ஹா ஹா ஹா ஹா… (4)

சுந்தரத்துக்கும் எனக்குமான நண்பர் ஒருவர் என்னை அழைத்து உங்கள் கேள்விகளுக்கெல்லாம் சுந்தரத்திடம் பதில்கள் உள்ளன என்றும் உங்கள் மீதுள்ள மரியாதையின் நிமித்தமே பதில் எழுதவில்லை என்றும் சுந்தரம் சொன்னதாக சொன்னார்.  மை டியர் சுந்தரம்…  அங்கே பெங்களூர் சந்திப்பில் உங்களையும் உங்களுடைய அடியாளையும் தவிர நாங்கள் ஐந்து பேர் இருந்தோம்.  இதுவரை உதவியாளர் என்று எழுதி விட்டு இப்போது ஏன் அடியாள் என்று எழுதுகிறேன் என்றால், பேசும் போது எனக்குக் கைகளை நீட்டி அபிநயித்துப் பேசுவதுதான் பழக்கம்.  நீங்கள் மணிக் கணக்கில் லெக்சர் அடித்துக் கொண்டிருந்த போது குறுக்கே பேசுவதன் பொருட்டு ஒரு நிமிஷம் சுந்தரம் என்று கையை உயர்த்தி என் ஆள்காட்டி விரலை நீட்டிய போது உங்கள் அடியாள் என் விரலை மடித்து என் தொடையில் வைத்தது என் வாழ்விலேயே மறக்க முடியாத பச்சை அயோக்கியத்தனம்.  நீங்கள் ஜெயமோகனின் தீவிர வாசகர் என்றும் ஜெயமோகனையே உங்கள் குரு என்றும் பொதுவெளியில் சொல்லிக் கொள்கிறீர்கள்.  ஜெயமோகனிடம் உங்களுடைய ஒரு அல்லக்கையை அழைத்துக் கொண்டு போய் இப்படி உங்களால் செய்ய முடியுமா?  ஜெயமோகனிடம் போய் உங்களால் இப்படி மணிக்கணக்கில் எவனையும் பேச விடாமல் லெக்சர் கொடுக்க முடியுமா?  யாராவது குறுக்கே பேசினால், “நான் ஒரு கெஸ்ட்…  இங்கே எனக்குப் பேச அனுமதி இல்லாவிட்டால் இப்போதே ஃப்ளைட் பிடித்து சென்னைக்குப் போய் விடுவேன்.  நான் born rich… ஒரே நாளில் மூன்று முறை ஃப்ளைட்டில் போனவன்” என்றெல்லாம் பேச முடியுமா?  விளக்குமாற்றால் அடி கிடைக்கும் அங்கே.  நாங்கள் பொறுத்துக் கொண்டோம்.  எனக்காக என் நண்பர்கள் பொறுத்துக் கொண்டார்கள்.  நான் எப்போதுமே சமத்துவம் பேசுபவன்.  அதற்காக உங்களுடைய அடிப்பொடிகளையும் அழைத்து வந்து என்னை assfuck பண்ணுவீர்களா?  நானும் தொடர்ந்து பார்க்கிறேன்.  நமக்குக் கீழ்நிலையில் வாழ்பவர்களின் தோளில் கை போட்டால் சூத்தைக் காண்பி என்கிறார்கள்.  என்னய்யா இது நியாயம்?  கை நீட்டிப் பேசினால் உங்கள் அல்லக்கை என் கையை மடக்கி என் பாக்கெட்டில் வைக்கிறார்.  யார் கொடுத்த திமிர் இது?  என் நண்பர்கள் அப்போதே அந்த அல்லக்கையை செருப்பால்  அடித்து விரட்டாமல் விட்டதற்காக நான் அவர்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறேன்.

