அற்புதமான பணி!

சமீபமாக ஏன் எதுவும் எழுதவில்லை என்று பலரும் விசாரித்தனர்.  படித்துக் கொண்டிருக்கிறேன்.  சுமார் ஆயிரம் பக்கங்கள் எழுதுவதற்கான ‘பொருள்’ கைவசம் உள்ளது.  கொஞ்சம் கொஞ்சமாக எழுத வேண்டும்.  என் வாசிப்பின் ஊடாகக் கிடைத்த அற்புதங்கள் அநேகம்.  அதில் ஒன்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.  வியாசனின் பாரதத்தை நீங்கள் முழுமையாக தமிழில் வாசிக்க வேண்டுமானால் கீழ்க்காணும் இணையதளத்தைப் பாருங்கள்.   இந்த மகத்தான பணியைச் செய்து வரும் அருட்செல்வப் பேரரசனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும் அன்பும்.

http://mahabharatham.arasan.info/