இணையப் பிச்சைக்காரன் (1) & (3)

அவசரமாக எழுதியதில் சில விஷயங்கள் விடுபட்டு விட்டன.  முதலில் இணையப் பிச்சைக்காரன் (1) இணைப்பு.  இதோ அது:

http://www.jeyamohan.in/74493#.VTr1tCGqqko

நான் முடிவு செய்தால் பணத்தை வேறு வழிகளிலும் நிறையவே ஈட்ட முடியும்.  இரண்டு ஆண்டுகளுக்கு முன் – என் நெருங்கிய நண்பர் குமார் என்னைத் தன்னுடைய படத்தில் நடிக்க அழைத்தார்.  ஹீரோ இல்லை.  Anti-hero தான்.  அது நான்.  பச்சையாகச் சொன்னால் வில்லன்.  பூஜா இன்னொரு பாத்திரம்.  அழைப்பை மறுத்து விட்டேன்.  எக்ஸைல் எழுதுவதில் மும்முரமாக இருந்தேன்.  குமார் ஹாலிவுட்டில் இரண்டு படங்கள் இயக்கியவர்.  இரண்டு படங்களுமே அங்கே விருது பெற்றவை.  வேறு யாராக இருந்தாலும் ஓடிப் போய் நடித்திருப்பார்கள்.  எனக்குப் பணம் தேவைதான்; ஆனால் எழுத்தை விட முக்கியம் அல்ல.  பணத் தேவையே எழுத்துக்காகத்தானே? குமார் நட்பையே முறித்துக் கொண்டார்.  பிறகுதான் படம் வந்ததும் பார்த்தேன்.  கடவுள் தான் என்னைக் காப்பாற்றினார்.  13, 14 வயதுப் பெண்களைக் கடத்தி விற்கும் பாத்திரம் அது.  ஆனால் ஒரு ஆச்சரியம்.  என்னைப் போலவே உருவத் தோற்றம், நடை, உடை, பாவனை, பேசும் முறை எல்லாம்.  (உங்களை உருவகம் பண்ணித்தான் அந்தப் பாத்திரத்தையே உருவாக்கியிருக்கிறேன், நடிக்க மறுக்காதீர்கள் என்று குமார் நூறு முறை சொன்னதன் அர்த்தம் இதுதானோ?!)

உயிரைக் கொடுத்து எழுதுகிறேன் என்று நான் சொன்னால் அதை நீங்கள் வார்த்தைக்கு வார்த்தையாகவே அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.  நான் இரவில் கண் விழிக்கக் கூடாது.  உயிருக்கு ஹானி.  (கவலைப்படாதீர்கள்.  அசோகமித்திரன், கருணாநிதி, அன்பழகன் போல் எனக்கு ஆயுசு கெட்டி!) ஆனாலும் இப்போதெல்லாம் அவ்வப்போது இரவு முழுவதுமே கண் விழிக்க வேண்டியிருக்கிறது.  ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?  இரண்டு வாரத்துக்கு ஒருமுறை என்று எழுதலாம் அல்லவா? என்று கேட்டார் நண்பர்.  செய்யலாம்,  நாற்பது வயதாக இருந்தால்.  நான் சொன்னது நண்பருக்குப் புரியவில்லை.  புரியும்படிச் சொன்னேன்.  ஒருத்தருக்கு நாற்பது வயதில் தான் கல்யாணமே நடக்கிறது.  சாந்தி முகூர்த்தத்துக்கு நாளா பார்த்துக் கொண்டிருப்பான்?  அப்படித்தான் என் நிலையும்.  என் 62-ஆவது வயதில்தான் குரு பூஜையே செய்கிறேன்.  இதை எப்படி இரண்டு வாரத்துக்கு ஒரு முறை செய்ய முடியும்?  என் ஆசான்களை – என்னை உருவாக்கியவர்களை – என் முப்பதாவது வயதில் நான் அறிமுகம் செய்திருக்க வேண்டும்.  காலம் கடந்து செய்கிறேன்.  இதில் போய் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை, மாதம் ஒரு முறை என்ற தாமதம் எல்லாம் கூடாது.  62-ஆவது வயதில் வந்த வாய்ப்பைத் தவற விடலாமா?  இதெல்லாம் பணத்துக்காகச் செய்வதல்ல.  பணத்தையும் பொருளையும் தங்கள் வாழ்க்கையையும் உயிரையும் துச்சமாக மதித்து தியாக வாழ்க்கை வாழ்ந்த என் முன்னோடிகளைப் பற்றி நான் எழுதுவது என் ஆசான்களுக்கு நான் செய்யும் குருபூஜை.  அந்த வகையில் இதை எழுத எனக்கு வாய்ப்பளித்த தினமணி இதழுக்கு நான் நன்றிதான் சொல்ல வேண்டும்.

பயணத்துக்குக் காசு தேவை.  கோடிக் கணக்காக விளம்பரங்களுக்கு செலவு செய்யும் பத்திரிகைகள் கூட அதன் உள்ளடக்கம் பற்றிக் கவலைப்படவில்லை.  பத்திரிகைகள் தான் என் பயணச் செலவை ஏற்க வேண்டும்.  செய்யாததால் நானே இறங்கிச் செய்ய வேண்டியிருக்கிறது.

நேற்று ஒரு படம் பார்த்தேன்.  விளம்பர இடைவேளையில் ஒரு ஜவுளிக்கடை விளம்பரத்தில் பாரதிராஜா.  காமெடியனைப் பார்ப்பது போல் எல்லோரும் சிரித்தார்கள்.  யாராவது வேட்டி சட்டை போடும் போது தொண்டை வரை சட்டைக்கு பட்டன் போடுவார்களா?  டை கட்டும் போது அல்லவா அப்படி பட்டன் போடுவார்கள்?  அது ஒரு tragic comedy விளம்பரம்.  பாரதிராஜா என்ற சிம்மம் 80 வயதுக்கு மேல் சர்க்கஸ் செய்கிறது.  பணத்துக்காக ஒருபோதும் நான் அந்த வேலையைச் செய்ய மாட்டேன்.

Account holder’s Name: K. ARIVAZHAGAN

Axis Bank Account number: 911010057338057

Branch: Radhakrishnan Salai, Mylapore

IFSC UTIB0000006

MICR CODE: 600211002

***

ICICI ACCOUNT K. Arivazhagan,

ICICI Bank Account No. 602601505045

t.nagar branch, chennai 28.

FSC Code: ICIC0006026

MICR Code: 600229010

Comments are closed.