புத்தகக் காட்சியில் சிற்றிரங்க விவாதத்தில் அடியேன்…

ஞாயிற்றுக் கிழமை 18ஆம் தேதி முன்மாலை 3.30 மணிக்கு புத்தகக் காட்சி சிற்றரங்கத்தில் வாசகர்களின் கேள்விகளுக்கு அடியேன் பதில் சொல்கிறேன்.  ஜனவரி 5 புதிய எக்ஸைல் விழாவின் போது நேரம் கிடைக்காத காரணத்தால் வாசகர்களுடனான கலந்துரையாடல் நடைபெற முடியாமல் போய் விட்டது.  நாளைய நிகழ்ச்சியை அந்தக் கலந்துரையாடலாக மாற்றுவோம்.

பொதுவாக இது போன்று நான் கலந்து கொண்டு பேசும்  நிகழ்ச்சிகளில் வாசகர் வட்ட நண்பர்கள் யாரும் கலந்து கொள்வதில்லை என்பதை கவனிக்கிறேன்.  கலந்து கொண்டால் எனக்கு ஒரு தார்மீக ஆதரவாக இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்…

புத்தகக் காட்சியில் சிற்றரங்கம் கிழக்கு மற்றும் காலச்சுவடு அரங்குகளுக்கு இடையே உள்ள வழிநடையைத் தாண்டியதும் உள்ளது.