புதிய எக்ஸைல் விழா: பதிவுகள் (2)

Dear Charu,

Thanks for making today’s evening so wonderful and enjoyable. Everyone was on the stage spoke very well, in particular Mr.Tharun and Mr.Amirdham Surya.

I was thinking the pre-ordered book would have been delivered today, so i will read the book tonight. Sadly it wasn’t delivered yet. If I know I would have bought another book in Arangam today. Now i will wait till tomorrow to read The Exile.

Looking forward to to see many more books from you Charu.

Take some rest and it is time for readers like me to read your writing and get some enlightenment.

All the best.
Cheers
Siva

டியர் சிவா,

முன் பதிவுத் திட்டம் என்றால் அது விழா நடப்பதற்கு மூன்று தினங்கள் முன்பாகவே சேர்ந்திருக்க வேண்டும்.  95 சதவிகித வாசகர்களுக்கு சனிக்கிழமை கிடைத்திருக்கும்.  மற்றவர்களுக்கு நேற்று கிடைத்திருக்கலாம்.   விழாவுக்கு வந்த சில நண்பர்கள் முன்பதிவுத் திட்டத்துக்குப் பணம் அனுப்பியும் புத்தகம் கிடைக்காமல் நேற்று விழாவுக்கு வந்தனர்.  அது கொஞ்சம் தர்மசங்கடமான நிலைமைதான்.  புத்தகம் கண் முன்னே இருந்தும் வாங்க முடியாத நிலை.   இனிமேல் என் புத்தகங்களுக்கு முன்பதிவுத் திட்டம் வைக்க நான் சிபாரிசு செய்ய மாட்டேன்.

இன்று உங்களுக்கு புத்தகம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

சாரு