ஹா ஹா ஹா ஹா… (5)

சமகால இலக்கியத்தைப் படிக்க நான் ரொம்பவே தயங்குகிறேன்.  காரணம், சி.சு. செல்லப்பா, க.நா.சு., தி.ஜானகிராமன், தி.ஜ.ரங்கநாதன், எம்.வி. வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு, லா.ச.ரா., ந. பிச்சமூர்த்தி, மௌனி, வ.ரா. போன்று எழுத்தே உயிர் மூச்சு என்று எழுதும் எழுத்தாளர்கள் இன்றைய இலக்கியத்தில் கம்மி.  எனக்குத் தெரிந்து அப்படி ஒருசிலரே உளர்.  ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், கோணங்கி, தேவதச்சன், தேவதேவன் போன்ற ஒருசிலரை மட்டுமே சொல்ல முடிகிறது.  அதிலும் சிலருடைய எழுத்து பிடிக்க மாட்டேன் என்கிறது.  தவறு என் வாசிப்புத் தேர்வின் மீதுதானே தவிர அவர்கள் மீது அல்ல.  இந்த நிலையில் தற்காலத்தில் சிலர் வரலாற்று ஆவணங்களைச் சுட்டு நாவல் எழுதுகிறார்கள்.  எஸ். ரா. இதுவரை யாரையுமே விமர்சித்து எழுதியதில்லை.  அது அவருடைய இயல்புக்கு மாறானது.  மிகவும் சாத்வீகமானவர்.  அவரே இந்த நாவலைக் கிழி கிழி என்று கிழித்திருக்கிறார். அப்புறம் எதற்கு நான் இந்தக் கருமத்தை எல்லாம் படிக்க வேண்டும்?

http://www.sramakrishnan.com/?p=505 – part 1
http://www.sramakrishnan.com/?p=506 – part 2

Comments are closed.