சுந்தரம், நான் கேட்கிறேன்.  இயக்குனர் ஷங்கரைப் பார்க்கப் போகிறீர்கள்.  நீங்கள் சினிமாத் துறையில் இருப்பதால் இந்தக் கேள்வி.  ஷங்கரிடம் நீங்கள் உரையாடிக் கொண்டிருக்கும் போது உங்கள் உதவியாளர் ஷங்கரின் கையைப் பிடித்து அவருடைய பேண்ட் பாக்கெட்டில் வைப்பாரா?  வைக்க அனுமதிப்பீர்களா?  அப்புறம் எழுத்தாளன் என்றால் மட்டும் ஏன் இந்தக் கயவாளித்தனத்தை செய்கிறீர்கள்?  எழுத்தாளன் என்றால் கேணப்பயலா?  என் கோபம் எல்லாம் உங்களுடைய உதவியாளர் மீது அல்ல.  உங்கள் மீதுதான்.  நீங்களெல்லாம் உங்கள் உதவியாளர்களுக்கு ஊதியம் தருவதில்லை.  இப்படி எங்களைப் போன்ற பிரபலங்களைச் சந்திக்கும் போது எங்களுக்குச் சமமாக அந்த ஆட்களையும் அமர வைத்து எங்கள் செலவில் சரக்கு சப்ளை செய்கிறீர்கள் அல்லவா?  அதுதான் நீங்கள் அவர்களுக்குத் தரும் ஊதியம்.  அதாவது, எங்களை assfuck செய்து அவர்களுக்கு நல்லது செய்கிறீர்கள்!  இதனால் அவர்களுக்கும் கெட்ட பெயர்.  எனக்குப் பக்கத்தில் அமர உங்கள் உதவியாளருக்கு என்ன தகுதி இருக்கிறது, சொல்லுங்கள்?  தகுதி எதுவும் இல்லாததால்தான் உங்களுடைய அடியாளாகச் செயல்பட்டு என் கையை மடக்கி என் தொடையில் வைத்தார்.  அந்தச் சிறுவனுக்குத் தெரியாது நீங்களே என் புதல்வன் ஸ்தானத்தில் இருப்பவர் என்று. அதனால்தான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறேன் உங்களுடைய உற்றம் சுற்றம் யாரையும் அழைத்துக் கொண்டு என்னைச் சந்திக்க வராதீர்கள் என்று.

சுந்தரம்… நீங்கள் இலக்கிய வாசிப்பிலிருந்தும் எழுத்திலிருந்தும் ஒரு கடுகளவு கூட கற்றுக் கொள்ளவில்லை என்று எனக்குத் தெரிந்து விட்டது.  இனிமேல் கற்கக் கூடிய சாத்தியமும் இல்லை.  சொல்கிறேன்.  ஈரோடு ஸ்ரீதர் ஈரோட்டில் ஒரு பிரபல ஆடிட்டர்.  நிறைய வாசிப்பார்.  ஆனால் எதுவும் எழுதியதில்லை.  அவரை இழக்க விரும்பாத காரணத்தால் அவரை நான் எழுதவும் ஊக்குவிக்கவில்லை.  வாசகர் வட்டத்தின் உள் குழுவைச் சேர்ந்தவர்.  நாங்கள் ஈரோடு சென்றால் எங்கள் தங்குமிடம், சாப்பாடுச் செலவு, இன்னொரு செலவு எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வது அவரும் ரமேஷும்தான்.  எனவே அவர் எந்த முன் அறிவிப்பும் இன்றி எந்த வாசகர் கூட்டத்துக்கும் வர அவருக்கு அனுமதி உண்டு.  அப்படிப்பட்டவர் நான் பெங்களூர் போகிறேன் என்றதும் அராத்துவுக்கு ஃபோன் செய்து நானும் வரலாமா என்று அனுமதி கேட்டிருக்கிறார்.  உடனே அராத்து, ”என்ன ஸ்ரீதர்… நீங்கள்ளாம் இப்படிக் கேட்டுக்கிட்டு?” என்று கண்டித்திருக்கிறார்.  அதற்கும் ஸ்ரீதர் விடாமல், “இல்லீங்க அராத்து… உங்க வீடு சின்னதா இருந்து மத்தவங்களுக்குப் பிரச்சினை ஆய்டக் கூடாதுல்ல?  அதனால்தான் கேட்கிறேன்” என்று சொல்கிறார்.  அதற்கும் அராத்து, “அட வாங்க ஸ்ரீதர்… இடம் இல்லாட்டா வெளில தெருவுல போய்ப் படுத்துக்குவோம்” என்று அராத்து சொன்ன பிறகுதான் ஈரோட்டிலிருந்து புறப்பட்டு வந்திருக்கிறார்.  இந்த நாகரீகம், பண்பு உங்களுக்கு ஏன் இல்லாமல் போய் விட்டது சுந்தரம்?  எழுத்து கொடுத்த திமிர் தானே?  ஸ்ரீதர் வெறும் வாசகர்.  அவருக்குத் தெரிந்த பண்பாடு உங்களுக்கு ஏன் தெரியவில்லை?  யாரிடம் கேட்டுக் கொண்டு உங்கள் உதவியாளரை அழைத்து வந்தீர்கள்?  வந்தவராவது ஒழுங்காக நடந்து கொண்டாரா என்றால் இல்லை.  அது அவருடைய தவறு இல்லை.  அவருக்கு அவ்வளவுதான் தெரியும்.

