். ஒருத்தர் கூட மேட்டுக்குடி அல்ல. இது என்னுடைய பலநாள் அவதானத்தை நிரூபணம் செய்கிறது. மேட்டுக்குடியினர் ஆக மோசமான ஃபிலிஸ்டைன் வர்க்கம்.