க்றிஸ்டோஃபர் நோலனின் கற்பனையும் சிருஷ்டித்தன்மையும் வறண்டு விட்டது, அவர் இப்போது ஒரு ‘ஹாலிவுட்’ இயக்குனர் ஆகி விட்டார், பழைய நோலன் இப்போது இல்லை என்பது போன்ற விமர்சனங்கள் உண்டு. அந்த மாதிரி நினைத்துத்தான் இண்டர்ஸ்டெல்லாரைப் பார்த்தேன்.
பார்த்த பிறகு நோலனின் படங்களிலேயே இதுதான் ஆகச் சிறந்தது என்ற முடிவுக்கு வந்தேன். அது மட்டும் அல்லாமல், உலகின் மிகச் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று என்பது என் கருத்து. விரிவாக இது பற்றி எழுத எனக்கு நேரம் இல்லை. அதற்கு நான் முதலில் இந்தப் படத்தின் வசனத்தை முழுசாகப் படிக்க வேண்டும். தந்தை மகள் உறவு பற்றி எத்தனையோ படங்கள், நாவல்கள் உண்டு. ஏன், ஸீரோ டிகிரியே அப்படித்தான். அதெல்லாம் இந்தப் படத்துக்கு முன்னால் ஒன்றுமே இல்லை. போர்ஹேஸ் நாவல் எழுதவில்லை. அப்படி அவர் எழுதியிருந்தால், அதை நோலன் படமாக்கி இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது இண்டர்ஸ்டெல்லார். க்றிஸ்டோஃபர் நோலன் சந்தேகமே இல்லாமல் ஒரு ஜீனியஸ். படத்தில் ஒரு வசனம் வருகிறது, காலத்தையும் வெளியையும் எப்படிக் கடப்பது என்று. அதற்கு நோலன் கண்டு பிடித்த சிருஷ்டிகரமான, கவித்துவமான பதில்தான் இண்டர்ஸ்டெல்லார்.
பாராட்ட எனக்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை. கடவுளை தரிசித்தது போல் வாய் மூடிக் கிடக்கிறேன்.
படத்தைப் பற்றி அக்குவேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து என் கருத்துக்கு எதிர்க் கருத்தை நிறுவி இருக்கிறார் ராஜேஷ். அவரோடு இதைப் பற்றி விவாதிக்கவும் எனக்கு நேரம் இல்லை. நீங்களே படத்தைப் பார்த்து முடிவு செய்யுங்கள். ராஜேஷின் அலசல் லிங்க் கீழே:
http://karundhel.com/2014/11/interstellar-2014-english-an-analysis-part1.html
Comments are closed.