என்ன பிரச்சினை என்றால்…  ஒரு பிரபல இயக்குனரோடு (கௌதம் இல்லை) மூணார் போயிருந்தேன்.  ஒரு ஆண்டு இருக்கும்.  கதை விவாதம் இல்லை.  நானும் அராத்துவும் ஸ்ரீதரும் ரமேஷும் மூணார் சென்ற போது இயக்குனரிடம் நீங்களும் வருகிறீர்களா என்று கேட்டேன்.  அவரும் வந்தார். ஆனால் உதவியாளருடன் வந்தார்.  அந்த உதவியாளர் எங்களை என்ன பாடு படுத்தினார் தெரியுமா?  டிரைவரை மட்டும் அறை போட்டுக் கொடுத்துத் தனியாக அனுப்பி விடும் நீங்களெல்லாம் உங்கள் உதவியாளரை மட்டும் என்னைப் போன்றவர்களோடு பழகவிடும் தந்திரம் என்ன தெரியுமா?  அவர்களுக்கு நீங்களெல்லாம் ஊதியம் தருவதில்லை.  அவர்களுக்கான ஊதியம் சாரு நிவேதிதா போன்றவர்களோடு சரி சமானமாக அமர்ந்து தண்ணி அடிப்பது.  அராத்து போன்றவர்கள் துபாயிலிருந்து வரவழைத்துக் குடிக்கும் 555 சிகரெட்டை அனுமதி இல்லாமல் எடுத்துக் குடித்துக் காலி பண்ணுவது…  இயக்குனோடு கூட வந்த அந்த ”உதவி” என்ன பண்ணியது தெரியுமா?  ஆரண்ய காண்டம் படத்தின் கதையை அரை மணி நேரம் விளக்கியது.  இயக்குனர் மூடிக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார்.  எப்படிப் பேசுவார்?  அதுதானே அவர் அந்த உதவியாளருக்குக் கொடுக்கும் சம்பளம்?  அப்புறம் அராத்துதான் குறுக்கே புகுந்து போதும் சார் நிறுத்துங்க நாங்க அல்லாரும் ஆரண்ய காண்டம் பார்த்து இருக்கோம் என்று வன்முறையைப் பிரயோகித்து நிறுத்தினார்.

சரி, சுந்தரம்…   எதுவுமே எழுதாத, சாரு நிவேதிதா என்ற எழுத்தாளனைத் தவிர வேறு யாரையுமே படிக்காத ஒரு சராசரியான ஸ்ரீதருக்கு இருக்கும் பண்பு உங்களுக்கு ஏன் இல்லை?  ஸ்ரீதர் தான் வருவது பற்றி அவ்வளவு தூரம் அராத்துவிடம் கேட்டிருக்கிறார்.  நீங்களோ உங்கள் உதவியாளரை எந்தப் பிரச்சினையும் இன்றி அழைத்து வருகிறீர்கள்.   சரி, வந்த பிறகும் ஸ்ரீதர் பேசவே இல்லை.  பேசுவதற்கு நீங்கள் இடம் கொடுக்கவே இல்லை.  ராஜேஷ் பேச முடியவில்லை.  கோபால் பேச முடியவில்லை.  அட, நான் கூடப் பேச முடியவில்லை.  உங்கள் பேச்சைக் கேட்பதற்கா நாங்கள் இவ்வளவு செலவு செய்து பெங்களூரில் கூடியிருக்கிறோம்?  அப்படிப்பட்ட பருப்பா நீங்கள்?

