அன்புள்ள லிங்குசாமிக்கு…

அன்புள்ள லிங்குசாமிக்கு…

கர்னாடக சங்கீதத்தை அவமானப்படுத்தும் காட்சியை நீக்கி விட்டீர்கள் என்று கேள்விப்பட்டேன்.  ஆனாலும் நீங்கள் செய்த பாவத்துக்கு விமோசனம் கிடைக்காது.  படம் ஊற்றிக் கொண்டு விட்டது என்பதால் அந்தக் காட்சியை எடுத்திருக்கிறீர்கள்.  படம் ஹிட்டாகி இருந்தால் அந்தக் காட்சி இருந்திருக்கும் இல்லையா?  எனவே என்னுடைய விமர்சனமும் தொடரும்.

நீங்கள் செய்த பாவத்துக்கு மன்னிப்புக் கேட்டுப் பயனில்லை.  அதெல்லாம் பொய் மன்னிப்பு.  எது உண்மையான மன்னிப்பு என்றால் மனமுருகி மும்மூர்த்திகளிடமும் மன்னிப்புக் கேளுங்கள்.  இல்லையேல் அது உங்களுடைய பாவக் கணக்கில் சேரும்.  இந்த ஜென்மத்திலேயே அதற்கான பலனும் உங்களை வந்து சேரும்.  என்ன செய்யலாம் என்று நான் சொல்லுகிறேன்.  நான் கொடுக்கும் இணைப்புகளைக் கேட்டு மனமுருகி மன்னிப்புக் கேளுங்கள்.  எனக்கு காவலம் ஸ்ரீகுமார் என்ற பாடகர் ரொம்பப் பிடித்தவர். முத்துஸ்வாமி தீட்சிதரின் ஸ்வாமிநாத பரிபாலயா என்ற பாடலை அவர் பாடியிருக்கிறார்.  அதைக் கேளுங்கள்.  பிறகு ஜி. என். பாலசுப்ரமணியனின் ஸ்வாமிநாத பரிபாலயாவையும் கேளுங்கள்.  ஜி.என்.பி. பாடியிருப்பது கடவுளே நேரில் வந்து பாடியிருப்பது போல் இருக்கும்.  ஸ்ரீகுமார் ஒரு சினிமாப் பாடகரின் பாடலைப் போல் இருக்கும்.  ஒரே பாடல்தான்.  ஆனால் எத்தனை பெரிய வித்தியாசம்.  பிறகு இதே பாடலை ஹரிசரனும் பென்னட் குழுவும் மேற்கத்திய பாணியில் பாடியிருப்பதைக் கேளுங்கள்…

காவலம் ஸ்ரீகுமார்

https://www.youtube.com/watch?v=N1EB8CmjQ-U

 

 

ஜி. என். பாலசுப்ரமணியன்

https://www.youtube.com/watch?v=j1t8BYA7CvQ

 

மேற்கத்திய முறையில்…

https://www.youtube.com/watch?v=RKYYv_3WNB0

 

 

Comments are closed.