உங்கள் வன்முறையும் அராஜகமும் தாங்க முடியாமல் கடைசியாக நான் இனிமேல் நான் உங்களைப் பார்க்கக் கூடாது; இந்தக் கணமே கடைசி என்று சொன்னதும் நீங்கள் உடனே உதவியாளரை அழைத்துக் கொண்டு வெளியேறி விட்டீர்கள்.  நான் சண்டை போடவில்லை.  கத்தவில்லை.  சாத்வீகமாகச் சொன்னேன்.  மறுநாள் நான் ராஜேஷிடமும் அராத்துவிடமும் கோபாலிடமும் ஸ்ரீதரிடமும் சொன்னேன்… நான் சுந்தரமாக இருந்து சாரு என்ற எழுத்தாளர் அப்படிச் சொல்லியிருந்தால் நான் என்ன செய்திருப்பேன் தெரியுமா?  நால்வரும் ஆர்வத்துடன் என்னைப் பார்த்தார்கள்.  “சாரு… ஏதோ என்னை அறியாமல் தவறு நடந்து விட்டது.  இந்த ஒருமுறை மன்னியுங்கள்.  இனிமேல் நான் வாயே திறக்க மாட்டேன்” என்று மன்னிப்புக் கேட்டு விட்டு அங்கேயே அமர்ந்திருப்பேன் என்றேன்.  ஆனால் நீங்களோ உங்களைக் கண்டே பயந்து போய் ஓடி விட்டீர்கள்.  நான் செய்தது என்ன தெரியுமா?  ஒரு ஆளுயர ஆடியை எடுத்து உங்கள் முன்னே காண்பித்தேன்.  உங்களைக் கண்டு நீங்களே பயந்து போனீர்கள்.  இன்னொரு சாத்தியமும் இருந்தது.  நான் நால்வரிடமும் சொன்னேன்.  அல்லது, சாரு அப்படிச் சொன்னதும் வாயே திறக்காமல் ஒரு அறையில் போய்ப் படுத்திருப்பேன்.  மறுநாள் காலையில் சாருவிடம் சென்று, “மன்னியுங்கள்…  இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்.  இன்னும் ஒரே ஒரு வாய்ப்புத் தாருங்கள்” என்று கேட்டிருப்பேன்.  உங்கள் ஈகோ இடம் கொடுக்கவில்லை சுந்தரம்.  நீங்கள் அகந்தையினால் மட்டுமே கட்டமைக்கப்பட்டிருக்கிறீர்கள்.  முதல் முறை நான் உங்களிடம் பேசும் போது நீங்கள் என்ன சொன்னீர்கள்?  ஞாபகம் உண்டா?  ”சாரு, நீங்கள் என் தந்தை.”  இது உங்கள் வார்த்தை.  இதைக் கேட்டு விட்டுத்தான் அராத்துவிடம் சொன்னேன், சுந்தரம் ஒரு அற்புதன் என்று.  ஆனால் கடைசியில்தான் தெரிந்தது, நீங்கள் பேசுவது மு.கருணாநிதி பேசுவதைப் போன்ற வாய்ஜாலம் என்று.  உன் தந்தையிடம் மன்னிப்புக் கேட்பதில் உனக்கு என்ன பிரச்சினை சுந்தரம்?

தந்தை என்றதும் நீ வா என்று வந்து விட்டது. மன்னியுங்கள் சுந்தரம்.  இன்னொரு முக்கியமான விஷயம் சொல்கிறேன். கேளுங்கள்.  எங்கள் வாசகர் வட்டத்திலும் இப்படி சில சமயங்களில் நடந்து விடும்.  இதே வார்த்தைகளைத்தான் சொல்வேன்.  சம்பந்தப்பட்டவர் உங்களைப் போல் ஓடி விட மாட்டார்.  வாயை மூடிக் கொண்டு ஒரு மூலையில் படுத்து உறங்கி விடுவார்.  காலையில் எழுந்து வணக்கம் சாரு, சாரி சாரு என்றால் என்னங்க லூசா இருக்கீங்க… நேத்து கதை நேத்தோட போச்சு என்பேன் ஒரு குழந்தையைப் போல.  அப்படிப்பட்ட மனிதர்கள் யாரும் எழுத்தாளர்கள் இல்லை.  நீங்கள் எழுத்தாளர்.  அப்படியென்றால், சாமான்ய மனிதனிடம் இருக்கும் சென்ஸிபிலிட்டி எழுத்தாளனுக்கு ஏன் இல்லை?  இதே கேள்வியைத்தான் நான் முப்பது ஆண்டுகளாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.  ஒரு சாமான்ய மனிதரான ஸ்ரீதருக்கு இருக்கும் சென்ஸிபிலிட்டி எழுத்தாளரான உங்களுக்கு ஏன் இல்லை சுந்தரம்?

முக்கியமான விஷயம் பணம்.  ஒரு சந்திப்பு என்றால் பணம் அத்தியாவசியம்.  நீங்கள் உறங்கி விட்டீர்கள்.  பிறகு எழுந்தீர்கள்.  உங்கள் உதவியாளரிடம் என்ன செலவு ஆயிற்று என்று கேட்டு, உங்களுக்கான செலவை நான் கொடுத்திருக்கிறேன் என்பதை அறிந்து அந்தப் பணத்தை என்னிடம் கொடுத்திருக்க வேண்டாமா?  இது உங்கள் கடமை இல்லையா?   நீங்கள் கொடுக்கவில்லை.  உங்கள் உதவியாளர் தண்ணியடிப்பதற்காக நான் 1000 ரூ கொடுத்தேன்.  இதைத்தான் பல காலமும் சொல்லி வருகிறேன்.  ஒரு குருட்டுப் பிச்சைக்காரனிடம் பிக்பாக்கெட் அடிப்பது போல் என்னிடமிருந்து பணம் பிடுங்குகிறார்கள் என்று.

இன்னொரு எழுத்தாளரை மிகவும் சிலாகித்து வட்டத்துக்கு அழைத்துப் போனேன்.  எல்லோரும் கிலி பிடித்து ஓடி விட்டார்கள்.  உலகத்தில் உள்ள அவ்வளவு திமிரும் தடித்தனமும் அகந்தையும் அந்த எழுத்தாளரைப் பீடித்திருந்தது.  பெயர் முருகேசன் என்று வைத்துக் கொள்ளலாம்.  சரி, ஒன்பது மணி அளவில் சாப்பாடு வந்தது.  ஆயிரம் ரூபாய் பில்.  அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள் தெரியுமா?  நாங்கள் ஐந்து பேர் கவனித்துக் கொண்டிருந்தோம்.  பாக்கெட்டிலிருந்து பர்ஸை எடுப்பது போல் பாவனை செய்தீர்கள்.  பார்த்துக் கொண்டே இருந்தோம்.  பாவனை செய்து கொண்டே இருந்தீர்கள்.  பிறகு அராத்து கொடுத்தார்.  பிறகுதான் பர்ஸை எடுத்து அந்த ஆயிரம் ரூபாயை அராத்துவிடம் கொடுப்பதற்கு என்ன ஐயா?  எனக்கு உங்கள் மீது கோபம் இல்லை சுந்தரம்.  அதனால்தான் பெயர் மாற்றி எழுதுகிறேன்.  ஆனால் உங்களைப் போன்ற மலினமான ஆட்களை நான் குமாஸ்தாவாக வாழ்ந்து கொண்டிருந்த போது சக குமாஸ்தாக்களிடம்தான் பார்த்திருக்கிறேன்.  அது கூட ஒரு சிலர்தான்.  அதிகம் இல்லை.  இப்படிப்பட்ட மலினமான ஆட்கள் ஒரு ஓட்டலுக்குப் போகும் போது பில் கொடுக்கும் தருணத்தில் கை கழுவப் போய் விடுவார்கள்.  எங்கள் வாசகர் வட்டத்தில் ஒரு ஆள் கூட உங்களைப் போல் இல்லை என்பதை மிகப் பெருமிதத்துடன் சொல்லிக் கொள்கிறேன்.  ஏழ்மையில் வாழும் சில நண்பர்கள் உண்டு… அவர்கள் வந்ததுமே சொல்லி விடுவார்கள்… என்னிடம் பணம் இல்லை என்று.  அது பிரச்சினையே இல்லை.  ஆனால் born rich என்று மமதைப் பேச்சு பேசி விட்டு சரக்குக்கும் சாப்பாட்டுக்கும் காசு கொடுக்காமல் பர்ஸை எடுப்பது போல் பாவலா செய்கிறீர்கள் அல்லவா, உங்களைப் போன்றவர்களுக்கு விடிவே இல்லை?

ஆனாலும் ஊரில் உங்களை ஒரு தாதா என்று அழைக்கிறார்களே ஏன் தெரியுமா?  அதுவும் எனக்குத் தெரியும்.  எழுத்தாளர்கள் கூடிப் பேச, குடிக்க இன்று சென்னையில் இடமே இல்லை.  ஓட்டலில் கூட அறை எடுக்க முடியாது.  ரெண்டு பேருக்கு மேல் தங்க முடியாது என்று சட்டம் பேசுவான்.  ஆனால் உங்கள் வீட்டில் பத்து பேருக்குக் கூட இடம் உண்டு.  அது ஒன்றுதான் நீங்கள் சென்னையின் இலக்கிய தாதாவாக உலவ காரணமாக இருக்கிறது.

அராத்து, செல்வா, மற்றும் நண்பர்களுக்கு… நமக்கும் சென்னையில் ஒரு நிரந்தரத் தங்குமிடம் ஏற்பாடு செய்யுங்கள்.  செலவுதான்.  என்ன செய்வது?  இது போன்ற ஆட்களிடம் மாட்டிக் கொண்டு அல்லாட வேண்டியிருக்கிறது. ப்ளீஸ்…  இது பற்றி யோசியுங்கள்.

சுந்தரம் கதை முடிந்து விட்டது.  அடுத்து கொத்தரங்காய் என்ற எழுத்தாளரின் கதை ஆரம்பமாகும்…  அது இன்னும் அதகளமாய் இருக்கும்.  ஏனென்றால், சுந்தரம் அவ்வளவு கெட்டவர் அல்ல.  அவருடைய அகந்தைதான் அவருடைய சத்ரு.  ஆனால் கொத்தரங்காய் மகா கொடூரன்.  தன்னுடைய தகப்பனையே புதைகுழி தோண்டி உயிரோடு புதைக்கும் பாத்திரமாக வருவாரே தனுஷ்… புதுப்பேட்டையா அந்தப் படம்.  அதே ஆள்தான் கொத்தரங்காய்.  அவன் என்னிடம் வந்து தன் கை வரிசையைக் காட்டினான்.  நான் எப்படிப்பட்ட ஆள் என்றால், குழந்தைக்குக் குழந்தை.  கொத்தரங்காய்க்குக் கொத்தரங்காய்.  தகப்பனுக்கா குழி நோண்டுகிறாய் என்று அதே குழியில் குழி தோண்ட வைத்தவனைப் புதைத்து விடுவேன்.  ங்கொக்கா மக்கா… என்னிடமா வந்து உன் வேலையைக் காட்டுகிறாய்?  அடுத்த கட்டுரை கொத்தரங்காய்.

Comments are closed.